செவ்வாய், 11 ஜனவரி, 2011

ரசாய(வ)னம்..2011..

சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..


ரசாயனப் பாதுகாப்பு
என் வனத்தில்..

பாலிதீன் பலா தின்னும் யானை..
கண்ணாடி பைகள் ., சீசாக்கள்.,
பூத்திருக்கும் மலை..
அணுவை பிளக்க
ஆள்துளையிட்டு
ரசாயனக் கூடம்..

வனம் பாதுகாக்கும் ரசாயனம்..

டிஸ்கி :- ரசாய( வனம்) என்ற தலைப்பில் இந்தக் கவிதை 03.01.2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிரோசை..:-))

20 கருத்துகள் :

ஸாதிகா சொன்னது…

ஆஹா..கவிதை எழுத எப்படிஎல்லாம் கறபனையை செலவு செய்கின்றீர்கள் தேனம்மை!!

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை தேனம்மை.

தமிழ் உதயம் சொன்னது…

பக்க பக்கமாக சொல்லப்படும் கருத்தை, அழகாக ஒரு பத்தியில் கவிதையாக்கி விட்டிர்கள்.

கோமதி அரசு சொன்னது…

சுற்றுப்புறச் சூழல் கெட்டு விட்டதை காட்டும் அருமையான கவிதை தேனம்மை.

கொஞ்சம் கொஞ்சமாய் நாமே ரசாயனக் கூடமாகி விட்டோம்.

Chitra சொன்னது…

அருமை.... வாழ்த்துக்கள், அக்கா!

அமைதிச்சாரல் சொன்னது…

இந்தக்கவிதையை அருமைன்னு ஒருவார்த்தையில் பாராட்டிவிட்டுப் போய்விட முடியாதே தேனம்மை.. அப்படியே கட்டிப்போடுகிறது..

Balaji saravana சொன்னது…

மிக ஆழமான கருத்தை (அ) பிரசாரத்தை இவ்வளவு எளிமையாக சொல்லிட்டீங்க அக்கா! :)

Kousalya சொன்னது…

கவிதை அருமை !!

செந்தில்குமார் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்

அருமையான வரிகள் அக்கா.....


பொங்கல் வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கெடுக்கப்பட்ட சுற்றுசூழலைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்ல போகிறோமா?

விஜய் சொன்னது…

பூமியில் நடக்கும் ரசாயன வதம்

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

நல்லாருக்குங்கம்மா...

பகிர்வுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கவிதை

THOPPITHOPPI சொன்னது…

பலா, கொய்யா, முருங்கை, சந்தனமுல்லை, செம்பருத்தி ........ அருமையான வார்த்தைகள்
வரிகளின் நடுவே

சி. கருணாகரசு சொன்னது…

கருத்துள்ளக் கவிதைங்க பாராட்டுக்கள்.

காவேரி கணேஷ் சொன்னது…

அருமை சகோ.

சே.குமார் சொன்னது…

அருமை.
வாழ்த்துக்கள் அக்கா!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஸாதிகா. , ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கோமதி., சித்து., சாரல்., பாலாஜி., கௌசல்யா., செந்தில்., அக்பர்., விஜய்., ஆயிஷா., மாணவன்., டி வி ஆர்., தொப்பி., கருணாகரசு., கணேஷ்., குமார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...