ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சுருண்ட இறால்கள்

விரும்பியது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை விரும்பும்
உயர்மத்தியதரம்...

கணினியில் நிபுணனான
என் மகன் சிறுவயதில்
"டிங்குவைப்போல் ஒரு பிள்ளை"...

இன்றுஅவனுக்கு
வியர்ப்பதேயில்லை
உடைகளும் அழுக்கேயாகாமல் ...

கண்களும் காதும்
கழுத்தும் கையும்
கணினியில் தேய்ந்து தோய்ந்து...

தனக்கான வேலையைத்
தானே தேடிக்
கண்டடைந்து...

நான் உறங்கும் நேரமெல்லாம்
அவன் உழைத்து
அவன் உறங்கும் நேரமெல்லாம்
நான் விழித்து....

பாசத்தைக்கூடப் பகிரமுடியாத
கண்ணாமூச்சி
இருவருக்கிடையேயும்...

முதல் சம்பளத்தில்
மொத்தக்குடும்பத்துக்கும்
விருந்து சைனா டவுனில்...

வல்கனோ பிரான்ஸ்
சாப்பிடுங்கம்மா என அவன்
பரிவுடன் சொல்ல...

விழித்துப் பார்த்தேன் கிண்ணங்களில்
இரவுத் தூக்கமற்று
சோர்வுற்றுக் களைத்துக்கிடந்த

அவன் கண்களை
வெள்ளைக் கருவிற்குள்
சுருண்ட இறால்களாய்...

38 கருத்துகள் :

புலவன் புலிகேசி சொன்னது…

வ்வழ்க்கைத் தரமமுயர்ந்ததாக பிதற்றி கொண்டிருக்கிறோம் பாசங்களையும் பரிவுகளையும் இழந்து..கவிதை மிக நன்று..

S.A. நவாஸுதீன் சொன்னது…

இயந்திரத் தனமான வாழ்க்கையை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

tamiluthayam சொன்னது…

எல்லாமே நாமே தேடிக் கொண்டது. யாரையும் நாம் எதற்காகவும் நிர்ப்பந்தித்தோம்மா. ஆனாலும் நாம இந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக தான் இருக்கோம். மகிழ்ச்சியாக இல்லேன்னா வாழவே முடியாது. LIFE STYLE மாறுது. அவ்வளவ

Hisham Mohamed - هشام சொன்னது…

சிந்திக்கவேண்டியுள்ளது. என்ன செய்ய காலத்தின் கட்டாயம்

Muniappan Pakkangal சொன்னது…

Nice finish and also narration-itz in practice which cannot be changed,bcz of the change in life pattern.

r.selvakkumar சொன்னது…

ஹிஷாம்,
இது காலத்தின் கட்டாயம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதில் இருந்து மீள முடியும் என்பதையும், மீள வேண்டும் என்ற நினைப்பு நம்மிடம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தமிழ் வெங்கட் சொன்னது…

நிறைய பேரின் வாழ்கை இதுதான்...நண்பரே..!

பலா பட்டறை சொன்னது…

ஏழ்மையை பரிதாபப்பட்ட காலம் போய் ... சுகானுபவமான வாழ்க்கையும் இப்போது அதை விட கொடுமையானதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒன்றை இழந்தே ஒன்றை பெற முடிகிறது. :(

பா.ராஜாராம் சொன்னது…

பொட்டில் அடித்தாற் போல் இருந்தது தேனு.

தியாவின் பேனா சொன்னது…

இயந்திரத் தனமான வாழ்வினைச் சொன்ன கவிதை அருமை.

பாலா சொன்னது…

nalla irukkukaa

வினோத்கெளதம் சொன்னது…

//அவன் கண்களை
வெள்ளைக் கருவிற்குள்
சுருண்ட இறால்களாய்... //

அருமை..

கவிதை(கள்) சொன்னது…

கடல் கடந்து இருக்கும் மகனின் தாய்க்கோ தந்தைக்கோ அப்பிரிவு மிக கொடுமையானது

சுருண்ட இறால்கள் (நமக்கு என் இந்த மாதிரி எல்லாம் உவமைகள் வரமாட்டேங்குது?)

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

கவிதையில் பாசம் கொட்டிதெளிக்கப்பட்டிருக்கும்மா

எனக்கு ரொம்ப பிடிச்சது...!

PPattian : புபட்டியன் சொன்னது…

//"டிங்குவைப்போல் ஒரு பிள்ளை"...//

யாரு ஜப்பானில் கல்யாணராமனில் சோடா புட்டியும், பல்லுமாய் வரும் குழந்தையா... :)

கவிதை வழக்கம்போல அருமை.. "நச்"!!

//விரும்பியது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை விரும்பும்
உயர்மத்தியதரம்...//

நாங்களேதான்...!!

விஜய் சொன்னது…

R U Busy ?

vijay

அன்புடன்-மணிகண்டன் சொன்னது…

Excellent...
எங்கள் விழிகள் தூங்காமல் இறால் போல் சுருங்குவது எங்கள் தாயின் விழிகள் நிம்மதியாய் உறங்குவதற்காகவே.. எங்க புரிஞ்சுக்கறீங்க.. :)

வேல் கண்ணன் சொன்னது…

கவிதை அருமை

ஹேமா சொன்னது…

கவிதை பாசம்.
எனக்கும் என் அப்பா வேணும் இப்போ பக்கதில !

thenammailakshmanan சொன்னது…

ஆமாம் புலிகேசி ..என்ன செய்ய..
யதார்த்தம் இதுதான்..


பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஆதரிக்கக் கூடாதுன்னு சரியா சொன்னீங்க புலிகேசி

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸ் உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம் சரியா சொன்னீங்க

உங்க ரோஜாவும் முட்களும் அருமை

thenammailakshmanan சொன்னது…

ஹிஷாம் நன்றி முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்து இருக்கீங்க

தொலைக்காட்சி பற்றி சரியா சொன்
னீங்க

இதுலயும் காப்பி பேஸ்டா நான் தொலைக் காட்சியே பார்ப்பதில்லை இதனாலேயே

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார்

இலவசங்களை பற்றி நல்லா தொகுத்து இருக்கீங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி செல்வா மீள வேண்டும் விரைவில்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழ் வெங்கட்
முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி

தமிழ்வெங்கட் உங்க விமானப் பயணம் என்னோட அனுபவம் போலவே இருக்கு

thenammailakshmanan சொன்னது…

பலா பட்டறை பள்ளிக்கூட ஞாபகம் வந்துவிட்டது உங்கள் இடுகை பார்த்து மூன்றில் ஒன்றாக சுருக்கி வரைக என்பது போல் பத்து வார்த்தைக்கு ஒன்று என அமர்க்களம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாரா


ராஜா ராணி மாதிரி மட்டும் நெனைச்சுப்பிடாதீக மக்கா
ஏமாந்து போவீக ,...

தூரம் உங்க மனசுல ரொம்ப வர்ணங்களைக் கூட்டுது ...

நாங்களும் சரளைக்காட்டு ஜீவன்கதான்

thenammailakshmanan சொன்னது…

ஹோசிமின் பற்றிய வருத்தப் படவைக்கும் வார்த்தைகள் பகிர்வுக்கு நன்றி தியா

thenammailakshmanan சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலா

thenammailakshmanan சொன்னது…

திங்கள் இனிதே ரொம்ப சூப்பரா போய்கிட்டு இருக்கே தல

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

ஷாலினியை சைட் அடிக்கும் வால்பையன் வாழ்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி பட்டியன்
பல் அப்படி இல்லை
ஆனால் சிறுவயதுக் குறும்புகள் அதிகம்


அருமையான பகிர்வு பட்டியன் நல்ல சரளமா இருக்கு வாழும் புன்னகை ரகோத்தமன் சினிமான்னு கலந்து கட்டிய கதம்பம்போல இருக்கு தாணுபற்றிதான் வருத்தமாக இருக்கு

thenammailakshmanan சொன்னது…

லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லுறேன் மணிகண்டன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

உண்மைதான் வேல்கண்ணன் யாருடைய இருக்கையும் நிலையானதில்லை

thenammailakshmanan சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு ஹேமா


சொல்ல நினைத்து சொல்ல முடியாத கருத்துக்களை நல்லா சொல்லி இருக்கீங்க

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...