எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

திண்ணையில் ஒரு இடம்.

நான் வலை உலகில் எழுத வந்து ஒரு வருடத்துக்கு மேல்தான் திண்ணையின் இணைய முகவரி கிடைத்து எழுதத் தொடங்கினேன்.

செப்டம்பர்  2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய  விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.

என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.


வல்லிம்மா, மீனாள், கிருஷ்ணகுமார், IIM கணபதி ராமன், தேமொழி, பார்வதி இராமச்சந்திரன்,ப்ரசன்னா, இராஜி மலர், கே டி இளங்கோ, கவிஞர் ஆரா, ராமச்சந்திரன் ஆர், காவ்யா, ராங்கியம் அண்ணாமலை, பாலசுப்ரமணியன், ராமனாதன், அருண் நாராயண், அருள்ஞானசேகரன், ராம்,மணி,கௌதமன், பாலசுப்ரமணியன், ஜெயஸ்ரீ, இரா. முருகன் ராமசாமி, காரைக்குடி ரோட்டரி, காலகாலன், பொன் முத்துக்குமார்,டாக்டர் ஜி ஜான்சன்,சத்யானந்தன், அனு, லறீனா அப்துல் ஹக், தமிழ்க்கிறுக்கன் நடாசிவா, மதுரை சரவணன், நீலகண்டன்,சிவகுமார், சித்ரா, அன்புடன் பொன்னி வளவன், சாமி, வருணன், தவப்புதல்வன், வேடியப்பன், ராமலெக்ஷ்மி, ஹுசைனம்மா, குமரி. எஸ் . நீலகண்டன்,ராம், கவியன்பன் கலாம், ஷம்மி முத்துவேல், அரவிந்த் யுவராஜ், பாரதி சந்திரன், சுரேஷ் கிருஷ்ணன், அமைதிச்சாரல், தமிழ்ச் செல்வி, ரமணி, வேலு, கார்த்திகேயன்,   ஆகியோரும் சில படைப்புகளில் கருத்திட்டிருக்கிறார்கள். 

கவியன்பன் கலாம் says:
திண்ணையில் நிரந்தரமாய்த் தெரிவுசெய்தாய் இடத்தினையே
விண்ணிலுள்ள ஒளிர்மீனாய் விரிந்துவரும் கடலலையாய்
கண்ணிலுள்ள கவின்மணியாய் கவிதைகளின் கருப்பொருளாய்
பெண்ணினத்தின் பெருபேறாய் பரிணாம வளர்ச்சியன்றோ
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)

-- கவி வாழ்த்துக்கு நன்றி கலாம் சார். 

முகநூல் நண்பர் இராஜமன்னை மணிவண்ணன் என்னைத் திண்ணையில் author=15  என்று குறிப்பிட்டு என்னுடைய படைப்புகள் தொகுக்கப்பட்டிருப்பதாக இணைப்பு அனுப்பினார்.

அந்த இணைப்புத்தான் இது. http://puthu.thinnai.com/?author=15.

இதை க்ளிக் செய்து என்னுடைய படைப்புகளைப் படித்து ரசிக்கலாம். படிச்சுட்டு விமர்சனம் அனுப்புங்க.

நன்றியும் அன்பும் எனக்கும் எழுத்தாள இடம் கொடுத்த திண்ணைக்கு.


3 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் அக்கா...
  நான் எப்போதாவது திண்ணை வாசிப்பதுண்டு....
  இனி தொடர்ந்து வாசிக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...