எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். கலைமாமணி Rtn.திரு. ஆவுடையப்பண்ணனின் சிந்தனைகள்.

முகநூல் நண்பரான ஆவுடையப்ப அண்ணன் கலைமாமணி விருது பெற்றவர்கள். மாபெரும் ஓவியர். தெய்வீகத் திரு உருவங்களைத் தத்ரூபமாக வரைவதில் வல்லவர்கள். தனது குடும்பத்தாரோடு இணைந்து 108 பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்களை க்ளாஸ் பெயிண்டிங்காக ஒரு மாதத்தில் வரைந்து முடித்தவர்கள். இவர்களின் ஓவியப் பணி பற்றி ஒரு புத்தகமே போடலாம்.

இவர்கள் கண்டனூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தை திரு ஆர் எம் எஸ் வி இராமனாதன் செட்டியார் அவர்களும் ஆன்மீகத் தொண்டாக கண்டனூர் மகாதேவா என் ஏ ஆர் கே அவர்கள் குடும்பத்துடன் இணைந்து பட்டினத்தார் திருவிழா நடக்க உதவியாக இருந்தவர்கள். அரசியல் தொண்டும் சமூகத் தொண்டும் ( கை இராட்டை மூலம் நூல் நூற்கும் பயிற்சி அளித்தவர் ) செய்தவர், இவரது தாய் நாச்சம்மை ஆச்சியும் மாதர் சங்கம் அமைத்து பள்ளத்தூர் அ. மு. மு . முருகப்பசெட்டியார் மகள் கண்டனூர் அன்னபூரணி ஆச்சியுடன் இணைந்து பெண்களுக்கான முதியோர் கல்வி திட்டத்தின் மூலம் பல பெண்கள் கல்வியறிவு பெற வழி செய்தவர்.    மனைவி திருமதி உமையாள் ஆச்சியும் இவர்கள் கலைக்குக் கைகொடுக்கும் கலையரசி. ஒரே மகன் இராமநாதன் தந்தைக்குப் பக்கபலம். இவருக்கும் ஒரே பையன். மகனுக்கும் தந்தை பெயரான ஆவுடையப்பன் என்ற பேரையே இட்டிருக்கின்றார்கள்.

ஆவுடையப்பண்ணன் ”சிலப்பதிகாரக் கதை”யை 30  தஞ்சாவூர் பெயிண்டிங்குகளாக வரைந்தவர்கள். இவர்கள் வரைந்த ”ரிஷபாரூடர் ”கண்டனூர் மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலிலும், ”தசாவதாரம்” போபால் நேஷனல் மியூசியத்திலும், ”மீனாக்ஷி திருக்கல்யாணம்” சென்னை ஸ்பிக்கிலும், ”பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் ”காஞ்சி மடத்திலும், கோலாலம்பூர் தண்டாயுதபாணி மடத்திலும், திருப்பளாத்துறை தருமபுரம் ஆதினத்திலும், நியூதில்லி எஸ். கே பிர்லா ஹவுசிலும்  ”விதோபா கிருஷ்ணா” அமெரிக்காவிலும், ”முருகக் கடவுள் ” சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயிலிலும், ”நடராஜர் ” செட்டிநாட்டு அரண்மனையிலும், ”இராமர் பட்டாபிஷேகம் “ காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸிலும், ”திருப்பதி வெங்கடாசலபதி  நியூதில்லி கோயாங்கோ ஹவுஸிலும், “ கிருஷ்ணா & ருக்மணி “ அமெரிக்காவிலும் ( தெய்வானை இல்லம் ) வைக்கப்பட்டுள்ள பெருமைக்கு உரியன.


ஓவியம் குறித்த பல பயிற்சி வகுப்புகளும் கண்காட்சிகளும் நடத்தி இருக்கிறார். அரிமா சங்கம் , சுற்றுலாத்துறை, அருங்காட்சியகங்கள் இவர் வழங்கிய ஓவியப் பயிற்சியை ஏற்று நடத்தி உள்ளன.

இந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ், தினத்தந்தி, தினமலர், மாலை மலர், மலையாள மனோரமா, தினகரன், தினபூமி , ஆனந்த விகடன், குமுதம், நகரத்தார் குரல், நகரத்தார் மலர், நகரத்தார் இதழ், ஆச்சி வந்தாச்சு போன்ற இந்தியப் பத்ரிக்கைகளும், மலேசிய தமிழ் நேசன் போன்ற வெளிநாட்டுப் பத்ரிக்கைகளும் இவரைப் பற்றி வெளியிட்டுச் சிறப்படைந்துள்ளன.

ஆல் இந்தியா ரேடியோ, மலேஷியா ரேடியோ, தூர்தர்ஷன், சூர்யா டிவி, ஜெயா டிவி, மலேஷியா டிவி, சிங்கப்பூர் டிவி போன்றவற்றிலும் இவரது ஆக்கங்கள் பற்றிய பேட்டி வெளிவந்துள்ளது.

நிதியமைச்சர் திரு  ப சிதம்பரம், உச்சநீதிமன்ற நீதிபதி திரு ஏஆர் லெக்ஷ்மணன், ஸ்பிக் திரு ஏசி முத்தையா, திரு எஸ் கே பிர்லா, திரு ஆர்பிஜி கோயங்கா, மதுரை வங்கியின் முன்னாள் சேர்மன் சபாபதி, குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோராலும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவற்றிலும் விருதுகள் பெற்றிருக்கிறார். காரைக்குடியில் நடந்த ஓவிய வேள்வியில் நிதியமைச்சர் கையால் 10,000 ரூபாய் பணமுடிப்பும் பெற்றிருக்கிறார். கண்டனூர் நகரத்தார் “ ஓவிய மணி” என்றும் , மலேஷிய தமிழ் நேசன் பத்ரிக்கை “ ஓவிய வித்தகர் “ என்றும், ”கண்ணுள் வினைஞர் “ என்று சேலம் கண்ணதாசன் விழாவிலும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சிகரமாகத் தமிழக அரசு 2001 இல்”கலைமாமணி” பட்டமும் கொடுத்துக் கௌரவித்திருக்கிறது.

அவரிடம் நம் சாட்டர்டே போஸ்டுக்காக சில கேள்விகள் கேட்டிருந்தேன். அது பற்றியும் ஓவியம் பற்றியும் அவரது கருத்துக்களும், மற்ற சிந்தனைகளையும் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

///மதிப்பிற்குரிய அண்ணன்,

நான் மதிக்கும் மிகப்பெரும் ஓவியர் தாங்கள். என் வலைத்தளத்தில் சாட்டர்டே போஸ்ட் என்ற ஒரு இடுகை வெளியிடுகிறேன். அதற்கு தாங்கள் சிறுவயதில் ஓவியம் கற்றது பற்றியும், மற்றும் முகநூலில் பெண்கள் கல்வி & திருமணம் குறித்துத் தாங்கள் பதிவிட்டிருந்தீர்கள். அது குறித்தும் தங்கள் கருத்தைப் பகிர வேண்டுகிறேன். /////// Tanjore Painting & Glass Painting

All letters originated from Paintings. Ancient man expressed his thoughts by giving signals. Then, he began to express his thoughts by drawing Pictures. In short ancient men used first signals and then paintings to communicate their inner thoughts. First writing material was finger, instead of pen and paper. We used sand and fingers in those days. Epic poet Kamban had great regard for portraits. He has written in “Kamba Ramayana”, “The figure that can not be drawn in paintings”, “Oviyathal Elutha Onna Uruvathai”  ”ஓவியத்தால் எழுத ஒண்ணா உருவத்தாய்”  - in his poem. In another song, he has written, the pen with nector is used to draw the picture of seta which can not be drawn normally to the inner satisfaction. “Atharithu Amuthil Kol Thoithu Avayavam Eluthum Thanmai Yathanil Tihaikkumallal Manathirkum Ezhutha Onna Sethai”
”ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் எழுதும் தன்மை யாதெனில் திகைக்குமல்லால் மனதிற்கும் எழுத ஒண்ணா சீதை. ”
From this we can early understand he had a great respect for pictures.
Out state and Central Government encourage craftsmen. Comparatively the encouragement is given more to the art of sculpture, music and dance than to the art of drawing. This fact can not be denied.

Tanjore Painting
This kind of painting was first introduced by Sahu Maharaja Dynasty during the 16th century and this art of painting was well patronized by King Sarafoji. He has contributed much to the growth of this kind of art. To draw the picture first paste a cloth on wooden board and we have to draw a sketch. After having drawn the sketch we have to use Chukkan Flour and artificial stones as different colours. Then we have to press gold leaf throughout the part of sketches. After all these we have to use a water colour painting which, differentiates from other paintings.
Painting on Glass
This art was introduced by the Chinese who visited India during the 18th Century. The great Tippu Sulthan of Mysore patronized this art and it began to flourish. The paintings were then exported to European Countries like Poland, Spain etc. by European merchants.
We have to follow the reverse style when we paint pictures on transparent glasses. What we paint first (part of any picture) on papers and on cloths must be painted last on glass. What we paint last (part of any picture) must be painted at first. This is the case with sides also. If you want to begin from right and move to left, you have to begin from left on the back of the glasses. To illustrate an example, if you have to draw a face, you have to draw eye, cornea and eyeballs at first. Contrarily while painting on glasses you have to follow the reverse style. First you have to draw the eyeballs, cornea, eye and face.
Last stage of painting a picture is painting the opening of eyes. It indicates the completion of picture. Even now it is being celebrated as a ritual ceremony both in India and Srilanka. Great poet Kalidasa in this poem, “Kumara Sambavan” (Volume I Song 32) describes, “Thoorihaienal Kan Thirakkappatta Oviyam” "தூரிகையினால் கண் திறக்கப்பட்ட ஓவியம் “ Moreover he compares the beauty of the portrait with that of Goddess Parvathi.
It is being drawn with oil paints. So its colour will never fade. It will look as if it has been painted a fresh even after many years the picture was drawn. That is the mark of this kind of picture.
Patrons
Kings and nobles patronized the art of paintings. First century (B.C) paintings on Ajanta, Ellora, Chinnavaasal ant the Tanjore Palace are standing examples. Without the patronage of the king those artists could not have shown their mastery over paintings with a touch of glass. They took this art to line of sublimity. Kings in those days respected Artists poets and intellectuals and treated them on par with their ministers. Even they took part in the assembly convened by the kings. This is well described in the poem called, “Kadha Sarithra Saharam”. Nagarathar also encouraged this kind of art. Which is irrefutable because even now they keep there kinds of arts in their houses. What more evidence is needed to prove the paintings is that in Chettiars houses, we can find pictures at halls front yards, inner part of the walls and drawing rooms. Even before photography came into beings, Chettiars used to keep the drawn Pictures of their respectable elderly members and keep them at the centre of entrance hall.
Even now the pictures drawn by reputed painters like Aurya, poet Namakkal Kavignar Ramalingam Pillai can be seen in their houses. “En Kathai” about this in his autobiography called, “My Autobiography”.
My Development as an Artist
In Chettinad women belonging to Chettiars community will draw pictures on vessels and on floors without using brushes, paints etc. they will use only fingers and Rice flours, etc. they will draw makkolam on floors and vessels during festival and importantly on Pongal day. It attracted me very much. In this art my mother Mrs. Nachammai Achi was my first teacher. She taught me how to draw the makkolam. It was the first lesson which I learnt. My father Mr. RM. SV. Ramanathan Chettiar was an artist. So he encouraged and engaged one. Mr. Athimoolam to teach drawings, from whom I learnt the techniques of drawing. I studied in Chittaal Achi Memorial High School, Kandanur. Where I developed as an artist. Porkizhili Kavignar, Mr. Aru. Soma Sundaram asked me to undergo an, “Ovia Velvi”, at Pillayarpatty, we painted 108 Lord Vinayagars of Pillayarpatty on transparent glasses. Union Finance Minister Mr. P. Chidambaram, presided over that function. Dr. A.C. Muthiah and industrialist gave me a golden purse, I was honored with the title “Ovia Vithakar”, by the Honorable Minister.
I was born at Kandanur. There is a temple called Arulmigu “Sri Meenakshi Sundareswarar Temple”. I painted (Siva Parvathi) a “Rishaba Arudar” (Size, 6x4) on transparent glass and installed it at that temple.
Few  of  my  paintings  appear  in  the  house  of  Honorable  Finance  Minister  Mr. P. Chidambaram.
On the installation day a function was held. Which was presided over by Mr. P. Chidambaram the Union Minister of India. I also received Mahatma Gandhi Award from former Governor of Tamil Nadu, Mr. Bishma Narayan Singh at Victoria Technical Institute, Chennai (1992), which carried a citation and cash award of Rs.2,000/-. I have given interviews to Radio, Television and Tamil and English Dailies in India, Singapore, and Malaysia. The Supreme Court Judge, Honorable Justice Dr. AR. Lakshmanan also encouraged me to the greatest extent possible, words and inadequate to describe the patronage, I have been enjoying from the industrialist Dr. A.C. Muthiah and his wife Mrs. Devaki Muthiah of which I am really proud.
I take this opportunity to make an appeal to the State and Central Government, I request them to encourage this art. I hope the both the governments would recognize me as an artist and give me necessary encouragement.

                                                                     Kalaimamani”
                                                                     Rtn. SV. RM. Avudayappan,
                                                                     6-4/47, Elango Street,
                                                                     Sri Ram Nagar, Kottaiyur – 630 106.
                                                                     Tamil Nadu.
                                                                     Ph.: +91-4565-286123 Cell: +91-9443228612.////

 -- இவரது ஓவியங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்றன. இவரது விசிட்டர்ஸ் புக்கில் பல ப்ரபலங்களும், ( தமிழறிஞர்கள், வங்கி மேலாளர்கள், அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பத்ரிக்கை ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், நீதிபதிகள், ரோட்டரி கவர்னர்கள், வெளிநாட்டினர், சினிமாத்துறையினர் ) பாராட்டி எழுதிக் கையொப்பமிட்டிருக்கின்றார்கள். 

 காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினத்தார் திருவிழா, காரைக்குடியில் எஸ் வி ஆர் எம் ட்ரஸ்ட் என்ற பெயரில் திருமண சேவையையும் மனைவி உதவியுடன்  சிறப்புற நடத்தி வருகிறார்.  

/// பொதுவாக நம் சமூகத்தில் இளைஞர்களின் திருமணம் தாமதமாக நடந்துவருவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். காரணம் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதே ஆகும். ஜோசியர்கள் ஏதாவது ஒரு சிறிய குறையைக் கண்டுபிடித்து ஜாதகம் பொருத்தமில்லை என்று கூறிவிடுகின்றனர். அந்தக் காலத்தில் பொருத்தம் பார்ப்பது மிகக் குறைவு. ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்தவர்களில் குறையும் உண்டு. ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் செய்த திருமணங்களில் நிறையும் உண்டு. எனவே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதைத் தவிர்த்து மனப் பொருத்தம் பார்த்துச் செய்வதே சிறப்பு என்று கூறுகிறார்.

திருமணம் தாமதம் ஆவதால் பெண்கள் நிறைந்த அளவில் வேறு இனத்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. பொதுவாக நம் சமூகத்தில் தற்போது பெண்கள் விகிதாசாரம் ஆண்களுடன்  ஒப்பிடும்போது குறைவு. இந்நிலையில் திருமணத்தைத் தள்ளிப் போடாமல் பெண்கள் படித்து முடித்தவுடன் திருமணம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். என்பதை வேண்டுகோளாக முன் வைக்கிறார். 

மேலும் இளைஞர்களை அடிக்கடி நம் சமூகத் திருமணம் மற்றும் இல்ல விழாக்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் நம் பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றும் இவர் சொல்கிறார். 

”பள்ளி அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை “ என்று காரணம் கூறுவதைத் தவிர்த்து ஐயா ஆயா அப்பத்தாள் போன்ற பெரியவர்கள் மற்றும் நம் இனத்தவருடன் இணைத்துக் கொள்ளும் சூழ்நிலையை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்போது பாரம்பரிய மிக்க நம் சிறந்த பண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதனால் திருமண முறிவு, கலப்புத் திருமணம் குறையும் என்பதே இவர் கருத்து. இப்போது அதிக அளவில் மணமகனின் பெற்றோர்கள் திருமணம் செய்ய நல்ல படித்த பெண்ணாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். 

-- ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணே. மிக அருமையா தெளிவா இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்தினதுக்கு நன்றி. ஓவியம் பற்றிய அரிய தகவல்களையும் பகிர்ந்து இந்த சாட்டர்டே போஸ்டை மிக அர்த்தமுள்ளதாக்கிய உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. 

கோட்டையூர் ஸ்ரீராம் நகரிலும் சென்னை நங்கநல்லூரிலும் இவரது ஓவியங்கள் காட்சிக்காகவும் வியாபாரத்திற்காகவும் உள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. :-

Paintings are Exhibited and for sales at Sri Ram Nagar & Chennai - Mr. AV. Ramanathan,  G-2, Kalyan Flats, #43, 5th Main Road, Nanganallur, Chennai – 600061. Ph: +91-44-43585752 Cell: +91-9884285507.

8 கருத்துகள்:

 1. திருமதி தேனம்மை அவர்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சிந்தனை செய் மனமே செய்தால்
  ஓவியத்தின் எழில் காவியமாகிடுமே
  கலைமாமணி திரு. ஆவுடையப்பண்ணனின்
  கை வண்ணத்தினை என்றும்
  சிந்தனை செய் மனமே!

  ஆஹா! நெஞ்சை கொள்ளை கொள்ளும்
  தஞ்சை ஓவியமோ! அருமை.
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  (எனது புதிய படைப்பு "இறைவனைத் தேடி" சிறுகதை
  படித்து மகிழ வாருங்களேன்)

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி ஆவுடையப்ப அண்ணன்

  மிக்க நன்றி யாதவன் நம்பி சகோ

  பதிலளிநீக்கு
 4. You are a hard working person. At this age you are still doing your best. My warm regards to you.

  பதிலளிநீக்கு
 5. நாங்கள் அண்ணனிடம் 3 தஞ்சாவூர் ஓவியங்கள் வாங்கினேன் அருமையாக இருக்கின்றது மிகச்சிறந்த படைப்பு சிவபெருமான் பார்வதி தேவியுடன் காட்சிதரும் ரிஷப வாகனக் காட்சி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...