சமுதாய நண்பன்
இலக்கியத்திற்கென்று சில இதழ்கள் நடத்தப்படுகின்றன. உயிர்மை., கணையாழி., அகநாழிகை., தகிதாவின் தகிதா ( முன்பு புதிய “ழ” என்ற பெயரில் வந்தது).. சமுதாய நண்பன் நாகர்கோவிலில் இருந்து வெளிவருகிறது. ஒரு பல்சுவை திங்கள் இதழ். தமிழ் வழி ஆங்கிலம்., பிழையற ஆங்கிலம் பேசவேண்டாமா., ஜி கே., ஸ்போக்கன் ஹிந்தி., கவிதைச்சோலை., ஜோக்ஸ்., சிறுகதை., கவிதை., கட்டுரை., மனித உரிமை., கேள்வி பதில் என அனைத்திலும் பிரமாதமாக வருகிறது. தனி இதழ் 15 ரூபாய்., ஆண்டுச் சந்தா 125. கல்வி நிறுவனங்களுக்கு சலுகை தருகிறார்கள்.
சி பி ஃப்ரன்சிஸ் ., கமல
செல்வராஜ் கட்டுரைகள்., கோவிந்தராசு கவிதைகள்., மார்ட்டின் நீதிக்கதைதள்.,
ஸ்டாம்ப் கலெக்ஷன். என பகிர்வுகள் அருமை. நாகர் கோயிலில் கிட்டத்தட்ட 137 விளை என
முடியும் ஊரின் பெயர்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கு.. 10 புத்தகங்களும்
வெளியிட்டிருக்காங்க. ஆறாம் ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கிட்டு இருக்குது சமுதாய
நண்பன். சிறப்பான முயற்சிகளோடு வெளியிடும் ஆசிரியர் ராஜுக்கும்., அவர் மனைவி
லில்லி ராஜுக்கும் ஆசிரியர் குழாமுக்கும் பாராட்டுக்கள்.
நாகர்கோவில் எழுத்தாளர்களுக்குப் புகழ் பெற்ற ஊர்.. இந்த புத்தகத்துல என்னுடைய 3
கவிதைகளும் வெளிவந்துள்ளன. நன்றி ரத்னவேல் ஐயா அவர்களுக்கு,.. ஐயா அவர்களின்
இடுகைகளைப் போலவே அவர்கள் அனுப்பும் புத்தகங்களும் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன.
நன்றி ரத்னவேல் ஐயா..
இந்த புத்தகத்தில் சிறப்பான தொடர்கதைகளும் வரவேற்கப்படுகின்றன. எனவே எழுத ஆர்வமோடு
இருப்பவர்கள் சமுதாய நண்பன்., 1348., சிங்காரத்தோப்பு., பார்வதிபுரம்.,
வெட்டூர்ணிமடம் அஞ்சல்., நாகர்கோவில். 629 003.குமரி மாவட்டம் என்ற அஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வையுங்க.
என் அன்புத்தோழி வசுமதிவாசன் கூச்சுப்பிடியில் கலக்கிய நிகழ்ச்சி இது.. போன வாரம் கோடம்பாக்கம் டி ஏ வி ஸ்கூலில் அரங்கு நிறைந்த நிகழ்ச்சியா நடந்துச்சு இது.. சின்ன வேம்படி சத்யம் அவர்களை குருவாகக் கொண்டு அவர்களின் சிஷ்யையின் சிஷ்யை மாதுரியை ஆசிரியையாக அமைய வசு 3 மாதங்களில் கற்றுக் கொண்டு ஆடிய நிகழ்ச்சி இது. ஏற்கனவே பரத நாட்டிய டான்சரா இருந்ததாக கொஞ்சம் ஈஸியா கத்துக்கிட்டதா சொன்னாங்க வசு.. இதில் ஆடிய அனைவரும் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியையும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விடும்போது சந்தித்து இந்த மதுரா டான்ஸ் கிரியேஷனை உருவாக்கி இருக்காங்க..!
செம கலகல இடுகை.. நாஞ்சில் நாட்டைப்பத்தி சொன்னப்ப மனசுக்குள்ள ஒரு வாணவேடிக்கை.. :-)))
பதிலளிநீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
Lot of information. . . Thanks madam
பதிலளிநீக்குபூங்கொத்து!!!
பதிலளிநீக்குநிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க.நன்றி அம்மா.
பதிலளிநீக்குநன்றி சாந்தி., ரத்னவேல் ஐயா.,ராஜா., அருணா., ஜிஜி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அக்கா சூப்பர்
பதிலளிநீக்கு