எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

நோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. போராடி ஜெயித்த பெண்கள் (11)
ஒருவருக்கு உடல்நலக்கோளாறுன்னா என்னவெல்லாம் நீங்க நினைப்பீங்க.. டயபடிஸ்., ப்ளட் பிரஷர் இது மாதிரிதானே.. ஆனால் அரும்பாக்கம் பள்ளித்தலைமை ஆசிரியை லூர்து ராணி அவர்களுக்கு கிட்டத்தட்ட 31 வருடமாக ஹீமோக்ளோபின் கவுண்ட் கம்மி.. பொதுவா இரத்தச்சிவப்பு அணுக்கள் எல்லாருக்கும் 12 இருக்கணும்னா இவங்களுக்கு 4 தான் இருந்தது. அவங்க இதை எதிர்கொண்டு தன்னுடைய ஆசிரியப்பணியையும் செவ்வனே நிறைவேத்தி இருக்காங்க..


லூர்து ராணியோட அம்மா அப்பா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இவருக்கும் ஆசிரியப்பணி பிடித்து விட்டது. அம்மா அப்பாவிடம் இருந்து பங்சுவாலிட்டியைக் கத்துக்க முடிந்தது. 21 வயதில் படிப்பும் திருமணமும் முடிந்து 3 குழந்தைகளுக்கும் 27 வயதில் தாயானார். கணவர் ஜேசுராஜ் கிறிஸ்டியன் கல்லுரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

டெய்லர்ஸ் ரோட்டில் வாடகைக்கு குடி இருந்த போது சேத்பட் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் பணிபுரியும் போது கிட்டத்தட்ட 29 வயதில் அடிக்கடி நடக்க முடியாம ., அசதியா., மயக்கமும் சோர்வுமா வந்தது. மூச்சு வாங்கும். பேசமுடியாது . மாடி ஏற முடியாது. செக் பண்ணா ஹீமோக்ளோபின் இருக்க வேண்டிய அளவை விட ரொம்பக் கம்மியா இருந்துள்ளது. .HAEMOGLOBIC ANEMIA WITH ETILECY - என்ற பாதிப்பால் ஒரே நாளில் 6 முறை ஃபிட்ஸில் நாக்கெல்லாம் வெளியே வந்து கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார்.
மூக்கில் செருகப்பட்ட ட்யூப் வழியாகத்தான் ஆகாரம் எல்லாம். நாக்கு உள்ளே வெடுக் வெடுக்கென்று போனதைக் கூட உணர்ந்ததாக சொன்னார். ரத்தம் ஏத்த முடியவில்லை. ஜன்னி வர ஆரம்பித்துவிட்டது. ஊசி போட்டாக் கை கால் வீங்கிவிட்டது. ஸ்டீராயிட்ஸ் ஏற்றப்பட்டதும்தான் ( வைஃபொலான் 60 மிகி) இவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை அந்த ஸ்டிராய்டின் பலத்தில்தான் செயல்படுகிறார் . மந்த நிலையை வீர்யப்படுத்துகிறது என்றாலும் உயிரைக் காத்த மாத்திரை என்றாலும் ஸ்லோ பாய்சன் போல அது ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். பக்க விளைவுகளாக., டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார்

நன்கு படிக்கும் பிள்ளைகளை ஊக்குவிப்பது., புத்தகம் வாங்க பணம் கொடுப்பது., மேற்படிப்பு படிக்க விரும்பினால் பணம் கொடுப்பது மட்டுமல்ல ஒரு குழந்தை வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டால் தன்னுடைய உணவையும் கொடுத்து விடுவார். தாய் தகப்பன் சண்டை என்றால் சரியாக படிக்காத குழந்தைகளை இனம் கண்டு அவர்கள் குடும்ப சச்சரவை அமைதியாக இணைத்தோ., விருப்பம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு சட்டதின் உதவி கிடைக்கும் படியும் செய்திருக்கிறார்,

1990 கோயம்பேடு கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூலில் பணிபுரியும் போது ஓலை தீப்பற்றி கட்டிடம் முழுமையும் தீ பரவியது. அப்போது முதல் மாடியிலிருந்து இவரும் இன்னொரு ஆசிரியரும் எல்லாப் பிள்ளைகளையும் தப்பிக்கச் செய்து அதன் பின்னர் இவர்களும் குதித்திருக்கிறார்கள். அதில் நான்கு குழந்தைகள் இறந்தது விட்டார்கள் என்றும் மிச்ச அனைவரும் தப்பித்துவிட்டார்கள் என்றும் சொன்னார். ACT OF BRAVRY AWARD INNERWHEEL CLUB ம் ., LIONS CLUB மூலம் ரூபாய் 150 ம் கொடுத்திருக்கிறார்கள்.

டாக்டர் ஷீலா ராணி சுங்கத் சென்னை கலெக்டராக இருந்தார் அப்போது. கபீர் புரஸ்கார் அவார்டுக்காக அவர் இவர் பெயரை பரிந்துரைத்திருந்தார். அவர் ட்ரான்ஸ்ஃபர் அகிவிட்டதால் அது அப்படியே நின்றுவிட்டது.

பள்ளியில் கூட யாருக்கும் உடம்பு சரியில்லை என்றால் லூர்துராணி டீச்சரைப் பார்த்து தைரியமா இருங்க என்பார்களாம். எல்லாரும் பொதுவா விடுப்பு கிடைத்தால் எடுப்பார்கள் . ஆனால் இவர் தனது லீவில் 6 மாதம் மிச்சம் வைத்து இருக்கிறார்.. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா.. இந்த ஆகஸ்ட் 2010 அன்றும் ப்ரேயர் முடிந்தபின் மூச்சு விட முடியாமலிருந்து உடனே ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆகி எல்லா ஸ்கேனும் செய்து மூளையில் .ப்ளட் க்ளாட் ஆகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருகிறார் . இந்த மாதத்தோடு இவர் ரிட்டையராகிவிட்டார்.. இருந்தும் மே 31 வரை அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காகவும்., அடுத்த தலைமை ஆசிரியை வரும்வரை பணி செய்ய விடுப்பு எடுக்காமல் இருக்கிறார். .

2005- 2006 இல் தமிழ்நாடு முழுமைக்கும் பெஸ்ட் கார்ப்பரேஷன் டீச்சர் அவார்டு செயிண்ட் ஜான்ஸ் இண்டர்நேஷனல் ஸ்கூலில் வைத்து வழங்கப்பட்டது. டாக்டர் ராஜ்குமார் அவார்டும் கிடைத்தது. 2009-2010 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவார்டு தமிழ்நாடு கவர்ன்மெண்டிம் பெஸ்ட் டீச்சர் இன் கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸ் இவருக்கு கிடைத்தது.

வருடா வருடம் இவர் பிறந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஸ்டான்லி ஆஸ்பத்ரியில் இவர் பிள்ளைகள் 150 பேருக்கு உணவுப் பொட்டலம் கொடுத்தல்., மற்றும் ரத்த தானமளித்தல் என செய்வார்களாம் இவர் படிக்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு உதவி பல செய்தும் தன் பிள்ளைகள் சம்பாத்தியத்திலிருந்தும் அவர்களின் அலுவலக நண்பர்களிடமிருந்தும். வசதி படைத்த பணக்காரர்களிடமிருந்தும் உதவிகள் பெற்று இந்தக் குழந்தைகளுக்கு வழங்குகிறார். இதைப் பார்த்த இவர் குடும்ப நண்பர் -கண்ணதாசன் மருமகள் - இவரை என் ஜி ஓவில் சேரும்படி சொன்னாராம்.

AEO- ASSISTANT EDUCATIONAL OFFICE மூலமா நேஷனல் அவார்டுக்கு இவர் பெயரை அனுப்பி இருக்காங்க.. வில்பவர்., கடவுள் கிருபை., பிள்ளைகள்., கணவர் கோவாப்பரேஷன் மூலமா இவர் இவ்வளவும் சாதிக்க முடிந்தது என்றார்.. இந்த விருதும் அவருக்கு கிடைக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

டிஸ்கி:- சாதனைக்கு எதுவும் தடையில்லை என்ற தலைப்பில் இந்தக் போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரை ஜூன் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது..:)

14 கருத்துகள்:

 1. வியக்கவும் வைக்கிறார்; வழிகாட்டவும் செய்கிறார்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு பெண்ணின் கண்ணீர் தாகம் ஆசை
  அவலம் இலக்கு இலட்சியம்
  என் உண்மையை அம்மா உங்களால்
  பல போர் அறிந்து கொள்வது எங்கள் சாகோதரங்கள் செய்த வரக் கொடை தான் அம்மா.
  எனினும் அனைத்து உறவுகள் சார்பில் எனது நன்றிகள் மகிழ்ச்சிகள் அம்மா..

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் தன்னம்பிக்கை உள்ள பெண்மணி...பகிர்வுக்கு நன்றி அக்கா!!

  பதிலளிநீக்கு
 5. நிச்சயமாக சாதனைக்கு எதுவும் தடை இல்லை தான் ..... Our prayers are for her.

  பதிலளிநீக்கு
 6. நல்ல தன்னம்பிக்கைப் பதிவை போட்டிருக்கிறீர்கள் தேனம்மை! நானும் சில நாட்கள் முன்பு தான் இதைப்படித்தேன்!!

  பதிலளிநீக்கு
 7. தன்னம்பிக்கைப் பதிவு. எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 8. // சாதனைக்கு எதுவும் தடையில்லை // மிகப்பொருத்தமான தலைப்பிட்டு ஒரு அருமையான தன்னம்பிக்கை பகிர்வு.வாழ்த்துக்கள் தேனு

  பதிலளிநீக்கு
 9. வாழ்க்கையே நோயுடன் போராட்டம்.
  அவர்கள் நலனுக்காக மனப்பூர்வமாக பிரார்த்திப்போம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. முற்றிலும் தன்னம்பிக்கையை ஊட்டும் பதிவு .
  நிட்சம் இந்த ஆசிரியர் விரைவில் குணமடைய
  இறைவன் அருள் கிட்டவேண்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .இந்த வாரம்பூராவும் என் தளத்தில்
  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை
  எதிர்த்து புரட்சிக் கவிதைகள் தலைப்பில் ஆக்கங்கள்
  வெளியிடுகின்றேன் .முடிந்தால் உங்கள் ஆதரவினை
  எனக்களியுங்கள்.மீண்டும் நன்றிகூறி விடைபெறுகின்றேன் .
  அடுத்த ஆக்கத்தில் சிந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி ராஜா., ஹுசைனம்மா., அகிலா., மேனகா., சித்து., ஃபாத்திமா., மனோ., ஸ்ரீராம்., ஸாதி்கா., ரத்னவேல் ஐயா., அம்பாளடியாள்.

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...