எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

இரண்டு இல்லாமல்
எப்போதும் எதுவுமில்லை..
இருப்பு ... இருப்பின்மை..
உளதாய் ., இலதாய்..

நட்பு., பிரிவு
அன்பு., க்ரோதம்.,
ஆதரவு., அலட்சியம்.,
எழுத்து ., விமர்சனம்...

வெளி வெறுத்து
நிஜம் போலான ஒரு உருவில்.,
மௌனப்பேச்சில் நிம்மதி..
கஞ்சாக்காரனின் உலகமாய்..


கலையக் கலைய
போதை தேடி
கைகள் பதற முகர்ந்து
முயங்கி மயங்கி..

வீட்டுச் சுவரோரமோ.,
அலுவலகச் சந்தோ.,
எழுத்துக் குப்பைகளோடு...
எண்ணப் புழுதியோடு.,.

ஒன்றல்ல பல போதை..
அங்கீகாரம்.. மேதமை.,
பாராட்டு., சமயத்தில்
லேசான ப்ரியம் கூட..

நட்பும் புகழும் அதி போதையாகி
அனைவரையும் அதிரடிக்க
திரும்பத் திரும்பத் தேடும்
வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

32 கருத்துகள்:

 1. //
  ஒன்றல்ல பல போதை..
  அங்கீகாரம்.. மேதமை.,
  பாராட்டு., சமயத்தில்
  லேசான ப்ரியம் கூட..
  //

  ஆம் எல்லாமே மயக்கம் தரும் விஷயம் தான்

  நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
 2. இப்போ வாழ்க்கையே வெர்ச்சுவல் உலகத்தில்தானே!!!!

  பதிலளிநீக்கு
 3. //நட்பும் புகழும் அதி போதையாகி//

  உண்மைதான், கவிதை இயல்பாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. பாராட்டும் அங்கீகாரமும் மேதைமையும் எப்படிம்மா virtual satisfaction யில் வருமா? குடும்பம் , வெளி உலகம் இரண்டிலும் அங்கீகாரத்திர்காகத் தானே நாம் எல்லாவற்றையும் செய்கிறோம் ..

  பதிலளிநீக்கு
 5. //
  நட்பும் புகழும் அதி போதையாகி
  அனைவரையும் அதிரடிக்க
  திரும்பத் திரும்பத் தேடும்
  வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்.//
  unmai

  பதிலளிநீக்கு
 6. / நட்பும் புகழும் அதி போதையாகி
  அனைவரையும் அதிரடிக்க
  திரும்பத் திரும்பத் தேடும்
  வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்.. /

  கவிதை அருமை சகோ....
  சில சமயம் நல்லது செய்கிறது, பல சமயம் கெட்டது செய்கிறது..

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. பாரட்டும் புகழும் முன்னேற்றத்தைத் தரவேண்டுமே தவிர கர்வத்தைத் தராமலிருப்பதே நல்லது.நிறைவான உண்மைகள் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 9. //நட்பும் புகழும் அதி போதையாகி
  அனைவரையும் அதிரடிக்க
  திரும்பத் திரும்பத் தேடும்
  வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..//

  இந்த வரிகள் மனதை நன்கு தைக்கின்றன.

  நல்லாயிருக்கு அக்கா

  பதிலளிநீக்கு
 10. வீட்டுச் சுவரோரமோ.,
  அலுவலகச் சந்தோ.,
  எழுத்துக் குப்பைகளோடு...
  எண்ணப் புழுதியோடு.,.


  .....அக்கா, எவ்வளவு சரளமாக உங்களுக்கு கருத்துக்கள், கவிதையாக வருகிறது..... superb !

  பதிலளிநீக்கு
 11. ////இரண்டு இல்லாமல்
  எப்போதும் எதுவுமில்லை..
  இருப்பு ... இருப்பின்மை..
  உளதாய் ., இலதாய்..

  நட்பு., பிரிவு
  அன்பு., க்ரோதம்.,
  ஆதரவு., அலட்சியம்.,
  எழுத்து ., விமர்சனம்...////

  அருமை அக்கா... அழகா பிரிச்சு சொல்லியிருக்கீங்க.. :-)))

  பதிலளிநீக்கு
 12. தேனம்மை மேடம்.. கவிதையை ரசித்தேன். வலியும், ரணமும்,சின்ன சோகமுமே சுகமான கவிதையைத் தரும் போலும் ..

  பதிலளிநீக்கு
 13. கவிதையேத் தரும் போதை
  அதனை வடிப்பவர்க்கும்;
  அதனைப் படிப்பவர்க்கும்....
  அதனாற்றான் உண்டானது
  எதுகை மோனை என்ற சூத்திரம்
  இதுவே யாம் படித்த யாப்பின் சாத்திரம்.
  கவிதை எழுதும் போதும் போதை;
  அதனின் பாராட்டைப் பெறும் பொழுதும் போதை; இதுவே கவிஞனின் எதிர்பார்ப்பென்னும் போதை

  இதனை சொல்ல விட்டதனால்
  ஈண்டு நினைவுபடுத்தினேன்

  பதிலளிநீக்கு
 14. கவிதையேத் தரும் போதை
  அதனை வடிப்பவர்க்கும்;
  அதனைப் படிப்பவர்க்கும்....
  அதனாற்றான் உண்டானது
  எதுகை மோனை என்ற சூத்திரம்
  இதுவே யாம் படித்த யாப்பின் சாத்திரம்.
  கவிதை எழுதும் போதும் போதை;
  அதனின் பாராட்டைப் பெறும் பொழுதும் போதை; இதுவே கவிஞனின் எதிர்பார்ப்பென்னும் போதை

  இதனை சொல்ல விட்டதனால்
  ஈண்டு நினைவுபடுத்தினேன்

  பதிலளிநீக்கு
 15. கவிதையேத் தரும் போதை
  அதனை வடிப்பவர்க்கும்;
  அதனைப் படிப்பவர்க்கும்....
  அதனாற்றான் உண்டானது
  எதுகை மோனை என்ற சூத்திரம்
  இதுவே யாம் படித்த யாப்பின் சாத்திரம்.
  கவிதை எழுதும் போதும் போதை;
  அதனின் பாராட்டைப் பெறும் பொழுதும் போதை; இதுவே கவிஞனின் எதிர்பார்ப்பென்னும் போதை

  இதனை சொல்ல விட்டதனால்
  ஈண்டு நினைவுபடுத்தினேன்

  பதிலளிநீக்கு
 16. தேனக்கா அருமை.ஒவ்வொரு வரியும் பாராட்ட்ப்படவேண்டியது.

  நட்பு., பிரிவு
  அன்பு., க்ரோதம்.,
  ஆதரவு., அலட்சியம்.,
  எழுத்து ., விமர்சனம்...

  நிஜம், நிஜமே!

  பதிலளிநீக்கு
 17. உண்மையான கருத்து. இரு நிலைகளில் தொடங்கி பல நிலைகளை விளக்கும் அழகிய கவிதை.

  பதிலளிநீக்கு
 18. தேனம்மை..கருத்தினில் உதிப்பதை இத்தனை சுலபமாக ,சாதுர்யமாக கவிதையாய் வடித்து ஆச்சரியப்பட வைக்கின்றீர்களே.சபாஷ்..

  பதிலளிநீக்கு
 19. கவிதை அருமையாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் அம்மா
  //ஒன்றல்ல பல போதை..
  அங்கீகாரம்.. மேதமை.,
  பாராட்டு., சமயத்தில்
  லேசான ப்ரியம் கூட..

  நட்பும் புகழும் அதி போதையாகி
  அனைவரையும் அதிரடிக்க
  திரும்பத் திரும்பத் தேடும்
  வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..//

  நான் தங்கள் பதிவுக்கு புதியவன்
  பதிவுக்கு மட்டுமல்ல பதிவுலகிற்கே
  தங்கள் படைப்புகள் மேன்மேளும் வளர வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 21. நன்றி வேலு., சசி., அருணா., சை கொ ப., வெற்றி ( உண்மைதான் .. அதுவே நம்மை நம் குடும்பத்தினர் புகழ வேண்டி செய்வதுதானே)., கார்த்திக்., வினோ., ஜமால்., கலாநேசன்., ஹேமா., மேனகா., அக்பர்.,சித்து., வேடியப்பன்., நேசன்.,ஆனந்தி., மோஹன் ஜி ., கலாம்., தங்கமணி., ஆசியா., முனியப்பன் சார்.,ஸ்ரீராம்., ஸாதிகா., ஜிஜி., தினேஷ்குமார்.,

  பதிலளிநீக்கு
 22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...