எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2009

விடுதலை

பேரன்பே பெருநெருப்பாம்
மானிடர்க்கு

அன்பு கூட வலைதான்
பறக்க இயலாதபோது

சொடுக்கும் வார்த்தைகளால்
இளம் பறவைகள்
தாய்ப்பறவையைச் சீறும்

மூச்சடைக்க வைப்பதுபோல்
அன்பால் அழுத்தாமல்
சிறிது சுயம் தேடிச் செல்லட்டும்,
அதன் வானில் பறக்கட்டும் என
நாம் விட்டு விடுதலை ஆகிடல் வேண்டும்

நாம் சுமந்த பறவைகள்
நம்மை மனதில் சுமந்தபடி ,
நீள்வானில் ஆனந்தமாய்

3 கருத்துகள்:

 1. உண்மை உண்மை - அயலகங்களில் இவை சர்வ சாதராணமாய் நடக்கும் - நமது கலாச்சாரம் வேறு - அன்பெனும் கூட்டுக்குள் அடைத்து வைத்து அவர்களைப் பறக்க விடாமல் செய்யும் வழக்கம் மாற வேண்டும். மாறும் - நிச்சயம் மாறும்.

  நாம் சுமந்த பறவைகள் நம்மை மனதில் நிச்சயம் சுமக்கும்

  நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...