எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஜனவரி, 2015

தொட்டால் தொடரும் நாளை.

வலையுலக நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் நாளை வெளிவருகிறது.

கதாநாயகி தேவையில்லாத ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதாகவும் கதாநாயகன் அந்தப் பிரச்சனையில் இருந்து அவரை மீட்பதாகவும் என்று கதையின் அவுட்லைனை தமிழ் சினிமா ரிப்போர்ட்டருக்காகக் கூறியுள்ளார் சங்கர்.

மேலும் அவர்களின் பேட்டியில்  உங்களால்  (படம் பற்றி ) விமர்சிக்கப்பட்டவர்கள் உங்களை எதிர் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டதற்கு  படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உண்டு என்று கூறி இருக்கிறார். நாளை ரிலீஸ். படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.அது தொடர்பாக ஒரு குறும்படப் போட்டி அறிவிக்கப்பட நண்பர் கார்த்திக் சரவணன் எடுத்த ஒரு குறும்படத்தையும் பார்த்தேன். குடியின் தீமையை விலாவாரியாகச் சொல்லாவிட்டாலும் அது எப்படி தொட்டால் தொடர்கிறது என்பதை சிறப்பாக சொல்ல முயற்சித்துள்ளார். நன்றாகவே வந்துள்ளது.

நல்ல முயற்சி கார்த்திக். தொட்டால் தொடரும் என்பதை லேசான எச்சரிக்கையோடு சொல்லி இருக்கீங்க. பார்ப்பவர்கள் தொடாமலேயே இருந்தால் நல்லது.வாழ்த்துகள் கார்த்திக் சரவணன். இப்பிடி ஒரு போட்டி அறிவிச்சு மத்தவங்க திறமையையும் வெளிக்கொணர்ந்த கேபிள் சங்கருக்கும் பாராட்டுகள்.

யாரும் குடியைக் கெடுக்கும் குடியைத் தொடாமலே இருப்பது நல்லது. இன்று பலரின் பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது என்ன ப்ரச்சனை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பழக்கதோஷம் போலக் குடிப்பதுதான். இந்தப் பழக்கம் இனியும் உங்களை அடிமையாக்காம தயவு செய்து விட்டுடுங்க .Post by


கார்த்திக் சரவணன் ஸ்கூல் பையன்
.

இந்தப் படத்தில்  நடித்திருக்கும் ஹீரோ தமன்குமார் உச்சிமாகாளியிலும் ஹீரோவாக நடிப்பதாக சகோ வேடியப்பன் ( டிஸ்கவரி புக் பேலஸ் ) அறிவித்து உள்ளார். அனைவரும் நாளைக்குக் காத்திருக்கிறார்கள்.

வலையுலகத் தோழியாக இப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். .

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 10 கருத்துகள்:

 1. படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.
  இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு,
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  பதிலளிநீக்கு
 2. தொட்டால் தொடரும் வெற்றியடைய வேண்டும் என்று கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன். சீக்கிரமே அவர் மிகப் பிரபல இயக்குனராக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. குறும்படத்தைக் க்ளிக் செய்ததும் லிங்க் காணாமல் போய்விட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் வராததற்கு என்னுடைய மாத இறுதி BB வேகம் கூட காரணமாயிருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 4. நம்ம பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. கேபிள் அண்ணாவின் படம் வெற்றி பெற வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
 7. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
  பகிர்விற்கு நன்றியக்கா.

  பதிலளிநீக்கு
 8. நன்றி வேலு சகோ

  நன்றி ஸ்ரீராம்

  BB yaa . nalla velai BP yoonu oru nimisham yosichuten :)

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி ரூபன் சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றிடா பிரியசகி அம்மு :)

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. கேபிள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மிகவும் எளிமையானவர், அருமையான பதிவரும் கூட!

  அவரது படம் வெற்றி பெரும் நிச்சயமாக! நண்பர் கார்த்திக் சரவணனின் படத்தையும் பார்த்தோம். எங்கள் நண்பரும்! அழகான அருமையான முயற்சி. நன்றாக வந்திருக்கின்றது! அவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...