எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2011

அடுத்த கோர்ஸ்.




அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..

திங்கள், 2 மே, 2011

நெசவு...

நெசவு..
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..

இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நொய்(த)யல்..


ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை..
சாயப்பட்டறைக்காரர்களுக்கு.,

செவ்வாய், 25 ஜனவரி, 2011

விவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..

1. விவ .. சாயம்..************************
சாணி., சருகு.,
வேப்பம் பிண்ணாக்கு.,
மக்கிப் போன தோல்தழை..
மழைபெஞ்சா
மண்ணுழப்பி..

இத்தனையும் விட்டுப்புட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு.,
மேலே அள்ள
மேலுரம் போட்டு..

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ரசாய(வ)னம்..2011..

சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..

1. தேனீர் தாகம்..
**************************

சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...

1. கருவேலம்:-

********************

ஈரப்பதம் உறிஞ்சி
உள்துப்பும் இயந்திரங்கள்
சமையற்கட்டிலும்.,
சயனத்திட்டிலும்.,
வரவேற்பறையிலும்.,
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

சனி, 11 டிசம்பர், 2010

டிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..

அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..

ஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

மலையறுப்பு

மலையின் முலை மேகம் முட்டி
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...