எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 டிசம்பர், 2009

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து படித்து
வருவது ஆனந்த விகடனும், குமுதமும். அடிக்கடி
மாற்றலாகும் தருணங்களால் ஆசையாய்
வாங்கப்பட்ட புத்தகங்கள் அதிசோக சுமையாகும்
போது [பள்ளி கல்லூரி புத்தகங்கள் தனிசுமை
வேறு] புதிதாய் புத்தகம் வாங்கும் பழக்கம்
சிறிது குறைந்து போனது உண்மை.

எங்கிருந்தாலும் படிக்கும் விகடன் குமுதங்களில்
தன்னுடைய காரசாரமான எழுத்துக்களால்
என்னையும் என் மகனையும் கவர்ந்தவர்
திரு ஞாநி அவர்கள்.. தான் கூறும்கருத்துக்களில்
வலிமையாக நிற்கும் தன்மை, உறுதி படக்கூறுவது,
எளியோருக்கு இரங்குவது, அநேக தருணங்களில்
சரியானவற்றையே கூறுவது என என் ஆரம்ப கால
பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பாக இருக்கிறார்..


தன் "ஓ பக்கங்களில்" தன் மனைவியையே அவர்
தோழி எனக் குறிப்பிட்டது ,தன் வீடு எந்த மதச்
சார்புமில்லாமல் வந்து செல்லும் அனைத்து
நண்பர்களுக்கும் உரியதாய் இருப்பது, மேலும்
தன் பால்ய காலத் தோழர் ஒருவரின் மகளுக்கே
தன் வீட்டை விற்றது என எனக்கு அவரிடம்
கவர்ந்த விஷயங்கள் ஏராளம்.. என்று வந்தாலும்
கண்டு செல்ல அனுமதி கேட்டு பின் தன்னுடைய
வீட்டை விற்றதை படித்தபோது என்னுடைய
வீடு பற்றிய உணர்வுகளும் அவ்வாறே
இருந்ததை உணர்ந்திருக்கிறேன் ...

அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவின் போதும்
தான் நினைப்பவற்றை சரளமாகபகிர்ந்து கொண்டார்.
எல்லா ஆண் பதிவர்களும் தங்கள் மனைவியரை
யும் அழைத்து பங்கேற்கச் செய்யவேண்டும்
எனவும் அங்கு 8 பெண் பதிவர்கள் வந்ததையும்
குறிப்பிட்டு தன்னுடைய வீட்டில் மாதம் ஒரு
முறை இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வலைப்
பதிவர் கூட்டம் நடப்பதாகக் குறிப்பிட்டார்..

குழந்தைகளுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை
சிறுவயதிலேயே பெற்றோர் ஏற்படுத்த
வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்..
அரசுபள்ளிகளில் படிக்கும் வசதி வாய்ப்பற்ற
வர்களின் மொழிப்புலமை மேல்தட்டு மக்களின்
பிறமொழிப்பாடம் எடுத்தவர்களை விட நன்றாக
இருப்பதாக குறிப்பிட்டார்.. ஊர் பெயரையும்
இடங்கள் பெயரையும் சுருக்கிக் கூப்பிடும்
வழக்கத்தை தன் பாணியில் கிண்டலாகக்
கண்டித்தார் ..

வலைப்பதிவர்களின் படைப்பு பற்றி குறிப்பிடும்
போது அதன் சுதந்திரத்தன்மை பற்றியும் அது
சினிமா உலகங்களில் ஏற்படுத்தும் பாதிப்பு
பற்றியும் குறிப்பிட்டார்..ஒரு வருத்தம் மட்டும்
என்னவென்றால் "ஓ பக்கங்களுக்கு" மறுப்பு
எழுதும் எண்ணத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்ட
சாரு இடப்பெயர்கள் பற்றி சொல்லும் போதும்
தங்கள் மறுப்பைக்காட்ட வேண்டியே சுருக்கிக்
கூப்பிடுவதாகக் கூறியதற்கு மறுமொழியாக
சாருவின் பெயரையும் சுருக்கி சொன்னது
வருத்தம் தருவதாக இருந்தது..

தாய் வீட்டிற்கு வந்து இரு சகோதரர்களின்
மனஸ்தாபங்களுக்குள் சிக்கிக் கொண்டதுபோல்
இருந்தது ..இதற்குப் பின் நடக்கும் பனிப்போரே
நான் இந்த இடுகை எழுதக்காரணம்.. ஒரு
பெண் வலைப் பதிவராக என் எண்ணங்களை
யும் பதிய விரும்பினேன்.

தனக்கு பூச்செண்டு வழங்கப்பட்ட போது அதற்குப்
பதிலாக புத்தகங்கள் தரும்படி ஞாநி கூறினார்..
சாரு தனக்கு பூக்களைப் பிடிக்கும் என பெற்றுக்
கொண்டார் ...."ஞாநிக்கு பிடிப்பதில்லை" ..எனக்
கூறினார். "அவரே வாராவாரம் குமுதத்தில்
பூச்செண்டு தருகிறாரே" என நான் குறிப்பிட்டேன்.

கருத்து வேறுபாடு இருப்பதுதான். ஆனால் மிகச்
சிறந்த சமூக அரசியல் நோக்கரான, எளியாரின்
பக்கமிருக்க விரும்பும், ஆணித்தரமான கருத்துக்
களுக்குச் சொந்தக்காரரான ஞாநியை ஆரிய
திராவிட மாயைக்குள் பூட்டிப் பார்ப்பது அழகல்ல...

ஆரியம் திராவிடம் அற்றதே அன்பு....

பி.கு.
நாளையும் இன்னும் சில எண்ணங்களுடன்
வருகிறேன்

40 கருத்துகள்:

  1. கவிதை மட்டுமல்லாது ஏனையவும் நீங்கள் நிறைய எழுதலாம்.

    நாளையும் இன்னும் சில எண்ணங்களுடன்
    வருகிறேன் //////////

    வாருங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. Love is very patient and kind, never jealous or envious, never boastful or proud, never haughty or selfish or rude. Love does not demand its own way. It is not irritable or touchy. It does not hold grudges and will hardly even notice when others do it wrong. It is never glad about injustice, but rejoices whenever truth wins out. If you love someone you will be loyal to him no matter what the cost.

    அனைத்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை . மனிதனின் நிறங்கள் / சிந்தனைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் ....

    Love the brotherhood ...!!!

    கருத்து / எண்ணங்கள் வேறு .... அன்பு வேறு .... இதில் பெருமை பாராட்டுவது தான் அன்பில்லாத ஒரு செயல் ..

    இது என் கருத்து...

    கரும்பயல்.

    பதிலளிநீக்கு
  3. மிக முதிர்வான,நேர்மையான பகிரல்.

    என்னை கேட்டால் உரை நடையில் இன்னும் மின்னுகிறீர்கள்!

    வலை உலகிற்கு மற்றொரு முல்லை,அமித்தம்மா கிடைச்சது போல் இருக்கு!

    வாழ்த்துக்கள் தேனு!தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  4. Nice post Thenammai,Gnani is one of the best critic writers.He writes without any fear.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்து மிக அருமை அதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.ஆனால் ஒரு திருத்தம்.ஞாநி என்பதே சரியானது.ஏனென்றால் ஞானி என்பவர் கோவையில் உள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான எண்ணங்கள்..தொடர்ந்து இதேமாதிரி கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. அழகான பதிவு...உங்களின் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  8. அவரவர் கருத்து அவரவர்க்கு. இவர்களின் கருத்து வேறுபாடுகள் தங்களை தனித்து காட்ட. கவிதைக்குள் உங்களை முடக்கி கொள்ளாமல்- வெளியே வந்தது நல்லது.

    பதிலளிநீக்கு
  9. நல்லதோர் பகிர்வு. உங்களின் கருத்துகளில் தெளிவாகவும் எழுத்துகளில் நேர்த்தியும் தெரிகிறது.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. கவிதைகளில் மட்டுமல்ல, கட்டுரைகளிலும் பின்னி பெடல் எடுக்கின்றீர்கள் தோழி.

    உங்கள் கருத்துக்களை மிக அழகாக, மற்றவர் மனம் நோகாமல் வெளியிட்டுள்ளீர்கள்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. //...ஆரிய
    திராவிட மாயைக்குள் பூட்டிப் பார்ப்பது அழகல்ல ஆரியம் திராவிடம் அற்றதே அன்பு//

    அருமையாகச் சொன்னீர்கள்.
    இந்த மாயையை மீறிய பதிவர்கள் பெருக வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  12. வந்து விட்டேன் அக்கா

    கவிதை மாறி கட்டுரைகளில் உங்கள் ஜொலிப்பு இன்னும் அருமை

    மனமார்ந்து வாழ்த்துகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. கவிதைகள் மட்டுமல்ல
    கட்டுரைகளும் உங்கள் நடையில் சிறப்பாக அமைந்துள்ளது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நேர்மையான அலசல். இந்த மாதிரியும் அப்பப்போ எழுதுங்க. நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  15. நல்ல பதிவு

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. மிக முதிர்வான,நேர்மையான பகிரல்.
    ///

    இதைதான் நானும் சொல்லுறேன்

    பதிலளிநீக்கு
  17. நன்றி சூர்யா உங்க பாராட்டுக்கு
    டெக் த ஹால்ஸ் மீள்பதிவா நல்லாருக்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. நன்றி சொக்கலிங்கம் ராமநாதன்

    என்னோட வலைத்தளத்துக்கு முதல்முறையா வந்ததுக்கு நன்றி

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நன்றி பாரா உங்க பாராட்டுக்கு
    ஒன்றுமறியா தேன் சிட்டாய் இருப்பதே நலம் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நன்றி முனியப்பன் ஸார் இழப்பிலிருந்து மீண்டு வாருங்கள்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஸார் உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் அதை திருத்தி விட்டேன்

    இயல் இசை நாடகம் மற்றும் அறிவியல் தமிழையும் பற்றி அதை செம்மைப்படுத்துவது பற்றி அரசின் கவனத்துக்கு சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் வெற்றிவேல் ஸார்

    நல்ல பகிர்வு
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. நன்றி அண்ணாமலையான் நாளானைக்கும் இதேதான்
    ரொம்ப பயப்படுறதால போகட்டும்னு விட்டுட்டேன்


    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. நன்றி வினோத்
    உங்க முற்பகல் செய்யின் சிறுகதை அருமை

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. நன்றி கமலேஷ் உங்க பாராட்டுக்கு
    அவளின் காதல் கவிதை அருமை கமலேஷ்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. நன்றி உங்க ஆதரவுக்கு தமிழுதயம்

    அச்சப்படாத மனதுக்கு மிக அழகான பயணம் வாய்க்கும் என்று எப்போதும் மிக அழகாக முடிக்கிறீர்கள் தமிழுதயம்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. நன்றி வேல்கண்ணன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் ராகவன்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. நன்றிகோபிநாத்
    நல்லா இருக்கு கோபி புத்தாண்டு உறுதிமொழி

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. நன்றி நெற்குப்பைத்தும்பி

    நல்ல பகிர்வு உங்களோடது

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. நன்றி விஜய் உங்க வரவுக்கு

    விஜய் முரணுலகு முரணழகு அருமை விஜய்

    சிவப்புக்கரப்பானின் வெள்ளை ரத்தம்
    துள்ளி வருது வார்த்தைகள்

    புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜய்

    பதிலளிநீக்கு
  31. நன்றி நிகே உங்க கருத்துக்கு


    புத்தாண்டு வாழ்த்துக்கள் நினைவுகளுடன் நிகே

    பதிலளிநீக்கு
  32. நன்றி புலிகேசி உங்க வருகைக்கு காமம் தான் காதலானு நல்லா கேட்டீங்க புலிகேசி

    அவங்களுக்கு புரிஞ்சுதா நீங்க சொன்னது

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. சௌதியில் வாழும் மக்களுக்கோர் நற்செய்தினு நல்ல உபயோகமுள்ளபதிவு போட்டு இருக்கீங்க நவாஸ் பாராட்டுக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  34. நன்றி திவ்யாஹரி
    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி
    உங்க காதல் என்பது கவிதை நல்லாஇருக்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  35. ஹேராம் உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்குது என்னோட வலைத்தளத்துக்கு உங்க முதல் வருகைக்கு நன்றி

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  36. நன்றி பிரியமுடன் பிரபு
    என்னோட வலைத்தளத்துக்கு உங்க முதல் வருகைக்கு

    கவிதை ரொம்ப சோகம் கூட்டுது பிரபு சொல்லப்படாத பாசம் அப்படித்தான்

    புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...