எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அம்மா - ஒரு பார்வை.





இந்நூலில் மூன்றுவிதமான அம்மா பேசப்படுகிறார். தேசம் என்னும் அம்மா, பிரவீன் நவின் என்னும் நாயகர்களின் அம்மா சரஸ்வதி,. அண்ணியாக வந்து குடும்பத்தையே அம்மாவாக மாறி ரட்சிக்கும் சாந்தா.

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 ஜெயங்கொண்டத்தில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அம்மாவின் அறுபத்தெட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்குப் புடவை பரிசாக வழங்கப்பட்டது. 100 புடவைகள் இருக்கலாம். டோக்கன் வழங்கப்பட்டு சுமார் பத்துமணி அளவில் அவர்கள் அனைவரும் அங்கே மடைப்பள்ளி அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள்

சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது  நம் உறவினர்  விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.

சனி, 20 டிசம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், மூன்றுதாய்க்கு ஒரு மகன் முத்துராமலிங்கம் சுப்ரமணியன்

சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள்
எமக்குச் சூட்டினாய்.
சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய். !.
விழியோடு நீ
குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமாலை. !

Love You Amma. !

என் முகநூல் சகோதரர் & நண்பர் முத்துராமலிங்கம் சுப்ரமணியத்தின் முகநூல் பகிர்வு இது. குழந்தையைப் போன்ற அழகான புன்னகைக்குச் சொந்தக்காரர்.  அமெரிக்க மண்ணில் கோலோச்சி வரும் அவருக்குத் தற்போதுதான் திருமணமாகி இருக்கிறது.தலை தீபாவளிக்கு மனைவி கையால் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிட்டிருந்தார். காதெல்லாம் புகை வந்தது நமக்கு. :) அப்புறம் இன்னொரு நாள் சமைத்த உணவுகள் புகைப்படம் ( அவரே செய்தாரா தெரியல >> :)  ) போட்டிருந்தார். பார்த்துப் பலர் மிரட்சியடைந்ததாகக் கேள்வி. ! :) அப்போது அதை எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லி நாங்க தேற்றினோம். :) ( ஹிஹி சிண்டு முடிய பலமா முஸ்தீபு செய்றேன் >:) அங்கே அவரது அம்மா டாலி பாலாவும் கமெண்ட் போட்டு தேற்றி இருந்தார்கள். ! :)

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. டாலி பாலா முகநூல் மூலம் அறிமுகமாகியவர். அடக் கடவுளே நான் உண்மையிலேயே அவரோட அம்மான்னுல்ல நினைச்சிருந்தேன். !. எல்லா ஃபோட்டோவிலும் கமெண்டுகளிலும் பார்த்தால் இவர்தான் அவங்க பிள்ளைன்னு சத்தியம் அடிச்சி சொல்லலாம். அப்பிடி ஒரு முக ஒற்றுமை. !!!!!!!!

வியாழன், 12 ஜனவரி, 2012

என் அன்பின் அம்மாவுக்கு..

எங்களுக்காய்
கடவுள் அனுப்பிய தேவதையே..
அன்பெனும் குடுவையான அழகியே..
உன் உதிரத்தைப்
பாலாக்கி உரமூட்டியவளே..

வீட்டினுள் இருக்கும்
விளையாட்டுத் தோழி நீ..
வேதனையில் சாயும் போது
போதி மரம் நீ..

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாய் மரம்...



தாய் மரம்..
********************
முலைகளும் யோனியும்
முளைத்த மரங்கள்
யோசித்ததே இல்லை
தாம் ஏன் சுமப்பதென..

வெள்ளி, 17 ஜூன், 2011

சத்தம்...

சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்மா...அருமை அம்மா

அன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..

நாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.?

தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!

புதன், 8 செப்டம்பர், 2010

அம்மா....

அம்மாவின் புன்னகை.. ம்ம்ம் பூக்கள் என்று சொல்லலாம். சட்டென்று வாடிவிடுவதாலும்.. செல்லும் வழியில் நியானின் கோலங்கள் முகமெங்கும் கோடிழுத்துக் கொண்டிருந்தன வண்ணத்தில்.. எத்தனை வருடம் இப்படியே எங்களைப் பற்றிய சிந்தனையில் .. நெற்றிச் சுருக்கம் கூட அதிகமாகி..

எதைச் சொல்லவேண்டும் .. எப்போது சொல்ல வேண்டும் .. எப்படி சொல்ல வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக் கொண்டது.. சொல்லாமல் உணர்த்துவது கூட..

முழுமையான சரணாகதி என்பதன் அர்த்தம் அம்மா.. குழந்தைகளுக்கும் ., கணவருக்கும்..

ஞாயிறு, 9 மே, 2010

என் அம்மா

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நமக்கு மட்டுமேயான அம்மா

கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......

தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...

கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...

திங்கள், 28 டிசம்பர், 2009

ஒப்பனை

அதிகம் ஜரிகை அடைத்த
பட்டுக்களுடனும் நகைகளுடனும்
வலம் வரும் நான்...
ஒரு போதும் முயன்றதில்லை
முகம் மறைக்கும் ஒப்பனைக்கு...
தலைவாரி பூச்சூடி வகிட்டிலும்
நெற்றியிலும் பொட்டிடுவதுடன்
முடிந்துவிடும் என் அலங்காரம்...

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

வியாழன், 3 டிசம்பர், 2009

இசைவு பிடிமானம்

நிலவு மரத்திலிருந்து
நட்சத்திரங்கள் விடியலில்
பழுத்த இலையாய்
உதிர்ந்து....

ஜன்னல் கம்பிகளுக்குள்
பறக்கவியலா பறவையாய் ...
வீடென்ற கூட்டுக்குள்...

குழந்தைகள் பறவைகளாக
பரந்த வானத்தில்
விரிந்த இறக்கைகளுடன்....
வெறுங்கூடாகிப் போனது வீடு....

முந்தானைக்குள்
முடிச்சிட்டு இருந்தேன்
தொட்டுப் பார்த்தால்
வெறும் முடிச்சு மட்டும்...

இராணித்தேனீயும்
வேலைக்காரத்தேனீயுமாய் நானிருக்க
ஆண்தேனீக்கள் அலைச்சலில்
அவரவர்க்கான தேடலில்....

புதன், 29 ஜூலை, 2009

அம்மாவின் அன்பு

நான்கும் ஒன்று என்று சொன்னாலும்
சில சமயம் தெரிந்துவிடுகிறது
அம்மாவின் தனிப்பட்ட அன்பு.

ஒரு தட்டில் மட்டும் வீழும்
அதிகப்படியான முருகலும் வறுவலும்.

எந்த ஒரு தனித் திறமையும் வெல்வதில்லை
அவளின் மனச் சூலின் தேனை அருந்த
அவளாக மனம் வைத்தால் உண்டு.

திங்கள், 27 ஜூலை, 2009

குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

சிறகை இழந்த பறவைகள்
ஒரு போதும் பறக்கவே முயல்வதில்லை,
சிறகு வளர்ந்த பின்னும்.

இருப்பதற்கும் இரைப்பைக்கும்
இறகை சிறிது அசைப்பது தவிர
உயரப் பறக்க இசைவதில்லை
உள்ளமெல்லாம் பறந்தாலும்.

Related Posts Plugin for WordPress, Blogger...