எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

முகமற்ற முகங்கள்.. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கான படைப்புகள்..

முகமற்ற முகங்கள்..:-
******************************
என்னைச் சுற்றி
அவர்கள் இருந்தார்கள்..
இவர்கள் இருந்தார்கள்..
உலாவ பெயர் வைத்த
நிறைய தெருக்களும்..

எவரும் யாரையும்
அறிந்திருக்கவில்லை.
வாலற்ற விந்தண்ட
கோசங்கள் சுற்றின
எல்லா நிறங்களிலும்
எல்லா வடிவங்களிலும்.


ஒவ்வொன்றுக்கும்
தனித்தன்மையும்
பொதுத்தன்மையும்
இணைந்திருந்தது
டிஎன்ஏ ஆர்என்ஏ
மூலக்கூறுகள் என்று.

ரிபோ ந்யூக்ளிக் ஆசிட்
பிரட்டிய கார்பன் ஹைட்ரஜன்
அடைத்த பாண்டாய்
நானும் முட்டி மோதி
ஆக்ஸிஜன் உறிஞ்சி
முகமற்ற முகங்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 1.8.2011 அதீதத்தில் வெளிவந்துள்ளது. :) ********************************************************************

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கான படைப்புகள் அனுப்ப :-
************************************************************************
அன்பு முகநூல் நண்பர்களுக்கு

வணக்கம் . பலதரப்பட்ட நண்பர்களை இந்த முகநூல் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .நேரில் பேசாவிட்டாலும் முகநூல் மூலமாக உங்களுடன் தொடர்பில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி .

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழை உங்களில் சிலர் ,வாங்கியோ அல்லது இணையத்திலோ படித்திருக்கலாம் .

வழக்கம்போல் இந்த வருடமும் மிகப் பெரிய அளவில் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் தயாராக ஆரம்பித்துள்ளது .இந்த வருடம் முக நூல் நண்பர்களுக்கும் மலரில் இடம் தர வேண்டும் என்கிற ஆவலில் இந்தக் கடிதம்!

உங்கள் படைப்புக்களை ,------கவிதை,பயணக் கட்டுரை,ஆன்மிகம், இலக்கியம்,சிறுகதை,அனுபவம்,ஜோதிடம்,நகைச்சுவை, சித்திரம், கார்டூன், என்று எதுவாகவும் இருக்கலாம்---எங்களுக்கு அனுப்புங்கள் .

பிரசுரிப்பதற்கு ஏற்ற படைப்புகளை எங்கள் தீபாவளி மலர்க் குழு தேர்ந்தெடுக்கும் .

அனுப்பவேண்டிய முகவரி
girijaraghavan@gmail.com
or
Gayathri Publications
60/9,LKS Nest,
7th Avenue,
ashok Naga Prabhur,
Chennai-600083

12 கருத்துகள்:

 1. கவிதைகள் நவின விஞ்ஞான சொற்களுடன்... மாறுபட்டு.

  பதிலளிநீக்கு
 2. அருமையான படைப்பு!முடிந்தால் எனது வலைப்பக்கம் வந்து போங்கள்!

  பதிலளிநீக்கு
 3. கவிதை நல்லாயிருக்கு. அக்கா, நாங்களும் அனுப்பலாம்தானே...

  பதிலளிநீக்கு
 4. நன்றி ராஜா., ரத்னவேல் ஐயா. ஸாதிகா., சாந்தி.,ரமேஷ்., கோகுல்., கோபால் சார்., துஷ்யந்தன்., ஸ்ரீதர்., குமார்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...