எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜூலை, 2009

குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

சிறகை இழந்த பறவைகள்
ஒரு போதும் பறக்கவே முயல்வதில்லை,
சிறகு வளர்ந்த பின்னும்.

இருப்பதற்கும் இரைப்பைக்கும்
இறகை சிறிது அசைப்பது தவிர
உயரப் பறக்க இசைவதில்லை
உள்ளமெல்லாம் பறந்தாலும்.


குழந்தைக்கான கூடும்
குடும்பக் கண்ணியமும் காத்து நிமிர்கையிலே
முறிந்து வீழ்கிறது பால்யமும் பேரிளமையும்.

குழந்தைத் தொழிலாளிகள் இல்லை
இவர்கள் குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

7 கருத்துகள்:

  1. குழந்தை வளர்ப்புத் தொழிலாளர்கள் - பால்யமும் பேரிளமையும் இழந்தவர்கள் - இருப்பதற்கும் இரைப்பைக்கும் மாடுமே சிறகை அசைக்க முடிகிறது. என்ன செய்வது - சில சமயங்களில் இது மாதிரி ஆகி விடுகிறது - காலம் மாறும்

    நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. உண்மை சீனா ஸார்
    உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...