செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்னும் இளமையாய்...

தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,

அரும்பு மீசை ஆண்களாய்..,
கணவர் கனவான்...
அலுவலக அலுவலில் ..
எல்லாம் முதிர்ந்த இக்கணமும்
அன்பும் ., காதலும்., பாசமும்.,
மோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு..

29 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

இவ்வளவு அழகா, உங்களை தவிர வேறு யாரால் எழுத முடியும்.

வினோ சொன்னது…

உங்க அனுபவம் மிளிருது.. உங்க மனதில் இருக்கு இளமை எழுதகளில்...

காவேரி கணேஷ் சொன்னது…

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்ற சொல்லே அறியாதது.

Muniappan Pakkangal சொன்னது…

Innum ilamaiyaai-kuduthu vaitha vaalkai,congrats Thenammai.

asiya omar சொன்னது…

ம் அப்புறம் தேனக்கா..இப்படி ஆர்வத்தை தூண்டலாமா?

சே.குமார் சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு அக்கா...
எதார்த்தமான கவிதை.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

வாவ்.. ரொம்ப அருமை தேனக்கா.. இதுதான் வாழ்க்கை..

Chitra சொன்னது…

Sweet! Its a blessing! :-)

ஹேமா சொன்னது…

மனம் இளமையாய் இருக்கிறது தேனக்கா.அதேபோல் பாசமும் இளமையாய் இருக்கும் எங்களைப்போல.

Balaji saravana சொன்னது…

அன்பும் காதலும் நரைநீட்டிக் கொள்ளுமா என்ன?
அருமை அக்கா! :)

நாய்க்குட்டி மனசு சொன்னது…

வயது ஏற ஏற, உடலும் மனமும் முதிராமல் இருப்பதை பெருமையாய் நினைத்த காலம் போய், வயதும் மனமும் ஒரு சேர வளர்வது தான் சரியான வளர்ச்சியோ? இது குறை வளர்ச்சியோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பிக்கிறது.

சசிகுமார் சொன்னது…

அருமை அக்கா வாழ்த்துக்கள்

hema சொன்னது…

Lovely

அ.வெற்றிவேல் சொன்னது…

////அன்பும் ., காதலும்., பாசமும்.,
மோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு////

நல்ல விசயம் தான் தேனம்மை.. உடலுக்கு தான் வயது முதிர்ச்சி.. மனதுக்கு இல்லை..பாஸிட்டிவா பாருங்கள்..

Discovery book palace சொன்னது…

நல்ல வரிகள் அக்கா! உணர்வுபூர்வமானது,

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

அன்புக்கு வயசு என்னங்க...........அருமை....அருமை....வாழ்க்கை......அது தெளிந்த நீரோடையாக இருக்கும் போது இப்படித்தான் மனது குதூகலிக்கும். இதுதான் அமைதி.........வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல சிந்தனை. இனிதான வாழ்க்கை. நன்றி அக்கா.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வழக்கம்போல் அசத்துறீங்க!!

ஹுஸைனம்மா சொன்னது…

இப்படி இளமையும் இனிமையுமா கவிதை வடிச்சா, படிக்கிற எல்லாருந்தான் இளமையாவே இருப்பாங்க.

sakthi சொன்னது…

இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு..

நல்லாயிருக்குங்க தேனம்மை

வரிகளை கோர்த்திருக்கும் விதம்

Vel Kannan சொன்னது…

நல்லாயிருக்கு தேனு ,
@rvelkannan@gmail.com

ஸ்ரீராம். சொன்னது…

அன்புக்கும் காதலுக்கும் வயதேது?

யாதவன் சொன்னது…

வாழ்கையின் படிமுறைகளை வாழ்ந்தமுரைகளை அதில் உணர்வு போராடங்களை அழகாய் சொல்லியிருகிரீங்க அம்மா

ஸாதிகா சொன்னது…

கவிதைகளில் மட்டுமல்ல பேச்சிலும் அப்படியே உற்சாகம் கொப்பளிக்கின்றது உங்களிடம் தேனம்மை

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ரமேஷ் ., வினோ., கணேஷ்., முனியப்பன் சார்., ஆசியா., குமார்., ஸ்டார்ஜன்., சித்து ., ஹேமா., பாலாஜி., ரூஃபினா., சசி., ஹேமா., வெற்றி., வேடியப்பன்., முத்து., அக்பர்., சை கொ ப., ஹுசைனம்மா., சக்தி., வேல்கண்ணன்., ஸ்ரீராம்., யாதவன்., ஸாதிகா..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

Gopi Ramamoorthy சொன்னது…

super

கமலேஷ் சொன்னது…

எதார்த்தமான கவிதை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கோபி ., கமலேஷ்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...