வியாழன், 8 ஜனவரி, 2015

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்.

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்:-

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார்.பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது, சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் , திமுக விலிருந்து விலகி  அதிமுக துவங்கியது,  மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி வழங்கியது அதன் பின் உடல் நலக்குறைவால் உயிர்துறந்தது வரை சித்தரித்துள்ளார்.


அவரின் மன உறுதி , ஏழாம் எண்ணுக்கும் அவருக்கும் உள்ள சம்பந்தம், வெள்ளைத் தொப்பி அணிந்தது மற்றும் அவர் வாழ்வில் நடந்த சிறு சம்பவங்களையும் விவரித்துள்ளார். அவர் நடித்த 136 சினிமா படங்களின் தொகுப்போடு முடிகிறது நூல்.

முகம் என்று ஒரு படம் நாசர் எடுத்தது. அதில் ஒரு முகம் எப்படி மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று கூறி இருப்பார். அது போலவே மக்களை இறக்கும் வரையிலும் ஏன் இறப்பிற்குப் பின்னும் ஆட்டிப் படைக்கும் சக்தியாக எம்ஜியாரைச் சொல்லலாம்.

மிக அருமையாகத் தொகுப்பப்பட்ட இந்நூல் எம்ஜியாரைப் பற்றிய கையேடு எனலாம்.

நூல் :- எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்
ஆசிரியர் :- பா. கணேஷ்
பதிப்பகம் :- ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்

டிஸ்கி :- இந்த அறிமுகம் ஜூன் 1 , 2014 திண்ணையில் வெளிவந்தது.

6 கருத்துகள் :

Rajneesh K Jha சொன்னது…

प्रभावी !!!
शुभकामना
आर्यावर्त

yathavan nambi சொன்னது…மக்கள் திலகம் பிறந்த மாதத்தில் (january/janvier)
அவரை பற்றிய சிறப்பினை அறிய உதவும்
இந்த மனிதப் புனிதர் எம் ஜி ஆர் பற்றிய நூல்.
நன்றி சகோதரி!
புதுவை வேலு

Yarlpavanan Kasirajalingam சொன்னது…


சிறந்த பகிர்வு
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான நூல் அறிமுகத்திற்கு நன்றி சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரஜ்னீஷ்

நன்றி யாதவன் நம்பி

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...