எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ரசாய(வ)னம்..2011..

சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..


ரசாயனப் பாதுகாப்பு
என் வனத்தில்..

பாலிதீன் பலா தின்னும் யானை..
கண்ணாடி பைகள் ., சீசாக்கள்.,
பூத்திருக்கும் மலை..
அணுவை பிளக்க
ஆள்துளையிட்டு
ரசாயனக் கூடம்..

வனம் பாதுகாக்கும் ரசாயனம்..

டிஸ்கி :- ரசாய( வனம்) என்ற தலைப்பில் இந்தக் கவிதை 03.01.2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிரோசை..:-))

19 கருத்துகள்:

  1. ஆஹா..கவிதை எழுத எப்படிஎல்லாம் கறபனையை செலவு செய்கின்றீர்கள் தேனம்மை!!

    பதிலளிநீக்கு
  2. பக்க பக்கமாக சொல்லப்படும் கருத்தை, அழகாக ஒரு பத்தியில் கவிதையாக்கி விட்டிர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சுற்றுப்புறச் சூழல் கெட்டு விட்டதை காட்டும் அருமையான கவிதை தேனம்மை.

    கொஞ்சம் கொஞ்சமாய் நாமே ரசாயனக் கூடமாகி விட்டோம்.

    பதிலளிநீக்கு
  4. அருமை.... வாழ்த்துக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  5. இந்தக்கவிதையை அருமைன்னு ஒருவார்த்தையில் பாராட்டிவிட்டுப் போய்விட முடியாதே தேனம்மை.. அப்படியே கட்டிப்போடுகிறது..

    பதிலளிநீக்கு
  6. மிக ஆழமான கருத்தை (அ) பிரசாரத்தை இவ்வளவு எளிமையாக சொல்லிட்டீங்க அக்கா! :)

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம்ம்ம்ம்ம்

    அருமையான வரிகள் அக்கா.....


    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கெடுக்கப்பட்ட சுற்றுசூழலைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்ல போகிறோமா?

    பதிலளிநீக்கு
  9. பூமியில் நடக்கும் ரசாயன வதம்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லாருக்குங்கம்மா...

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. பலா, கொய்யா, முருங்கை, சந்தனமுல்லை, செம்பருத்தி ........ அருமையான வார்த்தைகள்
    வரிகளின் நடுவே

    பதிலளிநீக்கு
  13. கருத்துள்ளக் கவிதைங்க பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஸாதிகா. , ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கோமதி., சித்து., சாரல்., பாலாஜி., கௌசல்யா., செந்தில்., அக்பர்., விஜய்., ஆயிஷா., மாணவன்., டி வி ஆர்., தொப்பி., கருணாகரசு., கணேஷ்., குமார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...