எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்மா...அருமை அம்மா

அன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..

நாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.?

தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!


காலையில் அலாரம் வைத்து எழுந்து, ஸ்டவ்வில் தண்ணீர் வைத்து ஹார்லிக்ஸ் கலந்து குடித்து, படிக்க அமர வேண்டும். வாசலில் கோலமிட வேண்டும். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ படிக்கும் போது நம் துணியை நாமே துவைத்து உலர்த்தப் பழகிக் கொள்ள வேண்டும். புத்தக., துணி அலமாரியை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். உடல் சுகாதாரம்., பாத்திரபண்டங்களை நன்கு பராமரிப்பது., சமையல்., உணவுப் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பக்குவம் செய்து உரிய நேரத்துக்குப் பயன்படுத்துவது., சமையலறை சுத்தம்., வீட்டின் சுத்தம்., கைவேலைகள்., பின்னல்கள்., குழந்தைகள் பராமரிப்பு., கை மருந்து இவையெல்லாம் போக கவி எழுதும் திறனும் கைவரப் பெற்றது அம்மாவால்தான்.

பிள்ளை பெற்ற சமயத்தில் எண்ணெய்த்தண்ணீர் ஊற்றிவிட என்று முத்தியக்கா என்று ஒரு அக்கா வருவார்கள். ஒரு முறை அம்மா இல்லாத தினத்தில் வந்த போது குழந்தையை வைத்துக் கொள்ளவும் ., எனக்கான குளியலுக்கு தயார் செய்யவும்., வெந்நீர்., காய்ச்சிய எண்ணெய்., வாசனைப்பொடி., சாம்பிராணி., கை மருந்து., குளித்தவுடன் ஹார்லிக்ஸ்., என தயார் செய்வதற்குள் களைத்து விட்டது.. அப்போது அந்த அக்கா சொன்னார்கள்., தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது என்று .. உண்மைதான் தாய் செய்வதை யாரும் செய்ய முடியுமா என்ன..?

கண்டிப்போடு அன்பு செலுத்தினாலும் சில சமயம் அம்மா கோபத்தில் பேசாமலிருந்தால் எனக்கு உலகமே நின்றுவிடும். அந்தக் கண்டிப்பான பேச்சாவது கிடைக்காதாவென..! அன்பையும் பாராட்டையும் அம்மா பிரசாதம் போலக் கொஞ்சமாக தந்ததால் இன்னும் இன்னும் எனத் தேடிக்கொண்டே இருக்கிறது மனது.

பிரசாதம் உயர்வானது அல்லவா? அமிர்தம் சிறிது கிடைத்தாலென்ன.. அதிகம் கிடைத்தாலென்ன..?

இன்னும் கூட அம்மாவை மறக்காத நேரமிருக்காது. என் எல்லா செயல்களின் நேர்த்தியிலும் அம்மா இருக்கிறார்.. தனியே வேலைக்கு ஆள் இல்லா ஊர்களிலும்., முன்பே எல்லா வேலைகளையும் அம்மா கற்பித்ததால் சமாளிக்க முடிந்திருக்கிறது.

உடல் பலமும் மனோ பலமும் இறைபக்தியும் அம்மாவிடம் கற்றுக் கொண்டது அதிகம். எந்தச் சூழ்நிலையிலும் கலங்காமல் சிந்தித்து முடிவெடுப்பது அம்மாவின் வரம்!

ஷேர் பிஸினஸ் செய்வது ., கோயில்களுக்கு அளிப்பது., வசதியற்ற குழந்தைகளுக்கு படிப்பு., திருமண உதவி செய்வது என அம்மா எப்போதும் ஏதாவது செய்து வியக்க வைத்துக் கொண்டே இருப்பார். இது நாம் கற்றுக் கொள்ளவும் உதவும்.

இப்போது கூட கிரிஜாம்மாவையும் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையையும் பற்றித் தெரிந்து., “ உன் திறமையைக் கண்டு பிடித்துவிட்டார்கள்” என்று பாராட்டினார்கள். “ பரவாயில்லை.. இந்த வயதிலும் முயற்சி எடுத்து லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையில் ஏதோ எழுதிக்கிட்டு இருக்கியே., நல்லது நல்லா செய் .” என என் அம்மா என்னை வாழ்த்தியது என் வாழ்நாளுக்கான சாதனையாக நினைக்கிறேன்.. ஏன்னா அம்மாவிடம் இருந்து பாராட்டு வாங்குவது ஆஸ்கார் வாங்குவதற்குச் சமம்..

“நம்ம மனுஷா குறையத்தான் சொல்வா (திருத்திக் கொள்ள) .. பிற மனுஷாதான் பாராட்டுவா “ என்பார். பல வருடம் கூட்டுக் குடும்பத்தில் மாமியார்., நாத்தனார்., கொழுந்தனார் அனைவரையும் அரவணைத்து எங்களுக்கான அன்பும் கனிவும் பாசமும் கொண்டிருந்தாலும் அம்மா கடலுள் மூழ்கி இருக்கும் பனிமலை போல்.. வெளியே தெரியும் பனிப்பாறை அளவுதான் அன்பு வெளித்தெரிந்தாலும் அவர்களை முற்றிலும் உணர்ந்தவர்கள் அவர்கள் அன்பின் பிரம்மாண்டத்தை உணர்வார்கள்.

ஆம்... அம்மா என்றால் அன்பு..! பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப் பயன்தானே.. !

இது செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது..

26 கருத்துகள்:

 1. தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!]]


  அருமை தேனக்கா ...

  அம்மாவை பற்றி சொல்லி சொல்லில் அடக்க முடியுமா என்ன ...

  பதிலளிநீக்கு
 2. அம்மாவை பற்றி அழகாய் சொன்னீர்கள் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 3. சும்மா எண்டு பிளாக்கர் பெயர வைச்சிட்டு அம்மா பற்றி கலகிரிங்க

  பதிலளிநீக்கு
 4. Ladies special

  ஆன் லைனில் இ பேப்பர் போல மாற்ற முயற்சி செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 5. அம்மா என் முதல் வார்த்தை
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 6. /ஆம் அம்மா என்றால் அன்பு பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப் பயந்தானே..!//


  நீங்கள் சொல்வது உண்மைதான் தேனம்மை.

  வாழ்த்துக்கள்! லேடீஸ் ஸ்பெஷலில் வந்துள்ளதற்கு.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் தேன்.
  அம்மாவை மீண்டும் உணர வைக்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 8. //ஆம்... அம்மா என்றால் அன்பு..! பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப் பயன்தானே.. !
  //
  முற்றிலும் உண்மை

  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 9. தித்திக்கும் அன்பு.

  அன்பு அம்மாவிடம் ஆசிபெற்ற உங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. //ஆம் அம்மா என்றால் அன்பு பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப் பயந்தானே..!//
  அருமை
  வாழ்த்துக்கள் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 11. அவர்கள் போட்ட விதை. நாம் முளைத்தோம். கனி தரும் மரமானாலும் மகிழ்வாள். கள்ளிச் செடியாய் கசந்து மலர்ந்தாலும் நேசிப்பாள். வாழ்க நம்மை பெற்றவர்கள்.

  பதிலளிநீக்கு
 12. சும்மா பதிவு இல்லை அம்மா பதிவு...

  சும்மா சொல்லாகக் கூடாது அம்மாவை பற்றி சும்மா சூப்பரா எழுதி இருக்கீங்க தேனக்கா வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் அன்னையைப்பற்றி.

  பதிலளிநீக்கு
 14. அம்மான்னா அம்மாதான்.அக்கா லேடிஸ் ஸ்பெஷலில் முன்பே படித்து விட்டேன்.என் அம்மாவை பற்றி எஞ்சிய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 15. அம்மாவின் அன்பு அமிர்தம்தான்.

  அழகாகச் சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 16. நானும் லேடீஸ் ஸ்பெஷலில் படித்தேன் அம்மா. கட்டுரை அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் அக்கா

  வாழ்த்துக்கள்! லேடீஸ் ஸ்பெஷலில் வந்துள்ளதற்கு.

  பதிலளிநீக்கு
 18. நன்றி ஜமால்., சை. கொ. ப., சசி., குமார்., யாதவன்., ஜோதிஜி., கார்த்திக்., தியா., கோமதி அரசு ., வல்லிசிம்ஹன்., வேலு., மேனகா., மாதேவி., ரிஷபன்., அம்பிகா., வினோ., ரமேஷ்,., கனி., ஸாதிகா., ஆசியா., சுந்தரா., விஜய்., ஜிஜி., கமலேஷ்.,

  பதிலளிநீக்கு
 19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...