சனி, 3 ஏப்ரல், 2010

வருடம் முழுதும் வசந்தம்

வீடெங்கும் வாசனைப் பூந்தொட்டிகள்..
வண்ண வண்ண ரோஜாக்கள் ..
நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
இனிப்பான பேச்சுக்களும்
இன்பமான நினைவுகளும்
ருசிக்கத் தருவேன்..
சபரி ராமனுக்கு ஈந்தது போல்..
மனதையும் பொதித்துக் கைகளுக்குள்..

காற்றுள் புகுந்து சங்கீதமாய்
உன் காதுகளில் ஒலிப்பேன்....
கடலுள் புகுந்து அலையாகி
உன் பாதம் தழுவுவேன்...
நீ நடக்கும் மணலாகவும்.,
நிலமாகவும் .,புல்லாகவும்.,
உன் உயிராகவும் .,
நாடியாகவும்., துடிப்பாகவும்.,
உன் சொல்லும் .,
செயலும்., பேச்சாகவும்.,
உன் ஆன்மா
தழுவும் மூச்சாகவும்.,
முழுமையான சரணாகதி...
அன்பின் பொம்மை நீ.,
அபிராமியின் தாடகம் நீ..,
வெண்புறாவின் மென்மை நீ.,
விடியலின் வெளிச்சம் நீ.,
வளர்தலும் தேய்தலும் உனக்கில்லை.,
என்றுமே பூர்ண சந்திரன்.,
வசந்தம் தோய்ந்த வசந்தம் நீ..!!
வாழ்க நீ நூறாண்டு...!!!

டிஸ்கி..1...:- கவிக்கோவின் இடுகை திங்கள் வரும்.

டிஸ்கி..2..:- மக்களே விடுமுறை.. உங்க இடுகைகளை
எல்லாம் திங்கள் படித்து பின்னூட்டமிடுகிறேன்..
நேரமின்மை...மன்னிக்க,,!!

43 கருத்துகள் :

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

நீ நடக்கும் மணலாகவும்.,
நிலமாகவும் .,புல்லாகவும்.,
உன் உயிராகவும் .
மிகவும் சிறப்பான வரிகள்

வானம்பாடிகள் சொன்னது…

யாருக்குங்க வாழ்த்து? எப்படியோ கவிதை நல்லாருக்கு:)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பின்னுறீங்களே!!! அக்கா
கலக்கல்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////காற்றுள் புகுந்து சங்கீதமாய்
உன் காதுகளில் ஒலிப்பேன்....
கடலுள் புகுந்து அலையாகி
உன் பாதம் தழுவுவேன்...////

கலக்குறீங்க போங்க . மிகவும் அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் !

padma சொன்னது…

யாரந்த வசந்தம்? சபரி ராமனுக்கு ஈந்தது போல்..... அப்போ எல்லாத்தையும் ஒரு கை பாக்க போறேங்கறீங்க ...நடத்துங்க

தமிழ் உதயம் சொன்னது…

எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.

அமைதிச்சாரல் சொன்னது…

வாழ்த்து நல்லாருக்கு.. யாருக்காவது பிறந்தநாளா??.

ஸ்ரீராம். சொன்னது…

தமிழ் வாழ்த்து...

ஹுஸைனம்மா சொன்னது…

//என்றுமே பூர்ண சந்திரன்.,
வசந்தம் தோய்ந்த வசந்தம் நீ..!!
வாழ்க நீ நூறாண்டு...!!!//

யாருக்குக்கா வாழ்த்து? நாங்களும் வாழ்த்திக்கிறோம்.

seemangani சொன்னது…

//நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...//

எப்படி தேனக்கா இப்டி...அழகு வரிகள் ரசித்தேன்...
டியுசென் எடுக்கணும் உங்ககிட்ட...ஆமா யாருக்காக இது..??

ரிஷபன் சொன்னது…

வாழ்த்துக் கவிதை அழகு தமிழ்

செந்தில் நாதன் சொன்னது…

யாருக்கு வாழ்த்து?
//
கடலுள் புகுந்து அலையாகி
உன் பாதம் தழுவுவேன்...//

என்னை கவர்ந்த வரிகள்..

வழக்கம் போல "அருமை" :)

அன்புடன் மலிக்கா சொன்னது…

வாழ்த்துக்கவிதை மிக அழகு
வாழ்த்துக்கள்..

Chitra சொன்னது…

அருமையான வாழ்த்து கவிதை.

சே.குமார் சொன்னது…

//நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
//

எப்படி தேனக்கா இப்படி...அழகு வரிகள்...

கவிதை அழகு...
உங்கள் தமிழ் அழகு...

விஜய் சொன்னது…

உணர்வின் வெளிப்பாடாக கவிதை அன்பை பொழிகிறது

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

நாய்க்குட்டி மனசு சொன்னது…

நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி..//
ரசனையான வரிகள்.

அக்பர் சொன்னது…

வாழ்த்து கவிதை அருமை அக்கா

சீனிவாசன் சொன்னது…

எனக்கு பிடித்த வரிகள்...

வெண்புறாவின் மென்மை நீ.,
விடியலின் வெளிச்சம் நீ.,
வளர்தலும் தேய்தலும் உனக்கில்லை.,

Muniappan Pakkangal சொன்னது…

varikku vari,Vaazthu nalla irukku Thenammai.

Ananthi சொன்னது…

//வெண்புறாவின் மென்மை நீ.,
விடியலின் வெளிச்சம் நீ.,//

அக்கா.. மிக மிக அருமையான வாழ்த்து வரிகள்..
வாழ்த்துக்கள்..

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அரும்பாவூர் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பாலா சார் ..நட்புக்கு மரியாதை ,,,கவிதை நல்லா இருக்கா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சை கொ ப வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர் வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி பத்மா உங்க கவிதை அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ரமேஷ் உங்க பாராட்டுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி அமைதிச்சாரல் உங்க பாராட்டுக்கு நட்புக்காக இந்தக் கவிதை

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஹுசைனம்மா உங்க பாராட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைதான் இது

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீமான் கனி முன்பே சொன்னபடி நட்புக்காக எழுதியது இது

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ரிஷபன் உங்கள் ஜீவிதம் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி செந்தில் உங்க தமிழ் பேசி அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி மலிக்கா உங்க பேபி கார்ன் சூப் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சித்து உன் கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றீ குமார் உங்க பாராட்டுக்கு

thenammailakshmanan சொன்னது…

விஜய் அச்சச் சுவைக்குப் பிறகு ஒண்ணும் எழுதலையா

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராஜ் உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர் உங்க வருகைக்கும் கருத்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீனிவாசன் உங்க வருகைக்கும் கருத்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றிம்மா ஆனந்தி உன்னோட கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...