எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 டிசம்பர், 2009

படிக்கட்டு

பெருநகரின் தெருக்களில்
பெருநோயாளியாகவோ
பிச்சைக்காரனாகவோ இருக்கலாம்....

பிரபலமாய் இருந்ததின்
சில சந்தோஷத்திற்கும்
பல சங்கடத்திற்கும்...

சைக்கிளில் செல்வதோ
தெருவோரக்கடையில்
டீகுடிப்பதோ சிகரெட் பிடிப்பதோ...

சில புருவ முடிச்சுக்களும்
பார்வைக்கூர்மைகளும்
இதழ்க்கடை இகழ்வும்
எதிர்கொள்ளத்துணிவுடன்...

ஒரு தொப்பியோ கண்ணாடியோ
உடல்மொழியோ காட்டிக்
கொடுத்துவிடுகிறது என்னை...

சில பரிவான பார்வைகளும்
மௌனமாய் உச்சுக்
கொட்டிக் கடக்க...

ஹிட்டுக்கு ஷொட்டுக்கொடுத்து
சிலசமயம் குப்பைத்
தொட்டியிலும் எறிந்து...

வருடக்கணக்கான என் கனவை
உழைப்பை ஒருசில வார்த்தைகள்
உடைத்துப் போட்டுவிடும் ....
விமர்சனமாய்...

அவர்கள் அறிந்திருக்கவில்லை...
படைத்த ஒருவனை
சிலுவையிடுகிறோமென...

அம்மனாகவும் சாமியாகவும்
சிலைகளைச் செய்த
சிற்பியாக நான்...

விழாக்களில் குடிகாரனாக
நினைக்கப் படக்கூடாத
பரிதவிப்பில்...

என்றோ என்னால்
உயர்ந்தவர்களெல்லாம்
என்னைக் கடந்து போக
படிக்கட்டாய் நான்....

43 கருத்துகள்:

 1. முடியல.... என்னா ஸ்பீடு... எப்பூடி....?

  பதிலளிநீக்கு
 2. ஆதங்கம் வெளிப்படும் அழகான கவிதை...

  பதிலளிநீக்கு
 3. கிரிக்கெட் மாதிரி அடிச்சு ஆடுறீங்க

  நாம டெஸ்ட் மேட்ச் தான்

  ஓவர் பாஸ்ட் நீங்கள்

  ஒரு கமெண்ட் போட்டு நிமிரும்போது அடுத்த கவிதை எழுதிடுறீங்க

  அசாத்திய திறமை

  கவிதை அருமை

  அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 4. வெற்றிக்கு விலை உண்டு.
  நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. அவர்கள் அறிந்திருக்கவில்லை...
  படைத்த ஒருவனை
  சிலுவையிடுகிறோமென
  இது அவரப் பத்திதானே.. என்று கேட்க வேண்டும் போல ..இப்படி நிஜத்திற்கு ஒரு கவிதைப் பதிவாய்.. அமர்க்களமாய்..

  பதிலளிநீக்கு
 6. ரொம்ப நல்லா இருக்கு.

  ///கவிதை(கள்) சொன்னது…
  கிரிக்கெட் மாதிரி அடிச்சு ஆடுறீங்க
  நாம டெஸ்ட் மேட்ச் தான்
  ஓவர் பாஸ்ட் நீங்கள்
  ஒரு கமெண்ட் போட்டு நிமிரும்போது அடுத்த கவிதை எழுதிடுறீங்க
  அசாத்திய திறமை
  கவிதை அருமை
  அக்காவுக்கு வாழ்த்துக்கள்
  விஜய்///

  முற்றிலும் உண்மை. நானும் இதையே ரிப்பீட்டிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. கிரிக்கெட் முன்னாடி 20:20 போட மறந்துட்டேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. தேனு படிக்கட்டுக்களில் ஏறிட்டே இருக்கீங்க.வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 9. இதழ்க்கடை இகழ்வும்

  தெளிவான ஆகயத்தில் புள்ளியென நகரும் பறவை தரும் வியப்பு இந்தக் கவிதையில்

  பதிலளிநீக்கு
 10. நல்ல இருக்கு உங்களின் கவிதைகள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. நன்றி அண்ணாமலையான்

  பாத்ரூம் பூதம் அருமையான விழிப்புணர்வுக்கட்டுரை

  பதிலளிநீக்கு
 12. நன்றி கமலேஷ் உங்க காதலின் பக்கங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 13. நன்றி வினோத் உங்க பாசில் பற்றிய பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 14. நன்றி தமிழுதயம்
  படிக்கட்டோ ஏணிப்படியோ ரெண்டும் பாவம்தான் உங்க கவலை இல்லாத மனிதன் அருமை

  பதிலளிநீக்கு
 15. நன்றி விஜய் உங்க நெளிந்த உலோகத்தில் நெத்திலிக்கயல் அருமை

  அகசூலும் அற்புதம் உபயோகமான பதிவு

  பதிலளிநீக்கு
 16. நன்றி டாக்டர் உங்க வருகைக்கு
  உங்க நண்பரோட இழப்பு என்ன பாதிச்சுருச்சு

  பதிலளிநீக்கு
 17. முதல் முறையா வர்றீங்க

  நன்றி கிருஷ்ணா உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் உங்க பதிவு மிக உபயோகமுள்ளதாக இருக்கு

  பதிலளிநீக்கு
 18. நன்றி புலிகேசி உங்க முதல் முத்தம் அருமை புலவரே அசத்துறீங்க

  பதிலளிநீக்கு
 19. நன்றி பாலா உங்க பதிவில் மரணம் கூட அமுதா இருக்கே

  பதிலளிநீக்கு
 20. நன்றி ராமலெக்ஷ்மி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் உங்க பவனி அருமை

  பதிலளிநீக்கு
 21. உங்க முதல் வருகைகு நன்றி

  உங்க திரவியம் நல்லா சுவாரசியமா போகுது அப்பாதுரை சார் தொடருங்க

  பதிலளிநீக்கு
 22. நன்றி ரிஷபன் சார் உங்க காதல் பொம்மை அருமை ரிஷபன் சார்

  பதிலளிநீக்கு
 23. நன்றி நவாஸ் உங்க பாராட்டுக்கு உங்கள் கவிதையும் அற்புதம்

  பதிலளிநீக்கு
 24. நன்றி கவிதை ஓட்டும் போட்டதற்கு

  பதிலளிநீக்கு
 25. நன்றி மாற்றங்களின் தோழி ஹேமா

  பதிலளிநீக்கு
 26. ரொம்ப சூப்பர் உண்மை உண்மை உண்மை ராகவன்
  உங்க டைரி டரியல் ஆன விஷயம்

  சிரிப்பை அடக்கவே முடியல
  என் டைரியும் கவிதை நோட்டா மாறி ஒரு காலத்தில் கணக்கு நோட்டா ஆகிருச்சு

  பதிலளிநீக்கு
 27. நன்றி அக்பர் உங்க முதல் வருகைக்கு


  உங்க விருப்பம் கவிதை அருமை அக்பர்

  பதிலளிநீக்கு
 28. நன்றி நேசன் உங்கவருகைக்கும் வாழ்த்துக்கும்

  உங்க தொங்கும் கூடுடைய பறவை தூக்கணாங்குருவிகளையும் என்னைப் போல் எண்ண வைக்குது

  பதிலளிநீக்கு
 29. நன்றி வேல் கண்ணன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  உங்க மௌன புரிதல் அனைத்து வார்தைகளுமே அருமை வேல் கண்ணன் எதை சொல்ல எதை விட அற்புதம்

  பதிலளிநீக்கு
 30. நன்றி சுஸ்ரி முறுக்கு நல்ல இருக்கு சுஸ்ரி அவ்வளவும் பித்தனுக்கேஎன்றால் எங்களுக்கு எங்கே

  பதிலளிநீக்கு
 31. நன்றி தியா

  உங்கள் ஏழுமாசம் அருமையான நெகிழவைக்கும் கவிதை தியா

  பதிலளிநீக்கு
 32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...