எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 ஜனவரி, 2015

விடியும்வரை காத்திரு.தகிக்கிறது
உறைக்கிறது
சுடுகிறது
எரிக்கிறது
காய்ச்சுகிறது
காந்துகிறது
கனலுகிறது
அனலடிக்கிறது
புழுங்குகிறது
போடுபோடென்று
போடுகிறது என்றெல்லாம்
கூப்பாடு போட்டாலும்
ஒவ்வொரு நாளின்
விடியலிலும்
எல்லாராலும்
தேடப்படுகிறது வெய்யில்.


6 கருத்துகள்:

 1. 'அட, ஆமாமில்ல!' என்று நினைக்க வைத்து விட்டீர்கள். எல்லாமே தேவைதான். ஆனால் அளவோடிருந்தால் ஓகே!

  பதிலளிநீக்கு
 2. தில்லியில் தற்போது -வெய்யில் இல்லாத நாட்கள் - இல்லாததன் அருமை இப்போது நன்றாகவே தெரியும்! :)

  நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 3. ஆம் ஸ்ரீராம் சரியா சொன்னீங்க. :)

  ஆம் தனபாலன் சகோ

  வெய்யிலைத் தேடி வந்தது வெங்கட் சகோ அதான் ஒரு கவிதை போட்டேன். இங்கே ஹைதையில் ஒரே குளிர். டெல்லியை விட அதிகமா இருக்கமாதிரி இருக்கு. மைனஸ் ல போகுதோ என்னவோ.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. வெயிலோடு உறவாடுதல் என்பது காலங்காலமாய் உள்ளதல்லவா.. வெயிலுகந்த அம்மன் என்று கோவில் வைத்து வணங்குவதே தமிழந்தான். வாழ்த்துக்கள். தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...