எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

சனி, 29 ஜனவரி, 2011

கண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் காயத்ரிஸ்ரீகாந்த்..எண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பதறிவோம். அதிலும் கண்களே ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் முக்கிய கருவியாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கண்ணைக் கண்போல பார்த்துக்கிட்டாதான் யாரையும் டிபெண்ட் பண்ணாம இருக்கலாம்.

சென்னை டி. நகர் துரைசாமி மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் (கிட்டத்தட்ட 25,000 பள்ளிக் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். சென்னையில் FEMTOLASER எனப்படும் BLADELESS அறுவை சிகிச்சை செய்யும் ஒரே பெண் மருத்துவர் இவர். ) திருமதி காயத்ரி ஸ்ரீகாந்த்.. அவர்களிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக கண் பற்றி விழிப்புணர்வுத் தகவல்கள் தந்துதவச் சொல்லிக் கேட்டோம்.


கண் என்பது காமிரா மாதிரி. அதில் ஒரு படம் எடுப்பது போல் பார்க்கிற காட்சிகள் எல்லாம் பதியுது. அதை ப்ராசஸ் பண்ணி எடுப்பது மூளை.. கண் = காமிரா. விழித்திரை ( ரெட்டினா) = படம். மூளை = ப்ராஸசர். இந்த மூன்றில் எது பாதிச்சாலும் கண் ப்ரச்சனைதான். கண்ணில் வரக்கூடிய கோளாறுகளை பிறந்த போது ., பள்ளி செல்லும் பருவம்., அடலசண்ட் பருவம்., 40 வயதுக்கு மேல் என 4 வகையா பிரிக்கலாம்.


1. பிறந்தபோது பொதுவா என்ன பிரச்சனைன்னா கருட பார்வை. , மாறுகண் போன்றவை அதிர்ஷ்டம் என்று இருக்காமல் ஆபரேஷன் செய்து சரி செய்யணும். பிறந்து 2 வாரத்தில் கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு.


2. பள்ளி செல்லும் பருவம். இப்போ என்ன பிரச்சனைன்னா கிட்டப்பார்வை., தலைவலி., ப்ளாக்போர்டுல என்ன எழுதுறாங்கன்னு சரியா தெரியாம இருக்குறது. சில பசங்க அதுனால டல்லா இருக்கும். சோர்ந்து போய் படுத்துக்கும். சிலது ரொம்பக் குறும்பா இருக்கும். தலைவலின்னா கண்ணுதான் ரெஸ்பான்ஸுன்னு நினைச்சுக்குவாங்க.. காது., மூக்கு., தொண்டை., ப்ரெயின் கூட ப்ரச்சனை இருக்கலாம். ஸ்கூலில் அடிபடுதல்., கிரிக்கெட் பால்., டென்னிஸ் பால்., பென்சில்., இதுல அடிபடுறது அல்லது குத்திக் கொள்வது. , இதுனால கருவிழி (கார்னியா) பாதிக்கும்.


3. அடலஸண்ட் ஏஜில் அதிகமா கம்ப்யூட்டர் ., டி.வி பார்ப்பது காரணம். கண்ணில் தண்ணீர் வந்தா பார்க்கணும். போஸ்சர் கரெக்டா உக்கார்ந்துதான் படிக்கணும். படிக்கும் டேபிள் பின்னாடி லைட் இருக்கணும். விளையாடும்போது sports gargles போடுவது நல்லது. 90% இந்த ப்ரச்சனையை சால்வ் செய்துவிடலாம். யங் அடல்ட்ஸ் காரட்., கீரை மட்டுமல்ல., பாலன்ஸ்ட் டயட் சாப்பிடணும். நல்லா தூங்கணும்., கண்ணுக்கு போதிய ஓய்வு கொடுக்கணும். Heriditary யினால் கூட கண் கோளாறு வரலாம். முன்னோர்கள் யாருக்காவது இருந்திருக்கும். சரியான வேலை., சரியான சாப்பாடு., சரியான ஓய்வு முக்கியம்.


40 வயதுக்குப் பிறகு வருடம் ஒரு முறை கண் பரிசோதனை அவசியம்., சுகர் ., பி. பி. போல.. 40 இல் வரும் பிரச்சனைகள்..


1. வெள்ளெழுத்து எனப்படும் சாளேஸ்வரம். PRESBYOPIA.


2. GLAUCOMA எனப்படும் கண் நீர் அழுத்த நோய். உடலில் ரத்த அழுத்தமிருப்பது போல் கண்ணிலும் ஏற்படும் அழுத்தம் இது. பார்க்காவிட்டால் திடீர்னு நாள் கண்ணே தெரியாம போய்விடும்.


3. CATARACT எனப்படும் புரை., தலைமுடி., தோல் சுருங்குவது., போல் கண்ணில் லென்ஸ் என்னும் உறுப்பு வெள்ளையா சுருங்கின தோல் மாதிரி ஆகிடும். நாளாக ஆக அடர்த்தி அதிகமாகி அருவி வழி பார்ப்பது போல் இருக்கும்.எல்லாவற்றிற்கும் குணமாக்கும் வழி இருக்கிறது. வயசானா ARMD .. AGE RELATED MACULAR DEGENERATION எனப்படும் கண் கொழுப்புக் கட்டிகள் ஏற்படலாம். அதுக்கும் ட்ரீட்மெண்ட் இருக்கு . எக்ஸ்பென்ஸிவ்தான். இதுக்கு லேசர் பண்ணலாம். ஊசி போடலாம். ஆனா வருடா வருடம் செக்கப் செய்து கொண்டால் தடுக்கலாம்.லேசர் சிகிச்சை தூரப் பார்வைக் கோளாறுக்கு உண்டு. சாளேஸ்வரத்துக்கு லேசர் சிகிச்சை இல்லை. புரை அறுவை சிகிச்சை., (PHACO) .. , விழித்திரைப் பிரச்சனைகளுக்கு (சர்க்கரை நோய் ) ARMD ., விழித்திரை நீர் கோர்த்தல்., விழித்திரை கிழிதல் (RETINAL DETACHMENT) ., லேசர் சிகிச்சை செய்யலாம். விழித்திரையின் திக்னெஸ் அறுவை சிகிச்சை தாங்கும் அளவு இல்லாவிட்டாலும் அறுவை சிகிச்சை செய்ய இயலாது. கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும்.கண்ணில் வரக்கூடிய மற்ற பிரச்சனைகள் மெட்ராஸ் ஐ எனப்படும் CONJUCTIVITIES. இது வைரஸ் தொற்று. 99.99% தானாகவே சரி ஆகிவிடும். சுத்தமான துணியை வைத்து துடைத்தாலே போதும்.கருவிழி அல்சர் .. இது மெட்ராஸ் ஐ மாதிரியே கண் சிவக்கும். ஆனால் பார்க்காமல் விட்டால் பார்வை பறிபோய்விடும்.


சர்க்கரை நோய் இருந்தால் ரெட்டினோபதி எனக்கூடிய கண் பிரச்சனை ஏற்படும். விழித்திரையில் கண்களில் அடிக்கடி நீர் கோர்த்தல்., அல்சர்., புரை., இரத்தம் கசிதல்., அடிபடுதல்., விழித்திரை நனைந்து போதல்., இதெல்லாம் உடனடி்யா பார்க்கணும்.கண்ணில் POLLUTION., DUST., ALLERGY., (TABLETS., FOOD., EXTERNAL.) ., அதிகம் படித்தல்., மற்றும் கிட்டப்பார்வையினால் அரிப்பு ஏற்படலாம். DRY EYES எனப்படும் பிரச்சனை ஏற்படலாம். கண்ணை முக்கியமா தேய்க்கவே கூடாது.செய்யக் கூடாதது என்னன்னா சொந்த வைத்தியம்., தேங்காய் எண்ணெய்., விளக்கெண்ணெய் ., கோழி ரத்தம்., தாய்ப்பால்., இவற்றை ஊற்றுதல்., அடிக்கடி கண்ணைத் தேய்ப்பது., நீண்டநேரம் கம்ப்யூட்டர் ., டி. வி பார்ப்பது., குப்பை பொல்யூஷன் அதிகம் இருக்கும் இடங்களில் நீண்ட நேரம் இருப்பது., நேராக சூரிய ஒளியைப் பார்ப்பது., குவாலிட்டி ஸ்டாண்டர்ட் இல்லாத டை ( DYE ) போடுவது ., பாட்டி வைத்தியம் செய்வது இதெல்லாம் தவிர்க்கப் படணும்.காண்டாக்ட் லென்ஸ் தரமுள்ளதா என்று பார்க்கணும். சுத்தம் செய்து அணியணும். பவர் ஏறும் போதெல்லாம் செக்கப் செய்து மாற்றிக் கொள்ளணும். நல்ல பாலன்ஸ்ட் டயட் சாப்பிடணும்... சைவத்தில் கீரை., காரட்., பப்பாளி., பச்சைக் காய்கறி., சத்தான உணவு., பழங்கள்.. அசைவத்தில் மீன் ., கல்லீரல்., முட்டை சாப்பிடலாம். மீன் எண்ணெய்., மீன் மாத்திரை சாப்பிடலாம்.நம்முடைய கண் நமக்கு மட்டுமில்லாமல் நமக்கு பின் மற்றவர்களுக்கும் பயன்படும். விழித்திரையை எடுத்து மாற்றுவார்கள். பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக நம் நாட்டில் காத்திருக்கும் மக்கள் சில ஆயிரம் இருக்கும். எனவே பக்கத்தில் உள்ள கண் வங்கியில் தானம் செய்ய ஃபார்ம் பில் பண்ணி சைன் செய்து கொடுக்கலாம்., நம் விழியை நம் இறப்புக்குப் பின் தானமாக வழங்குவதாக. இதனால் பலருக்கு பார்வை கிடைக்கும். இறந்தவரின் உறவினர் கூட 6 மணி நேரத்துக்குள் தானம் செய்யலாம். இதனால் முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே நாம் அனைவரும் கண் தானம் அளிப்போம் என உறுதி மொழி எடுப்போம்.விழியிழந்தோருக்கு விழியாக வாழ்வோம்..
14 கருத்துகள்:

 1. கண்தானம் அவசியம். கண் பாதுகாப்பு அவசியம். அருமையான விழிப்புணர்வு பதிவு.

  பதிலளிநீக்கு
 2. //பள்ளி செல்லும் பருவம். இப்போ என்ன பிரச்சனைன்னா கிட்டப்பார்வை., தலைவலி., ப்ளாக்போர்டுல என்ன எழுதுறாங்கன்னு சரியா தெரியாம இருக்குறது. சில பசங்க அதுனால டல்லா இருக்கும்//.

  முக்கியமான பாயிண்ட் இது தேனம்மை.. தன்னோட பிரச்சினையை வீட்டுல சொல்லத்தெரியாம, படிப்பில் மந்தமாகும். இதை புரிஞ்சுக்காம, பெற்றோர்களும் அதுங்களை கண்டிப்பாங்க.. மொத்தத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் இது.

  பதிலளிநீக்கு
 3. எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருது தேனம்மை, மதுரையில் ஒரு மருத்துவமனையில் பிறந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தவறான மருந்து ஊற்றியதால் பார்வை பாதிக்கப் பட்டன. ஏன் உறவுக் குழந்தை பிறந்ததில் இருந்தே கண்ணாடி போட வேண்டிய அவலம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனம் அதிகம் செலுத்த வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 5. தியாகராய நகர் மருத்துவமனையின் தெரு, கதவு இலக்கம், தொலைபேசி எண், இணையம், போன்ற விபரங்கள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 6. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் தேவையிருக்காது. புரியும் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ரமேஷ்., சாரல்., வினோ., கோமதி., ரூஃபினா., இளம் தூயவன்., ஸ்ரீராம்., ராம்ஜி., குமார்., ஜோதிஜி (!)

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 9. கண்களை பேணுதல் பற்றி அழகான கட்டுரை

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...