எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா லெட்சுமணன். ( EVENT MANAGEMENT)

என் அன்புத் தங்கை கயல். மனித நேயமிக்கவள். பொது நல காரியங்களில் ஈடுபாடு உண்டு. அவளுக்கும் எனக்குமான பந்தம் 5 வருடங்களுக்குமுன் ஆரம்பித்தது. ஒரு நாள் திடீரென வீட்டுக்கு ஒரு அழகான பரிசுப்பொருளோடு பார்க்க வந்தா. அன்னிலேருந்து இன்னி வரைக்கும் அந்தத் தொடர்பு ( நான் ஊர் ஊராவோ ஸ்டேட் ஸ்டேடாவோ போனாலும் ) அப்பிடியே மெயிண்டெயின் ஆகிக்கிட்டு இருக்கு.
அவள் எங்கிருந்தாலும் நலமுடன் வளமுடன் என்றென்றும் என்னுடன் இதே மாறாத அன்போடு இருக்கவே ப்ரார்த்திக் கொண்டிருக்கிறேன்.

சென்னையில் கயல் வா உன்னைப் பார்க்க வேண்டும் என்றால்  ஏதோ ஒரு நிகழ்வைக் கூறி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் இருக்குக்கா திரும்பி வரும்போது வீட்டுக்கு வந்துட்டுப் போறேன் என்பார்.  சமயத்தில் அது ( ஈவண்ட் )  புது ப்ராடக்ட்ஸ் பத்தியும் இருக்கும். ஒரு சமயத்தில் அது நடிகர் ப்ரகாஷ்ராஜ் வீட்டில் நடைபெற்ற அவருடைய குழந்தையினுடைய பிறந்தநாள் விழாவாக இருந்தது. தன் தாய் தந்தையரின் 60 பிறந்தநாள் கொண்டாட்டத்தையே வடிவமைத்தவர் இவர்தான். அதில் கோட் சூட் போட்டு கலக்கி இருப்பார் கண்மணி. (அந்தப் புகைப்படம் கேட்டால் வேறொன்றை அனுப்பி இருக்கா.. சரி அதையே போட்டுருக்கேன். )

///அன்புக் கயல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பத்தி அடிக்கடி சொல்வாயே. ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு நிகழ்வாக இருக்கு. மேலும் சந்திப்புகள், ப்ராடக்ட்ஸ் சாம்பிள் தர்றதுன்னு இருக்கு. இத பத்தி தகவல்களை விரிவா என்னோட சாட்டர்டே ப்லாக் போஸ்டுக்காக சொல்லு. ///

நிகழ்ச்சி மேலாண்மை
நம்முடைய தனித்துவமான கற்பனைகளை திட்டம் தீட்டி செயல் முறைப்படுத்துதல் தான் நிகழ்ச்சி மேலாண்மை.இது ஒரு போர் திற நோக்கம் கொண்ட வார்த்தகம்(strategic marketing ) மற்றும் அது ஒரு இணைப்பு வழியாகவும் (communication tool) இருக்கின்றது. நிகழ்ச்சி மேலாண்மை என்பது காலையில் ஒரு 10 தனியார் நிறுவன அதிகாரிகள் சிற்றுண்டி உண்ண ஏற்பாடு செய்து கொடுப்பது முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தி கொடுப்பது வரை செய்ய கூடிய ஒரு அற்புதமான வர்த்தகம்.உடனே பிரபலம் அடைய கூடிய தொழிலும் இது தான். இதை தொடங்கு வதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவை இல்லை, முன்பணத்தை பெற்று கொண்டே இந்த தொழிலை செய்யலாம். இந்த வர்த்தகத்துக்கு தேவையான முதலீடு நம்முடைய பேச்சுத் திறன் , புத்தி கூர்மை மற்றும் படைப்பாற்றல் திறன் இது மூன்றும் தான் முக்கியமான முதலீடு. இதில் தனித்துவமான ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடியும்.நெறைய பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்ககூடிய தொழிலும் இது தான் உதாரணத்திற்கு பூ வியாபாரி, கல்லூரி மாணவர்கள் பகுதிநேரமாக வேலை செய்தல், கேட்டரிங், லைட் மேன்களுக்கு, ஒலி, ஒளி வினியோகிப்பாளர்களுக்கு என்று இப்படி பல.


இந்த தொழிலை பெரிய அளவில் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை, சிறிய அளவில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் நிகழ்சிகளை செய்யலாம்.நிகழ்ச்சி மேலாண்மையின் சேவைகள்(services) :

எல்லா விதமான நிகழ்சிகளையும் இந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் செய்து தரும்.வர்த்தக  நிறுவன நிகழ்சிகள்(corporate events) :

புதிய பொருள் அறிமுகம் (product launch)

பத்திரிகையாளர்கள் சந்திப்பு(press meet)

வர்த்தக நிறுவன அதிகாரிகள் சந்திப்பு(corporate meetings)

மாநாடு(conferences)விற்பனை செய்ய நடத்தும் நிகழ்சிகள்( Marketing programmes)

வீதியில் நிகழ்ச்சிகளை நடத்துதல்(Road shows)

அந்த அந்த கடைகளில் அந்த புதிய பொருளை இலவசமாக கொடுத்தல்(sampling activity)சிறப்பு வர்த்தக உபசரிப்பு நிகழ்சிகள்(Special corporate hospitality events)

இசை நிகழ்சிகள் மற்றும் விழாக்கள்(concerts)

விருது வழங்கும் விழா(Award ceremonies)

அழகி போட்டிகள்(Beauty contest)

புது ஆடை வடிவமைப்பு நிகழ்சிகள்(Fashion shows)தனி நபர்களுக்கான நிகழ்சிகள்(Personal events)

திருமண விழா (wedding and anniversaries)
பிறந்த நாள் விழா (B’day parties)
இந்த அனைத்து நிகழ்ச்சிகளையுமே வாடிக்கையாளர்களின் நிதி நிலைக்கு ஏற்றாற் போல் செய்ய வேண்டும்.நிகழ்ச்சி மேலாளர் (Event Manager)

இவருடைய பணிதான்  இருப்பதுலேயே மிகவும் முக்கியமான பனி , அவரும் அவருடைய குழுவும்  திரை மறைவில் இருந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது இவருடைய பங்கு. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சரியாக திட்டம் இட்டு சரியான முறையில் செயல் படுத்த வேண்டும்.பல இக்கட்டான சூழ்நிலையை சாதுரியமாக எதிர் கொள்ள வேண்டும்.ஒரு நிகழ்ச்சியை புதிய கோணத்தில் அழகாய் வடிவமைத்து அதற்கு என்ன என்ன தேவையோ அதை பார்த்து கொள்ள வேண்டும் .படைப்பாற்றல் அதிகம் இருக்க வேண்டும்.இது சம்பந்த பட்ட தொழில் நுட்பத்தில்(Technology) மற்றும் தேவையான மூல பொருள்களிலும்(Logistical Element) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதாவது நிகழ்ச்சியை வடிவமைப்பது, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது , நிதியை பராமரிப்பது , எது எது எங்கு எங்கு கிடைக்கும் என்பதை விரல் நுனியில் வைத்திருப்பது இப்படி பல விஷயங்கள் அதில் அடங்கும்.மேலாளர் ஒரு நிகழ்ச்சிக்கு திட்டம் இடுவதற்கு முன்பு செய்ய வேண்டியவைகள்

நிகழ்ச்சியை நடத்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் (Site survey)
வாடிக்கையாளரின் தேவைகள் (Client service)
சுருக்கமான தெளிவு (Brief clarification)
வரவு செலவு வரைதல்(Budget drafting)
பண ஓட்டம் (Cash flow)
தேவையான பொருளை தொடர்ந்து தருவித்து கொடுப்பது (supply of chain identification)
அட்டவணை போடுதல் (Scheduling)
நுட்பமான வடிவமைப்பு(Technical design)
பாதுகாப்பு (Safety)
சுற்றுப்புற சூழ்நிலை(Ecological situation) .ஒரு நிகழ்ச்சி  பொறுப்பாக நடத்தப்பட்டதா என்று பார்க்கவேண்டும் .எல்லோருமே சேர்ந்து அதாவது வாடிக்கையாளர்கள், நடத்துபவர்கள்,sub - contractors மற்றும், suppliers ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்த வேண்டும்(integrated manner ). இந்த ஒழுக்கம் மிகவும் அவசியமான ஒன்று.எந்த ஒரு வர்த்தகமும்  விளையாட்டல்ல எதிலும் ஒரு நேர்மையும் நெறி முறையும் (ethics ) வேண்டும்.இதை அத்தனையும் கடைபிடித்தால் வெற்றி நம் கையில்.

செல்வி. கயல்விழி லக்ஷ்மணன்

டிஸ்கி :- கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த ஈவண்ட் மேனேஜ்மெண்டில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினாயே. அடேயப்பா பெரிய விஷயம்தான். மிக விலாவாரியாக ஈவண்ட் மேனேஜ்மெண்ட் வகைகள், ஈவண்ட் மேனேஜரின் பணிகள், ஒத்திசைவு, இதற்கான பணி வாய்ப்புகள் பத்தி எல்லாம் குறிப்பிட்டமைக்கு நன்றிடா.

எனக்கு முக்கியமா என்ன பிடிச்சிருந்துச்சுன்னா இதுக்கு பெரிசா முதலீடு தேவையில்லைன்னு சொன்னதுதான் . மேலும் பேச்சுத் திறன் , புத்திக்கூர்மை, படைப்பாற்றல் உள்ளவர்கள் ஜெயிக்கலாம்னு சொன்னதுதான். முன்னேற்பாடுகளுடன் எல்லாத் தரப்பிலும், எல்லா விஷயங்களிலும் தெரிந்துவைத்துக்கொண்டு புரிந்து செயல்பட்டால் வெற்றியடையலாம் என்றும் சொன்னதுக்கு தாங்க்ஸ் கண்ணம்மா. வாழ்க வளமுடன். உன் பணி சிறக்கட்டும். 


7 கருத்துகள்:

 1. செல்வி. கயல்விழி லக்ஷ்மணன் அவர்களின் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய விவரங்களை மிக மிக அருமையாக விவரித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும், நன்றிகளும். இப்பாடிப்பட்ட சிறந்த சிந்தனைகளுடன், விரும்பி செயல்படும் எவரும் தோல்வியடைந்ததாக சரித்திரமில்லை. இருப்பினும் அவரது அனுபவ எல்லை ஒரு குறுகிய எல்லையாக இல்லாமல் சர்வதேச அளவில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் என்கிற நிலைக்கு அவர் உயர, இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய 30 வருட அனுபவத்தில், பலதரப்பட்ட திட்டமிடுதல் மற்றும் நிகழ்ச்சிதயரிப்புகளை, ஆரசு சார்ந்த மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக செய்திருக்கிறேன். இன்றளவும் நிகழ்ச்சி தயாரிப்பு என்பது எனது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சேவை மட்டுமே. (நிகழ்ச்சி தயாரிப்பு எனது தொழில் அல்ல- நான் ஒரு பொறியியல் மற்றும் திட்ட ஆலோசகர்). எனது திட்டப் பணிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியதோடு, சர்வதேச அளவிலும் பணியாற்றவேண்டிய கட்டாயத்தினால், பல்வேறு மொழிகளை பெசக்கற்றுக்கொண்டது, எனது நிகழ்ச்சி தயாரிப்பு ஆர்வத்திற்கு ஊக்கமளிப்பாதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. .....நன்றிகளுடன் (கோகி) கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
  http://programmedirector.blogspot.in/2013/04/blog-post.html?view=classic (நிகழ்ச்சி தயாரிப்பு பட்டறை) and www.gopalkrishnaniyer.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. செல்வி. கயல்விழி லக்ஷ்மணன் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நன்றி கோபால்

  நன்றி பாலகுமார்

  நன்றி தனபாலன் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. தேனு அக்கா. மிக்க நன்றி,
  கோப்பால் உட்டம் நான் குறுகிய வட்டத்திற்குள் இல்லை, எனது Event management கடல் கடந்து விரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. :)

  பதிலளிநீக்கு
 6. The article was awesome and the pics are too good. Thanks for sharing with us this incredible information.
  Event management company in Indore

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம்.
  இந்த பணியில் ஈடுபடுவதற்கு சான்றிதழ் அவசியமாக தேவையா?

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...