செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலைத்தளத்தின் காதலி

வெகுஜனப் பத்திரிக்கையில்
தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த
என் பச்சைக்கிளி எதேச்சையாக
பல தானியங்கள் பரத்தியிருந்த
வலையைப் பார்த்தது...

என்று சென்று அமர்ந்ததோ
அன்றிலிருந்து மீளமுடியாமல்
அசையாமல் அதுவும்
அன்றிலாய் நானும்....

என் மோஹினி யட்சிணி தேவதை
ராட்சசி காந்தர்வக் க(ன்னி)ண்ணி
என்வருகைக்காகக் காத்திருக்கும்
வெண்புறா வனமோஹினி...

இன்று இறக்கை படபடக்க
தனக்கான வலைக்குள் ..

குடும்ப அட்டையில் மட்டுமே
உறுப்பினராயிருந்த அவள் இன்று
எல்லா வலைத்தளங்களிலும் ஊடுருவி..

நளினமாய் உடையணியும் அவள்
இன்று நகங்கள் கூட வெட்டாமல்
வாராத தலையுடன் தட்டச்சில்

நளபாக சமையல்காரி
நான் ஊரிலில்லாவிட்டால்
ரொட்டித்துண்டுகளைக் கடித்துக்கொண்டு

என்னைப் பார்ப்பதைவிடவும்
வலைத்தளத்தின் காதலியாய் இருப்பதே
இப்போதெல்லாம் இன்பமாய்
இருக்கிறது அவளுக்கு ...

மணக்க மணக்க சந்தனமும் சாம்பிராணியும்
பாமாலையும் பூமாலையும் சூடிக்கொண்டிருந்த
சாமிகளெல்லாம் போற்றுவார்
இல்லாத் தனிமையில் ...

தன் முகவரியைப் பதிக்க எண்ணிக்
கணினியையே கணநேரமும் பார்த்துக்
கொண்டிருக்கும் ஏற்கனவே பெரிதான
அவள் கண்கள் இன்னும் பெரிதாய்..

எங்களுக்கான உடல் நலத்தில் கனிவும்
உணவில் காமதேனுவாகவும்
பிரயாணத்தில் தெய்வத்துணையும் அனுப்பும்
அவள் தன் அடையாளம் தேடித்திரும்பும் வரை
அவளுக்காகக் காத்து நான்....

34 கருத்துகள் :

dhinesh babu.j சொன்னது…

blog il ungalukkana adaiyaalam endro kidaithu vittathu.ennai pondru palar thinam puthithaga ungal kavithai vanthirukkirathaa endru theduvathe atharku saandru.

S.A. நவாஸுதீன் சொன்னது…

///அவளுக்காகக் காத்து நான்....///

நாங்களும் உங்க கவிதைக்காகத்தான் காத்திருக்கிறோம்.

கவிதை(கள்) சொன்னது…

கவிதையில் சுயம் மிளிர்கிறது

வாழ்த்துக்கள்

உங்களுக்கு முதல் ஓட்டும் நான்தான்

விஜய்

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்..

PPattian : புபட்டியன் சொன்னது…

அழகு வரிகள்..

ம்... கொஞ்சம் குடும்பத்தையும் கவனிக்கலாம்.. :))

tamiluthayam சொன்னது…

அவளை மாதிரியே நானும் ஆயிட்டேன்.

balakavithaigal சொன்னது…

வலைதளத்தின் காதலியாக நீங்கள் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து நான்.படிக்காமல் பதில் எழுதாமல் பொழுது நகர்வதில்லை.தினமும் வாசிக்க நீங்கள் ஒரு காரணம் நன்றி தோழியே

தியாவின் பேனா சொன்னது…

வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

/// என்னைப் பார்ப்பதைவிடவும்
வலைத்தளத்தின் காதலியாய் இருப்பதே
இப்போதெல்லாம் இன்பமாய்
இருக்கிறது அவளுக்கு ... ///

நீ பேசுவது என்னை பத்தியா

அதை நீ சொல்ல சொல்ல

நான் ரசிப்பது கவிதையை அல்ல !

உன்னைத் தான் !!

என்னவள் என்னிடம் சொன்னது

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனம்மை அக்கா !!

புலவன் புலிகேசி சொன்னது…

ம்ம்ம்..உங்கள் கவிதைகளின் காதலன் நான்...

புதுகைத் தென்றல் சொன்னது…

படிக்கறவங்க தன்னைப்பத்தி நினைக்கற மாதிரி இருக்கு. நானும் வலைத்தளத்தின் காதலி என்பதால் இந்தக் கவிதை எனக்கும் பொருந்தும்.

ரொம்ப அழகா இருக்கு

வினோத்கெளதம் சொன்னது…

Finally added in tamilish..
Gud..:)

r.selvakkumar சொன்னது…

விசைப்பலகை உங்களுக்கு ஒரு விசையை தந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால் அதுவே பசைப்பலகையாக நம்மை ஆக்கிரமிப்பதில் எனக்கு சம்மதமில்லை.

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

//தன் முகவரியைப் பதிக்க எண்ணிக்
கணினியையே கணநேரமும் பார்த்துக்
கொண்டிருக்கும் ஏற்கனவே பெரிதான
அவள் கண்கள் இன்னும் பெரிதாய்..
//

ஹ ஹ ஹா

சுயம் பேசியது..

நல்லாருக்கு...

Vidhoosh சொன்னது…

arumainga. ithellaam aaramba kaalaththil ippadiththaan irukkum. pogap poga sariyaayidum.

-vidhya

thenammailakshmanan சொன்னது…

நன்றி தினேஷ்
உங்க பிரியம் கலந்த வார்த்தைகள் ரொம்ப ஊக்கம் குடுக்குது
உங்க தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தினேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸ் ஓட்டும் போட்டதுக்கு

நவாஸ் உங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டேன் உங்க பிரியம் சுழித்தோடும் வெளிக்கு

மனதில் அந்த வார்த்தைகள் தலைப்பு நிரந்தரமாகத்தங்கி விட்டன

பின்ன தினம் என்னவாவது புதுசா எழுதி இருக்கீங்களான்னு போய் பார்த்தா மனப்பாடம் ஆகாதா என்ன

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

வோட்டுப் பெட்டி பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி சகோதரா

இப்போ புதுசாஓட்டுப் போடக்கத்துக்கிட்டதால எல்லா இடத்திலும் சென்று ஓட்டுப் போடுவதுதான் நம்ம வேலையே

thenammailakshmanan சொன்னது…

நன்றி மலிக்கா

காதலும் கவிதையும் ஒண்ணா வந்தது அருமை மலிக்கா

நல்லா இருக்குங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி பட்டியன் தொடர்ந்து வந்து பின்னூட்டம் போட்டு அறிவுரை கொடுப்பதற்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம்

உங்க கதை நல்லா இருந்துச்சு தமிழுதயம் முடிவுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது

thenammailakshmanan சொன்னது…

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் பாலா

நன்றி

உங்க வாசிப்பின் காரணமாக இருக்க நேர்ந்ததற்கு மகிழ்ச்சி

thenammailakshmanan சொன்னது…

நன்றி தியா

அருமை தியா
மண் மீட்கும் காலம் வரும்
வெற்றியடைய வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன் தொடர்ந்த பின்னூட்டத்துக்கு

ஆமா உணவு குடுக்கலயா அல்லது கிடைக்கலயா என்ன சொல்ல வர்றீங்க ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலிகேசி

உங்க தன்வினை நல்லா இருக்கு

வெற்றி பெற வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புதுகைத்தென்றல்
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தல
பாசிலைப் பற்றிய பதிவு அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி செல்வா அறிவுரைக்கு

திருப்பாவை திருவெம்பாவை நல்ல முயற்சி செல்வா பாராட்டுக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி வசந்த்
கடையில வேலை பார்க்கிறது யாரு
நல்ல கதையா இருக்கே வசந்த்

thenammailakshmanan சொன்னது…

நன்றி வித்யா உங்க ஆறுதலான சொற்களுக்கு

ஹேமா சொன்னது…

நானும் இந்தக் கவிதை போல.
என் காதலியும் அவள்.

thenammailakshmanan சொன்னது…

குழந்தை நிலாவில் மாற்றங்கள் அருமை ஹேமா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...