எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அன்பு வெருட்டு..

மண்ணைக் கிளறி
மூச்சை பெருக்கி
கொம்போடு விரட்டும்
அன்பு மிருகம்..

வாலும் அல்ல.,
தும்பும் அல்ல..
திமிலும் அல்ல..
பிடிக்கு எட்டாமல்..

கிளப்பும் புழுதி ...
கொடிய மூர்க்கம்..
விரட்டுகிறோமா..
வெருட்டுகிறதா..


முயல்குட்டி..
சிங்கக் குட்டியாய்..
குடலும் பதறும்
கொம்பின் முத்தம்..

வெல்வோமா.
சாவோமா...
களத்தின் நடுவில்..
ஓடி ஒளியாமல்..

தழும்புகள் சுகமாய்..
காயங்கள் சுகமாய்..
வெருட்டுதல் சுகமாய்..
வழியும் ரத்தம் கூட சுவையாய்..

வாழ்வது ஒரு முறை
வளைத்துப் பிடிப்போம்..
குற்றுப் படவோ..
கொற்றம் அடையவோ..

36 கருத்துகள்:

 1. /வாழ்வது ஒருமுறை
  வளைத்துப் பிடிப்போம்//

  அருமையான வரிகள்.

  கவிதை நல்லா இருக்கு தேனம்மை.

  பதிலளிநீக்கு
 2. அன்பே சுகம்தானே..

  ////தழும்புகள் சுகமாய்..
  காயங்கள் சுகமாய்..
  வெருட்டுதல் சுகமாய்..
  வழியும் ரத்தம் கூட சுவையாய்///

  அன்பால் கிடைப்பது அனைத்தும் சுகம் தானே

  அன்பான கவிதை தேனம்மை

  அ.வெற்றிவேல்

  பதிலளிநீக்கு
 3. //தழும்புகள் சுகமாய்..
  காயங்கள் சுகமாய்..
  வெருட்டுதல் சுகமாய்..
  வழியும் ரத்தம் கூட சுவையாய்..//

  ரசனையான அழகு வரிகள் தேனக்கா கவிதை மொத்தமும் பிடிச்சிருக்கு...

  பதிலளிநீக்கு
 4. \\வாழ்வது ஒரு முறை
  வளைத்துப் பிடிப்போம்..
  குற்றுப் படவோ..
  கொற்றம் அடையவோ..\\

  அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 5. ஒரே வீச்சாய் வந்துள்ளது.. nice thenammaiji :)

  பதிலளிநீக்கு
 6. அன்பின் மூர்க்கத்தை ரசித்து, அதை வளைத்துப் பிடிக்க அழைப்பு விடும் அழகுக் கவிதை. நன்று தேனம்மை.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  //வெல்வோமா.
  சாவோமா...
  களத்தின் நடுவில்..
  ஓடி ஒளியாமல்..//

  தன்னம்பிக்கை வரிகள் அற்புதம்.....

  பதிலளிநீக்கு
 8. சில கவிதைகள் என்னைப்போன்ற கத்துக்குட்டிக்கு புரிவது கஷ்டம்.வழக்கம் போல் அருமை.

  பதிலளிநீக்கு
 9. தேனம்மை மேடம்.. வீரியமான கவிதை.
  /வாழ்வது ஒருமுறை
  வளைத்துப் பிடிப்போம்/
  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 10. / வாழ்வது ஒரு முறை
  வளைத்துப் பிடிப்போம்..
  குற்றுப் படவோ..
  கொற்றம் அடையவோ.. /

  அருமையான வரிகள்.. கவிதையும்.. :)

  பதிலளிநீக்கு
 11. எல்லோரிடமும் அன்பு உண்டு.அவரவர்களுக்கேற்ப அன்பைக் காட்டும் விதம்தான் மாறுபடும்.

  பதிலளிநீக்கு
 12. //

  வாலும் அல்ல.,
  தும்பும் அல்ல..
  திமிலும் அல்ல..
  பிடிக்கு எட்டாமல்..
  //

  இந்த சொல்லாடல் நல்லாருக்கு...

  ஆம்...அன்புக்கு ஏது ஆரம்பமும் இடையும் நடுவும். என்றைக்கும் ஒன்று தான்.

  பதிலளிநீக்கு
 13. என்னமாதிரி ஒரு கவிதை அனுபவத்தின் முதிர்ச்சி
  திமில் என்றால் என்ன

  பதிலளிநீக்கு
 14. ஒரு முறை வாழ்க்கையை விளங்கிடாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரிகள்

  வளைத்து பிடித்திடுவோம் ...

  பதிலளிநீக்கு
 15. அருமையான வரிகள்..கவிதை நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 16. அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்

  பதிலளிநீக்கு
 17. \\வாழ்வது ஒரு முறை
  வளைத்துப் பிடிப்போம்..
  குற்றுப் படவோ..
  கொற்றம் அடையவோ..\\

  அருமையான வரிகள். கவிதை நல்லாயிருக்குங்க.

  பதிலளிநீக்கு
 18. அன்பு தவழ்ந்துவரும் எதுவும் அடைக்குந்தாழ் அற்றதுதானே.... அழகான கவிதை...

  பதிலளிநீக்கு
 19. வாழ்வது ஒரு முறை
  வளைத்துப் பிடிப்போம்..
  குற்றுப் படவோ..
  கொற்றம் அடையவோ..

  இந்த சாலன்ஞ் தான் வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
 20. //தழும்புகள் சுகமாய்..
  காயங்கள் சுகமாய்..
  வெருட்டுதல் சுகமாய்..
  வழியும் ரத்தம் கூட சுவையாய்..//

  அழகு வரிகள்,,,
  கவிதை மொத்தமும் பிடிச்சிருக்கு.. தேனக்கா

  பதிலளிநீக்கு
 21. நன்றி கோமதி அரசு.,வெற்றி., கோபி., அஷோக்., ராமலெக்ஷ்மி., தினேஷ் குமார்.,ஆசியா., மோகன்.,குமார்., வினோ., ஹேமா ( உண்மை ஹேமா)., அதுசரி., யாதவன்., சசிகுமார்.,ஜமால்., சை கொ ப., ஜெரி.,ஜிஜி., ஸ்ரீராம்., தியாவின் பேனா., குத்தாலத்தான்., அம்பிகா.,பாலாசி.,டி விஆர்., முனியப்பன் சார்., ஸாதிகா

  பதிலளிநீக்கு
 22. நன்றி கோமதி அரசு.,வெற்றி., கோபி., அஷோக்., ராமலெக்ஷ்மி., தினேஷ் குமார்.,ஆசியா., மோகன்.,குமார்., வினோ., ஹேமா ( உண்மை ஹேமா)., அதுசரி., யாதவன்., சசிகுமார்.,ஜமால்., சை கொ ப., ஜெரி.,ஜிஜி., ஸ்ரீராம்., தியாவின் பேனா., குத்தாலத்தான்., அம்பிகா.,பாலாசி.,டி விஆர்., முனியப்பன் சார்., ஸாதிகா

  பதிலளிநீக்கு
 23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 25. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 26. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...