எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

சனி, 13 ஆகஸ்ட், 2011

உனக்கான வாழ்வில் நான்....

உனக்கான வாழ்வில் நான்..
***************************************
சிறகுகள் உதிர்த்தேன்
நீ என்னை சுமக்கிறாயென..
சிந்தனைகள் அற்றேன்
நீ எனக்காய் சிந்திக்கிறாயென..
தேவனான காட்சியில்
தேவதையாய் கைகோர்த்து
நினைப்பே இல்லை
நீயும் மனிதன்தானென..


கனவுகளுக்குள்ளும்
ஊடுருவி எனக்கான
கனவை காண்கிறாய்..
இமைப்பொழுதும்
இமைப்பதில்லை
நான் உன் கருவிழிக்குள்..

என்னை விட்டு
இன்னொரு சிந்தனையை
நீ சிந்திக்க முடியும் என்பதை
நான் உணர மாட்டாமல்
எப்போது இமைத்தாயென
இம்மியும் தெரியாமல்

விடுதலைக்கான
பத்திரத்தில் கையெழுத்திட்டேன்
எப்போது உன்னை விடுவிப்பேனோ
என்மனக் கூட்டிலிருந்து..
எனக்கான வாழ்வை
நீ வாழ்ந்து சென்றுவிட
உனக்கான வாழ்வை
வாழ்ந்து கொண்டிருக்கும் நான்..

டிஸ்கி:- நன்றி ஜூலை 11., 2011 அதீதம். படத்துக்கு நன்றி நெல்லை ராமானுஜம் ப்லாக்ஸ்பாட். காம்..:))

11 கருத்துகள்:

 1. என்னை விட்டு
  இன்னொரு சிந்தனையை
  நீ சிந்திக்க முடியும் என்பதை
  நான் உணர மாட்டாமல்
  எப்போது இமைத்தாயென
  இம்மியும் தெரியாமல் ...

  விடுதலைக்கான
  பத்திரத்தில் கையெழுத்திட்டேன்
  எப்போது உன்னை விடுவிப்பேனோ ....?

  உண்மையுடன் இரு முனை பக்க கற்பனையில் உண்மையின் உயிரோட்டமாய் உள்ளது அம்மா..

  எல்லா வரிகளும் அதி சிறந்த வரிகள் அம்மா...

  அம்மாவின் கவிதையில் நான் சும்மா வாகுவேனோ..?

  மிக்க நன்றிகள் அம்மா.
  உங்கள்-யாழகிலன் .

  பதிலளிநீக்கு
 2. //
  கனவுகளுக்குள்ளும்
  ஊடுருவி எனக்கான
  கனவை காண்கிறாய்..
  //
  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 3. கனவுகளுக்குள்ளும்
  ஊடுருவி எனக்கான
  கனவை காண்கிறாய்...

  மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. கவிதையில் காதல் வலிகள் கலக்கல் சகோ

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரமேஷ்., அகிலா., ராஜா., கலாநேசன்., ரத்னவேல் ஐயா., கரிகாலன்., ஃபாத்திமா ஜொஹ்ரா., மாய உலகம்.

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...