எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2009

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

ஈழப்போரையும்
ஈராக் யுத்தத்தையும்.
நாமென்ன விமர்சிப்பது

நம்மிடமே உண்டு
குத்தீட்டீக் கண்களும்
கொடு வாளாய் நாக்கும்

அஹிம்ஸா தேவதை அவதாரம்
உடல் மொழியாலே உதறித் தள்ளுவோம்
ஒருவரை அறியாமலே.

வெறுப்பெனும் கறுப்பணிந்து கடுப்பேற்றுவோம்
விரும்பியே கூட இருந்தாலும் வெட்டிச்சாய்க்க
விதவிதமான போர்வாள்கள்
நம்மிடம்.....

இழிந்த பார்வை,
நெளிந்த புன்னகை என
உயிர்க்கொல்லிகள் எக்கச்சக்கம்...


தெரியாமலே வீசப்பட்ட
பெருநெருப்பும் எரிஅமிலமும்
எதிராளியைப் பொசுக்கும்போது
நம்மையும் சேர்ந்து அழிக்கிறது

நட்போ காதலோ உறவோ
வார்த்தைகளில் மட்டுமல்ல
பார்வைகளில் மட்டுமல்ல
உடல் மொழியால் கூடக்
காயம் படாமல் காப்போம்

3 கருத்துகள்:

 1. நற்சிந்தனை நற்போதனை நல்வாழ்த்துகள்

  நட்போ காதலோ உறவோ - வார்த்தைகள் பார்வைகள் உடல் மொழி - எதனாலும் காயம் படாமல் காப்போம் என உறுதி எடுப்போம்.

  மனதுக்குப் பிடித்த கவிதை

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...