திங்கள், 19 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே பாகம் 2.

என் முகநூல் நண்பர் சண்முகம் சுப்ரமணியன் அவர்களின் இரு நேர்காணல்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளிவருகின்றன. ஒன்று முபின் சாதிகா , இன்னொன்று ட்ராட்ஸ்கி மருது.

புகைப்படம் சார்ந்த பகிர்வுகளில் தத்துவக் கருத்துக்களை தினம் 20 ஆவது பகிர்வார் சண்முகம். ஒவ்வொன்றும் சிந்தனையைச் செதுக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய இலக்கிய தத்துவ ஞானிகளின் மேற்கோள்களும் கருத்துகளும் கவி வரிகளும் தினம் அழகழகான கேரிகேச்சர்களில் பகிர்வார். அவர் எடுத்த நேர்காணல் என்பதால் இரண்டுமே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.

முபின் சாதிகா  அவர்களின்  வலைப்பூவையும் கவிதைகளையும் படித்து அசந்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலிருக்கும் அவரது எல்லாக் கட்டுரைகளும். நெருக்கமாய் கோர்க்கப்பட்ட சரங்கள் போலிருக்கும் கவிதைகள். இவரது கவிதைகளுக்கு சகோ பாலகணேஷ் விமர்சனம் எழுதி இருக்கிறார்.முபின் சாதிகா
நேர்காணல் :- எஸ். சண்முகம்.
நூல் :- உறையும் மாயக்கனவு. 
கலைஞன் பதிப்பகம்.

ட்ராட்ஸ்கி மருது  பல்லாண்டுகளுக்கு முன்பே ஓவியங்கள் வழி அறிமுகம். வாளோர் ஆடும் அமலை என்னும் இவரது புத்தக வெளியீட்டில் தேவநேயப்பாவாணர் அரங்கில் கலந்து கொண்டேன். நான் மதிக்கும் மிகப் பெரும் ஓவியர்.

ட்ராட்ஸ்கி மருது
நேர்காணல் :- எஸ். சண்முகம்
நூல் :- கோடுகளுடன்.
கலைஞன் பதிப்பகம். 

அடுத்து நண்பர் பாலாவின் புத்தக வெளீயீடு. இவர் நிறைய குழந்தைகள் நூல் வெளியிட்டிருக்கிறார். இவருடைய 5 நூல்களுக்கு நான் நூல் பார்வை எழுதி இருக்கிறேன். புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர் இவர்.

இந்த வருட வெளியீடு 3.  ஒன்று குழந்தைகளுக்கானவை. ஒன்று லிமரைக்கூ நூல். இன்னொன்று அவரது கவிதைத் தொகுதி.

செம்மண் குட்டை லிமரைக்கூ நூல்

சிறுவர் பாடல் நூல் அன்னப் பறவை
முகப்பு அட்டைப் படம்;ஓவியர் இரா.அன்பழகன்
பின் அட்டை ஓவியம்;ஓவியர் பாபு

கவிதை நூல் கொதிக்கும் பூமி
அட்டைப் படம்;ஓவியர் ரெ.இரவி

மூன்றாவதாக நண்பர் மணிபாரதியின் கவிதை நூல்
 கடவுளைப் படைப்பவன். என் முகநூல் நண்பர். என் இடுகைகளுக்கு அவ்வப்போது கருத்துகளும் லைக்கும் கொடுப்பார். அவரது முதல் கவிதைத் தொகுதி இது. தோழி உமாசக்தி ( எடிட்டர் - மங்கையர் மலர் ) அணிந்துரை எழுதி இருக்கிறார். ஓவியா பதிப்பக வெளியீடு.


நூல் :- கடவுளைப் படைப்பவன்
ஆசிரியர் :- மணி பாரதி
பதிப்பகம் :- ஓவியா
அணிந்துரை :- உமா சக்தி ( எடிட்டர் - மங்கையர் மலர் , கல்கி குரூப் )

நான்காவதாக கோவை மாலதி பதிப்பகத்தின் புது நூல் நாஞ்சில் நாடனின் அஃகம் சுருக்கேல். இதை என் நண்பர் மனோகரன் மனோவும் அவரது நண்பர்களும் சேர்த்து மாலதி பதிப்பகம் மூலம் வெளியிடுகின்றார்கள்.

நூல் :- அஃகம் சுருக்கேல்
ஆசிரியர் :- நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :- மாலதி பதிப்பகம் கோவை. 

இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றன இந்நூல்கள். வெற்றியடைய வாழ்த்துகள் நண்பர்கள் நால்வருக்கும்.

4 கருத்துகள் :

yathavan nambi சொன்னது…

படைப்பாளர்களின் நூல்கள் யாவும் வெற்றியடைய வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வேலு சகோ

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...