திங்கள், 22 ஆகஸ்ட், 2011

விளையாட்டு..

விளையாட்டு.
**************************
கிச்சு கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
கொலை கொலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட

பல்லாங்குழிகளாய்
சிதறிக் கிடந்தது பரவசம்.
பசுக்களை வாரியவன்
சுற்றத் தொடங்கினான்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததென..
தங்கத் துளிகளாய்
மிதந்து கொண்டிருந்தது தேகம்.

டிஸ்கி:- 28.2.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)

11 கருத்துகள் :

Chitra சொன்னது…

lovely....

A.Neelamegam . சொன்னது…

chinna pillaigal vilaiyaattu arumaiya iruku. trouser potta siru pirayathai ninaivu paduthukireergal.

Geetha6 சொன்னது…

பழய விளையாட்டு விளையாடிய ஞாபகம் பிளாஷ் பாக் போல் ஓடுது.

தமிழ் உதயம் சொன்னது…

நினைவுகள் மலர்ந்தது. வாசம் வீசியது கவிதை.

middleclassmadhavi சொன்னது…

:-))

ஸ்ரீராம். சொன்னது…

யாதோன் கி பாராத்!

கிச்சு கிச்சு தாம்பூலமா, தாம்பாளமா...

சே.குமார் சொன்னது…

குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது உங்கள் கவிதை.

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

என்றோ எங்கோ கேட்டது.
குழந்தைப்பருவத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததற்கு நன்றிகள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சித்து., நீலா., கீதா., ரமேஷ்., மாதவி., ஸ்ரீராம்., குமார்., ரத்னவேல் ஐயா., கோபால் சார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...