எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 10 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். எலக்ட்ரானிக் வேஸ்டேஜும் சுனாமியும் பற்றி கோகுல கிருஷ்ணன்

என் முகநூல் நண்பர் கோகுல கிருஷ்ணன். சினிமா விமர்சனங்கள் தூள் பறக்கும். நினைத்ததை சுவாரசியமா நச்சுன்னு சொல்லத் தெரிஞ்சவர். அவரோட பிகே படம் பற்றிய கருத்து பார்த்துட்டு அசந்துபோனேன். மாலத்தீவுல இருக்கிறார். 2012 இல் இருந்து நட்பு வட்டத்தில் இருப்பவர். வேலைகளுக்கிடையிலும் என் படைப்புகளைப் பார்த்து ஒரு லைக் போடுவார். தனுஷின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அதையே இவரும் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார். அதே போல யாருடைய ஆன்மீக விஷயங்களிலும்  தலையிடுவது எனக்கு பிடிப்பதில்லை. இவரின் பிகே பற்றிய பதிவிலும் அதையே படித்தேன். மேலும் அரசியல் விமர்சனங்களும் சுருக் & நறுக்தான்.


யதேச்சையாக இவர் கல்லூரியில் பேசிய போஸ்ட் ஒன்று தட்டுப்பட அதன் பின் தான் பார்த்தால் மனிதர் கல்லூரிகளில் அனிமேஷன் & ஓவியம் சம்பந்தமாகப் பேசி இருந்தார். அனிமேஷனில் 15 வருட அனுபவம் உண்டு. கிட்டத்தட்ட 50 படங்களிலும், 100க்கு மேல் இண்டர்னேஷனல் அனிமேஷன் புராஜக்ட்டில் வர்க் செய்திருக்கிறார். சினிமாவில் கிராபிக்ஸ் செய்திருக்கிறார்.. இரண்டு வாரம் முன் ஏவிஎஸ் எஞ்சினியரிங் காலேஜ் சேலம், கைலாஸ் மகளிர் கல்லூரி சேலம் மற்றும் கரூர் ஜெய்ராம்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சைன்ஸ் காலேஜில் எஞ்சினியரிங் மாணவர்களுக்கான மல்டிமீடியா வாய்ப்புகள். கரூரில் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கான வொர்க் ஷாப் நடத்தியுள்ளார்.

இத்தனை நாளா முகநூல் போய் என் ப்லாக் போஸ்ட் போட்டுட்டு ஹோம் பேஜில் சில லைக்ஸ் & கமெண்ட்ஸ் போட்டுட்டு ஓடி வந்துர்றது. சாட்டர்டே போஸ்ட்/ஜாலிகார்னர்னா மட்டும் யார்கிட்டயாவது இன்பாக்ஸ்ல கேக்குறது. அதேதான் இவரோட திறமைகளைப் பார்த்ததும் தோணுச்சு ( நம்ம ப்லாக் போஸ்ட் முக்கியம் மக்காஸ் :) ) இனிமே எல்லாரையும் நல்லா ஊன்றிக் கவனிக்கணும்னு தோணுச்சு. (இந்த வருட ஆரம்பத்தில் நான் புத்தாண்டு சபதம் என்னன்னு கேட்டதுக்கு வல்லிம்மா - ' write less and read more ' னு சுருக்கமா சொல்லி இருந்தாங்க. அதையே ஃபாலோ பண்ணனும்னு சபதமெடுத்துக்கிட்டேன். ) 

இவ்வளவும் சாதித்திருப்பவரிடம் அங்கே என்ன பேசினீங்க அதைப் பத்திச் சொல்லுங்கன்னு கேட்டேன். அவர் தந்த பதில் இங்கே.

//// ஒரு சாதாரண நண்பர் என்ற அளவில்தான் கடந்து போய் இருக்கேன். ஆனா என்ஜினியரிங் கல்லூரிகளில் எல்லாம் பேசின ஃபோட்டோ இருக்கே. கோகுல் நீங்க அங்கே என்ன பேசினீங்க. அதைப் பத்தி என் வலைத்தளத்தில் பகிர்ந்துக்க முடியுமா ///

அடியேன் கோகுல கிருஷ்ணன். நீலகிரியின் மலை கிராமத்திலிருந்து 1993ல் சென்னை ஓவியக்கல்லூரியில் படிக்க வந்து கிட்டத்தட்ட இன்றோடு 21 வருடங்கள் என் வாழ்க்கை ஓவியம் மற்றும் அனிமேஷன் துறையில் கழிந்துவிட்டது.

ஐந்து வருடம் ஓவியக்கல்லூரியில் படித்தபின் முதன் முதலாக சென்னையைச்சேர்ந்த பெண்டாமீடியா எனும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கே அநேக தமிழ் மற்றும் இந்தியப்படங்களின் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ்களில் வேலை செய்து பின்னர் பெங்களூர், ஐதராபாத், தில்லி என மாநிலங்கள் மாறி சீனாவில் கொஞ்ச மாதம் இப்போது மாலத்தீவில் கடந்த இரண்டு வருடமாக வாழ்க்கை.

கிட்டத்தட்ட பல இந்தியப்படங்கள், வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற இண்ட்டர்னேஷனல் கம்பெனிகளின் புராஜக்டுகளில் வேலை செய்திருக்கிறேன்.

இதுவரை பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனிமேஷன் சம்பந்தமாக அல்லது ஓவியம் சம்பந்தமாக இல்லையெனில் நம் வாழ்க்கை சம்பந்தமாக என மேடைகளில் பேசியிருந்தாலும்...சமீபத்தில் சேலத்தில் நடந்த எஞ்சினியரிங் மாணவர்களுக்கான அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா வாய்ப்புகளைப்பற்றி நடந்த விழாவில் நான் பேசிய இரு விஷயங்கள்.

சேலத்தில் ஏவிஎஸ் எஞ்சினியரிங் கல்லூரி வாகனம் என்னை அழைக்க ஹோட்டல் வந்தது . வாகனத்தில் எஃப்எம் ஒலிக்க அதுவரை என்ன பேசவேண்டும் என்று யோசித்துக்கொண்டுப்போன எனக்கு அன்றைய தினம் சுனாமி நினைவு நாள் என்பதை அறிந்து அன்றுபேசிய நிகழ்வில் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை கூறினேன். 

இப்போதைய மக்கள் இயற்கையை விட்டு விலகி வாழ ஆரம்பித்துவிட்டோம். இயற்கையை மதிக்காமல் இருந்ததின் விளைவுகள்தான் இந்தமாதிரியான இயற்கை பேரழிவுகளுக்கான காரணம். வருங்கால கம்ப்யூட்டர் மாணவர்கள் தங்களது படைப்புகளில் அல்லது கண்டுபிடிப்புகளில் கவனமாக இயற்கைக்கு சாதகமான கண்டுபிடிப்புகளை செய்தல் வேண்டும். இனி வரும் காலம் எலக்ட்ரானிக் காலம். உதாரணமாக கம்ப்யூட்டர் கழிவுகள் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மூலம் வரும் கதிர்கள் நமது சுற்றுப்புறத்தை "ஈ வேஸ்டேஜ்" எனும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளால் அதிகம் மாசுப்படப்போகிறது. அதை சரியான படி அணுகாவிடில் சுனாமியை விட அதிக பாதிப்புகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களின் கண்டுப்பிடிப்புகளில் அத்தகைய ரேய்ஸ்களையோ அல்லது ஈ வேஸ்டேஜ்களை சரியானபடி மறுசுழற்சிமுறையில் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உங்களின் கண்டுபிடிப்புகள் இருந்தல் வேண்டும் என்றுப்பேசினேன்.

காரணம் இன்றைய உலகு ஐ பேட் முதல் புரஜக்டர் வரை எல்லாமே கணினிமயம். ஆனால் இதுவரை இந்தியாவில் ஈ வேஸ்டேஜ் மறு சுழற்சிப்பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. உலக வெப்பமாதலுக்கு இந்த ஈ வேஸ்டேஜ் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்பதால். வருங்கால கண்டுப்பிடிப்பாளர்கள் இதைப்பற்றி யோசிப்பது நல்லது.

டிஸ்கி :- மிகச் சரியா சொன்னீங்க கோகுல். பொறியாளர்கள்தான் இதுக்குத் தகுந்தவங்கன்னு அவங்ககிட்ட சொன்னது சரி. நீங்க ஒரு பேச்சாளர்னும் தெரிஞ்சபின்னாடி என் ஆச்சர்யம் அதிகமாயிடுச்சு. இதுபோல் நல்ல விஷயங்களை இளம்தலைமுறையினருக்குச் சொன்னதுக்கு வாழ்த்துகள். என் வலைப்பூவிலும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

11 கருத்துகள்:

 1. நல்ல விஷயம்...
  சிறந்த மனிதருக்கு சாட்டர்டே ஜாலிகார்னரில் அறிமுகம்.
  அவருக்கு எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 2. உங்களின் வலைப்பூவில் அடியேனுக்கு எதிர்ப்பார்க்காமல் கிடைத்த இந்த பக்கத்தை பெருமையாக கருதுகிறேன்.
  நன்றி சொன்னால் நல்லா இருக்காது என்பதால் உங்களுக்கும், படிப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி குமார் சகோ

  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. நான் கோகுல கிருஷ்ணன் அவர்களுடன் சிறிது காலம் மாலத்தீவில் பணிபுரிந்திருக்கிறேன். தன் கருத்துக்களைத் தீவிரமாக எடுத்துரைப்பார். ஆனால் நண்பர்களுக்கு உதவி என்று வருகையில் அதே தீவிரத்துடன் செயலில் இறங்கி காரிய்த்தை முடித்துக் கொடுப்பார்.

  பதிலளிநீக்கு
 6. ஆரம்ப காலத்தில் இருந்து இந்த முக நூல் வழி நண்பர். இவரின் தமிழ் எழுத்தில் எளிமை, சுய எள்ளல், ஒரு ஈர்ப்பின் தீவிரம் அனைத்தும் பார்க்க முடிகிறது. இவரின் மனைவியை பெங்களூரில் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒரு நகைச்சுவை. இவரின் பன் முகம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் தேனம்மைக்கும், கோகுலுக்கும்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஜெகதீஷ் குமார். கோகுல் பத்தி மிக அருமையா சொல்லி இருக்கீங்க. :) வாழ்த்துகள் கோகுல்

  நன்றி ப்ரகாஷ். உங்கள் இருவருக்கும் முன்பே பரிச்சயம் உண்டா. நல்லது

  நன்றி பட்டிக்காட்டான் . கோகுலிடம் தெரிவிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 9. அருமை! பலமுக மன்னன்! பாராட்டுக்கள்! மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...