வியாழன், 26 மே, 2011

வௌவால்கள்...பூவரசியில்.புலனாய்வு., விசாரணை
மேல்முறையீடு ..
நீதியின் தாமதங்களால்
பாழடைந்த மண்டபங்களில்
பதுங்கித் தலைகீழாய்த்
தொங்கிச் சிறுத்துக் கிடந்த
உயிர் தின்னி வௌவால்கள்

இளமைத் தோல் தின்று
மனித உயிர் குடித்து
ஒற்றை ஆயுள் முடித்து
இரட்டை ஆயுள் பெற்று
சத்தங்கள் துணைகொண்டு
மோதாமல் தப்பித்து
எங்கென்று தெரியாமல்
வேறொரு மண்டபம் பதுங்கி..
அடுத்தொரு தோலுக்காய்..
வலைவிரித்த இறக்கையோடு..


10 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கருத்துள்ள கவிதை.
பூவரசியில் வெளியீடு ஆனதற்கு
பாராட்டுக்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்த்துகள் அக்கா.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இளமைத் தோல் தின்று
மனித உயிர் குடித்து//
வௌவால்கள்...பூவரசியில்.பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

வௌவால்கள் பற்றி முழுமையாக தெரிந்திருந்தால் - இந்த கவிதையை பூரணமாக புரிந்து கொள்ள இயலும் என்று நினைக்கிறேன்.

ஹேமா சொன்னது…

ம்...வௌவாலுக்கும் ஒரு கவிதை.அசத்தல் !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குமுதம் கவிதைக்கு வாழ்த்துக்கள் மேடம்

போளூர் தயாநிதி சொன்னது…

உங்களின்" பா " அற்புதம் இந்த குமுகத்தின் அவலங்களை படம்பிடிக்கின்றீர்கள் தாமதிக்கப்படும் நீதி இங்கு கருப்பொருள ஆக்கபட்டுள்ளமை பாராட்டகூடியான காரணம் இன்றைய சூழலில் இவைகள் தவிர்க்க படவேண்டிய வைகளை கூறியுள்ளமை சிறப்பு.

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி அக்பர்

நன்றி ராஜி

நன்றி ரமேஷ்

நன்றி ஹேமா

நன்றி செந்தில்

நன்றி தயாநிதி

நன்றீ ரத்னவேல் சார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...