எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

அம்மா....

அம்மாவின் புன்னகை.. ம்ம்ம் பூக்கள் என்று சொல்லலாம். சட்டென்று வாடிவிடுவதாலும்.. செல்லும் வழியில் நியானின் கோலங்கள் முகமெங்கும் கோடிழுத்துக் கொண்டிருந்தன வண்ணத்தில்.. எத்தனை வருடம் இப்படியே எங்களைப் பற்றிய சிந்தனையில் .. நெற்றிச் சுருக்கம் கூட அதிகமாகி..

எதைச் சொல்லவேண்டும் .. எப்போது சொல்ல வேண்டும் .. எப்படி சொல்ல வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக் கொண்டது.. சொல்லாமல் உணர்த்துவது கூட..

முழுமையான சரணாகதி என்பதன் அர்த்தம் அம்மா.. குழந்தைகளுக்கும் ., கணவருக்கும்..


மல்லிகையும் மஞ்சளும் குங்குமமும் காற்றில் கலந்து தாய்மையோடு வீசிக் கொண்டிருந்தது வேனில்.. நடு இரவின் ரகசியத்துக்குள் நுழைவது போல் ஆட்களற்ற சாலையில் வழுக்கிக்கொண்டிருந்தது சுமோ..

ஒருவருடன் ஒருவர் பேசாமலே உணர்வின் கணங்கள் கனமாக இருந்தன.. ஆறு மாதம் ஆகலாம் அம்மா வர.. பிரிவின் தவிப்பு .. பக்கமிருந்தால் நினைத்தால் பார்க்கலாம்..

நோய் நொடி என்றால் நமக்கு முன் அம்மாவுக்கு கலங்கிவிடும்.. என்றும் அதிகம் பேசாமல் கூடவே இருக்கும் தன்மையால் ஒரு தனித்துவமான துணைதான் அம்மா...

எப்போதாவது கோபம் வந்தால் ஓரவிழிகள் தெரிவிக்கும்.. அல்லது ஒரு பாராமுகம் மட்டுமே... அதிகம் வார்த்தைகளால் சிதைப்பதில்லை நம்மை .. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே அவசியமானால்தான் அதுவும்.. அதுவே கலங்க அடிக்கும் ..

எதையும் கற்பிக்கவோ., வலியுறுத்தவோ முயன்றதில்லை அம்மா.. அவரவரே கற்றுத் தெளியட்டுமென.. கண்டித்ததில்லை எதற்கும்., யாவரையும்..

எல்லாரின் ரகசியக் கிடங்காக அம்மா.. யாரிடமும் யாரைப் பற்றியும் புறணி கூறாமல்., பெருமை பேசாமல்., குற்றங்குறை சொல்லாமல் எல்லாரையும் அதனதன் படியே ஏற்றுக் கொண்டு..

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து களைத்த சலிப்பும் சுவடும் அவ்வப்போது தென்படும்..

ஏர்ப்போர்ட்டின் கூட்டத்தில் காணாமல் போய்விடுவதுபோல அங்கங்கே பாச மழை.. வாழ்விலும் யாரும் ஒரு எல்லை வரைதான் வர இயலும் என்பதாய் வெளியிலேயே நிறுத்தப்பட்டோம்.. ட்ராலியை அம்மா தள்ளிச் செல்ல யத்தனித்தபோது முன்பே தெரிந்திருந்த ஊழியர் ஒருவர் தானே வந்து அம்மாவை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் முடித்து குடியேற்றப் பகுதியில் விட்டார்.. கைச்சுமையோடு மட்டும் இப்போது அம்மா எங்கள் பக்கத்தில்..

சொல்லவோ தெரிவிக்கவோ வார்த்தைகளற்ற அன்பு கரைந்து கொண்டிருந்தது நொடிகளாய்.. கண்கள் மினுங்கத் தொடங்கின அம்மாவுக்கு.. லேசாய் சிவந்தும்.. முதுமையிலும் தேவதையாய்.. சிவப்பு வண்ணச் சேலையில் .. பாசம் போல் மென்மையாய் ஒரு வாசம் வீசிக் கொண்டிருந்தது சூழலிலும்..

கை பிடித்து அழுத்திக் கொண்டபின் பிரிய இயலாமல் பிரிந்து கையசைத்துக் கொண்டே குடியேற்றப் பகுதிக்கு சென்றார்கள் அம்மா.. சிறு குழந்தைகளைப் போல கையசைத்துக் கொண்டிருந்தோம்..

கனமாகி சுமக்க இயலா இதயத்தோடு.. திரும்ப வேனில் அமர யத்தனித்த போது கணவர் அவரின் அம்மா இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தார்.. அம்மாவின் சுவாசம் எங்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது..

டிஸ்கி:- பெஸ்ட் கதை சொல்லின்னு அஹமத் இர்ஷாத் எனக்கு ஒரு அவார்டு கொடுத்து இருந்தார்.. மனசு கேக்கலை.. அதை உண்மையாக்க ஒரு கதை எழுதி இருக்கேன் .. நல்லா இருக்கா மக்காஸ்.. கதையா அல்லது டைரியான்னு எல்லாம் கேக்கக்கூடாது.. மக்காஸ்

22 கருத்துகள்:

 1. கதையா!! உண்மை சம்பவம் என்று நினைத்தேன்!!

  பதிலளிநீக்கு
 2. அம்மா என்கிற அந்த உறவுக்குள் எண்ணங்கள் எண்ணில்லாமல் வந்துதிக்கும் தேனக்கா.உங்கள் உதிப்பு அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. //நோய் நொடி என்றால் நமக்கு முன் அம்மாவுக்கு கலங்கிவிடும்.. /
  /
  பாசத்தின் உருவமே அம்மா தான் கண்ணீருடன்.........

  பதிலளிநீக்கு
 4. நல்லா இருக்கு அக்கா!
  நெகிழ்ச்சியா இருக்கு

  பதிலளிநீக்கு
 5. இது கதையாக தெரியவில்லை...உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்ட
  பாசத்தின் தொகுப்பாகவே தெரிகிறது...

  பதிலளிநீக்கு
 6. ரொம்ப நல்லா இருந்ததுங்க..
  வழியனுப்பும் அம்மாவின் விழிகளை வரிகளாக்கி விட்டீர்கள்.
  ரொம்ப பிடிச்ச பதிவு.

  பதிலளிநீக்கு
 7. //கதையா அல்லது டைரியான்னு
  எல்லாம் கேக்கக்கூடாது.. மக்காஸ்//

  சரி கேட்கலை

  பதிலளிநீக்கு
 8. கதையிலும், கவிதை தன்மை வந்துவிடுகிறது.
  ஒரு வேளை அது தான் தேனம்மை அவர்களின் சிறப்போ.

  பதிலளிநீக்கு
 9. இங்கே பார்ரா, விருத முதல்ல வாங்கிட்டு அப்பறம் கதை எழுதுறதை

  பதிலளிநீக்கு
 10. அக்கா, கவிதை மட்டும் இல்லை - கதையும் நல்லா எழுதுறீங்க.... அடிக்கடி எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 11. நல்லா இருக்கு அக்கா!
  நெகிழ்ச்சியா இருக்கு

  பதிலளிநீக்கு
 12. அம்மா , இந்த உறவை பற்றி எங்கு பார்த்தாலும் , படித்தாலும் நெகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது ,அருமை

  பதிலளிநீக்கு
 13. இது போன்று கதையும் அடிக்கடி எழுதுங்க. நல்லாயிருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 14. இது கதையா அல்ல பாசத் தொகுப்பா எதுவாக இருந்தாலும் அருமையான் சொற்சித்திரம் வாழ்த்துகள் வெற்றி

  பதிலளிநீக்கு
 15. எதைச் சொல்லவேண்டும் .. எப்போது சொல்ல வேண்டும் .. எப்படி சொல்ல வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக் கொண்டது.. /////

  இது நல்ல விசயம், உண்மை கதை உங்கள் உணர்வுகளின் கதை

  பதிலளிநீக்கு
 16. நன்றி சை கொ ப., ஹேமா.,சசி., பாலாஜி.,நேசன்., ஜமால்., வெறும்பய., கமலேஷ்., நசர்., கீதா., ரமேஷ்., ரூஃபினா., ஜெய்., சித்து., வேல்கண்ணன்., குமார்., சுனில் கிருஷ்ணன்., அக்பர்., வெற்றி., சௌந்தர்.,

  பதிலளிநீக்கு
 17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...