வியாழன், 2 செப்டம்பர், 2010

காலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்.. எனது பார்வையில்.நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்..சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்.. இது காலச்சுவட்டின் வெளியீடு..விலை ரூ. 60/-
வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும்., வாழ்வியல் துயரங்களும்., புலம்பெயர் நிலையும்., எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும்., தணிக்கவியலா தனிமையும்.,
நட்புக்கான தேடலும் பொங்கிக் கிடக்கிறது.
எரிக்கப்பட்டவர்களையும்., நசுக்கப்பட்டவர்களையும்., அழிக்கப்பட்டவர்களையும்., அவர்களின் வலியையும்., வலுவற்றவர்களாக ஆக்கப்படுவதுமான ஆதங்கம் விரவிக்கிடக்கிறது...
கொழுத்த வெய்யில் ஆதிக்கக்குறியீடாகவும்., வீழும் நிழல் இயலாமையின் குறியீடாகவும்., கோடை எல்லையற்ற வன்மமும் அழிவும் கொண்டதாகவும்.,
விருட்சம் தொன்மையின் பிரதிபலிப்பாகவும்., காற்று புலம் பெயர்தலாகவும்., மழை எல்லா இடத்திலும் பெயரும் இருப்பற்ற இருப்பாகவும்., துயரங்களின் சாட்சியாகவும்., பறவைகள் நிம்மதி இன்மையைக் குறிப்பனவாகவும்., பூக்கள் விள்ளவொண்ணா துயரின் வெளிப்பாடாகவும்., தீ., நெருப்பு., எரிமலை., உக்கிரம் உள்ளடக்கிய உணர்வின் ., இருப்பின் வெளிப்பாடாகவும்., நாகம் ., பாம்பு., வன்முறையின் குறியீடாகவும்., குருடன் ., அந்தகன்., எதுவும் மாற்றவியலா கழிவிரக்கமாகவும்., சுயமும்., காதலும்., தேடலும்., நிம்மதியும் ., நட்பும்., தனிமையும் கொண்டு தாய் தேசத்தில் இன்னும் வாழும் எண்ணற்ற மனிதர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கிறது..
மனிதன் இயற்கையின் நடுநிலையைக் குலைப்பவனாக நடுநிசி தன் பாடலை நிறுத்துவதில் ஆரம்பிக்கும் ரிஷானின் கவிதைகள்., நிலவு தின்னும் நட்சத்திரங்களும்., இருள் விழுங்கும் நிலவையும்., காப்பரணில் கிடத்தப்பெறும் குழந்தை கற்றுக்கொள்ளும் முதல் மொழி குறித்தான கவலையுடன் தொடர்கிறது.
சூறாவளியின் பாடல் ஒப்பாரியாவதும்., அநீதிப் பருக்கைகள் தின்னும் காக்கைகளின் எரிச்சலும்., கோடையின் வன்மமும்., புலம் பெயர்ந்தவர்களாவது நிம்மதியாயிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்புவதும்., கடவுளின் கூற்றுவனை சபித்தும்., ஏழு ஜென்மமும் வதைக்கும் வலி மிகுந்த துயரமும்., உள்ளங்கையில் சிதறவிடும் நினைவின் கணங்களின் சுமையும்., நம்மை தணிக்கவியலா ஏக்கத்துள் தள்ளுகின்றன..
காதலின் ரேகைகள் மழைக்கரமாய் அழைப்பதும்., காத்திருப்பின் தவிப்பும்., மீன்தொட்டித் தாவரம் புலம் பெயர்ந்து கண்ணாடிக்கூண்டுக்குள் சமுத்திரம் தேடும் விழைவும்., சுதந்திரமெனும் மாயமான் தேடுதலின் கனவிலும்., விருட்சம் அறியாப் பூவின் வலியும்., எதையும் சீர்ப்படுத்த வியலா ஏக்கமும்.,
வன்முறையெனும் பாம்பின் வாயில் சிக்கியவர்கள் கலகக்காரர்களாக சித்தரிக்கப்படுவதும்., சாட்சிகளேதுமற்ற மழையில் தெருக்களில் கேள்வி கேட்பாரற்று அழிக்கப்பட்ட மக்களுக்கான துக்கமும்., செவிட்டூமைக்குருடனின் தவிப்பும்., கிழச்சிங்கத்தின் கதையும்., தேவதைகளும் சாத்தான்களும் ஒருமித்துக் கொடியேற்றுவதான கனவும்.,
வார்த்தைகளின் வீச்சம் தாங்கிய கருந்தழும்பும்., இயற்கையை சீரழிக்கும் மனப்போக்கை கண்டிக்கவியலா தன்மையும்., காதலியின் அன்பு நடுகல்லாய் வியாபிப்பதும்.,
புலம்பெயர் நாடோடிப் பறவையின் துயரமும்., ஒருமித்துப் போராடாமல் சிதறிய மழைத்துளியாய்ப் போன ஒற்றுமையும்., பகிரப்படாத அன்பும்., எலும்பு மலைகள் உருவாக்கிய போரின் விளைவும்., அநீதியான குருதிச் செங்கோலும்., மெல்லிசை அழிவதும்., பொம்மைகள் தேசத்தில் அன்பு கூட சலிப்பதும்.,
இரு இனமக்கள் துவேஷமுற்றவர்களாய்ப் பிரிவுற்றதும்., வீழ்தலின் நிழலில் சுயமற்றுப் போவதும்., ஆணாதிக்கத்தில் பெண் வாழ்வும்., சித்தம் பிசகியவனின் கோடையும்., சாகசக்காரியின் வக்கிரமும்., பாவப்பட்ட மனதும்., காவல் நாகமே கொன்றழிப்பதும்., அகதிப் பட்சியின் அவலமும்., விசித்திரக்கூடு கட்டும் அதன் முன்னெச்சரிக்கைத்தனமும்., தாய் தேசம் புதைகுழி வீடானதும்.,
வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் இறப்பும்., பின்னங்கால் வடு ஏந்தும் சொந்தங்களின் நினைவும்., சாம்பல் நிற மரணமும்., வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவனது விரிந்திருந்த விழியின் ஏக்கமும்., காதல் நெருப்பு விழுங்கும் பறவையாய்., முடிவற்ற துர்ச்சாவுகள் முடிவிலியாகவும்., புதியன மோஹித்து பழையன கழிதல் விருட்ச துரோகமாகவும்., குணவிலங்குகளும்.,
வீண்பழி சுமத்திய காதல் எண்ணங்களும்., வண்ணங்களும்., ஊடலாய்., காதலி நிலாத்திருடியாகவும்., நிராகரிப்பின் பெருவலியாகவும்., காதல்., காமமற்ற நட்பும்., பேரன்பின் தேவதையின் வருகையும்., வெற்றியை சூடத்தரும் நேசத்துக்குரிய எதிரியும்.,
தனித்துப் பசித்திருக்கும்சுயமும்., முயன்று தோற்றதும்., அநீதிகள் நிறைந்த செஞ்சாயக் கருங்குருதி ஈழமும்.,
இப்படி என்னைப் புரட்டிப் போட்ட புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை.. ஒவ்வொரு கவிதையும் உள்வாங்கி உருப்படுத்திக் கொள்ள வெகு நேரமாயிற்று எனக்கு..
படித்துப் பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..
என் எண்ணங்களில் தாங்கவொணா பாதிப்பு ஏற்படுத்திய எழுத்து .. பகிர்வு இது...
நன்றி ...அறியத்தந்த அரிய கவிஞர் ரிஷானுக்கும்., இந்தப் புத்தகத்தைப் பரிசளித்த டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்..
டிஸ்கி ..1 :- என்னுடைய இந்த விமர்சனம் இந்த மாதம் வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது..
டிஸ்கி 2 :- செப்டம்பர் 5ம் தேதி திண்ணையிலும் வந்து உள்ளது..

20 கருத்துகள் :

விஜய் சொன்னது…

விமர்சனமே இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியுள்ளது. புத்தகம் வாங்கினால் படித்து புரிந்து கொள்ள நாளாகும் போலிருக்கே.

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,
வெகுவாக ரசித்திருக்கிறீர்கள். :-)
விமர்சனத்துக்கு நன்றி தோழி!

சே.குமார் சொன்னது…

ungal parvaiyil vimarsanam arumai akka.

அஹமது இர்ஷாத் சொன்னது…

விமர்சனம் அருமை தேனக்கா..

Chitra சொன்னது…

அக்கா, உங்கள் விமர்சனம் வித்தியாசமாக இருக்குது.... நல்லா இருக்குது.... :-)

சசிகுமார் சொன்னது…

அருமை அக்கா

ஜெய்லானி சொன்னது…

படிக்க ஆவலை தூண்டிய விமர்சனம்

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

உங்களின் ஒரு பதிவால் தான் வேடியப்பனின் நட்பு கிடைத்தது.

இந்த பதிப்பால்,

எம்.ரிஷான் ஷெரிஃப் அவர்களின் இந் நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரிஷபன் சொன்னது…

விமர்சனமே இத்தனை வீர்யத்துடன் என்றால்..
அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்பதை என்ன ஒரு அழுத்தமாய் சொல்லி இருக்கிறீரகள்..
புரட்டி போட்ட விமர்சனமும் கூட!

அம்பிகா சொன்னது…

\\படித்துப் பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..\\
:-)))
நல்ல பகிர்வு

Mullaimalar சொன்னது…

http://a0.twimg.com/profile_images/692869796/OgAAADOfT0uwVAQcEOL1iNREYHaoCT_inVLyIQa0PJu07jbwSvVrvrxjXeR1LGMu7VVgPDhpYEz_2t8frpv4bHmspNgAm1T1UBJIptrZyXP7VlkRKigCI0DagmNV.jpg


appdina intha poto rishan illaya

ராம்ஜி_யாஹூ சொன்னது…

Thanks Then ji for the review

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

விமர்சனம் அருமை

Ananthi சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா...!

கமலேஷ் சொன்னது…

உடனே வாங்கி படிக்க தூண்டும் படியான அருமையான விர்மசனம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா..

செந்தில்குமார் சொன்னது…

தேனக்கா ம்ம்ம் அருமையான விமர்சனம் ஆவல் அதிகமாகிரது படித்திட....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி விஜய்., ரிஷான்., குமார்., அஹமத்., சித்து., சசி .,ஜெய்., சத்ரியன்., ரிஷபன்., அம்பிகா.,முல்லைமலர்., ராம்ஜி., டி வி ஆர்., ஆனந்தி,., கமலேஷ்., செந்தில்..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்ற்மை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மாதேவி சொன்னது…

அருமையான விமர்சனம்.

ரிஷான் ஷெரீப் வாழ்த்துகள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மாதேவி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...