செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாய் மரம்...தாய் மரம்..
********************
முலைகளும் யோனியும்
முளைத்த மரங்கள்
யோசித்ததே இல்லை
தாம் ஏன் சுமப்பதென..


பறவைகள் உண்டு
வெளித்தள்ளிய எச்சங்களில்
இடப்பெயர்ச்சி அடையாமல்
அங்கங்கு வம்சவிருத்தி

பசியாற்றும் முலைகள்
பழுத்த கனிகளாய்
வழிப்போக்கருக்கும்
கல்லடிப்போருக்கும்

விதை விதைத்தோருக்கு
விரிந்த விருட்சமும்
வினை விதைத்தோருக்கு
வினை எச்சங்களும்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 21.3. 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.:)

9 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

தேனம்மை நம்ம மஞ்சத்திலும் வந்து கொஞ்சம் காலாறுங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் கருத்துச்செறிவுள்ள அருமையான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.

சத்ரியன் சொன்னது…

அட!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த வார குங்குமத்தில் உங்க கதை !!!!!!!!!!!!!! வாழ்த்துக்கள். அப்புறம் விகடன் கவிதைக்கும் வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணினி மஞ்சம்., கோபால் சார்., ரத்னவேல் ஐயா.,கோபால்., சிபி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இரா.எட்வின் சொன்னது…

அருமையாக உள்ளது தேன். முழுமையும் படித்துவிட்டு விரிவாய் எழுதுகிறேன்

இரா.எட்வின் சொன்னது…

மிக அருமை தேன். விரிவாய் எழுத வேண்டும். இன்று அல்லது நாளை எழுதிவிடுவேன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...