எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராசக்ரீடை...



ராசக்ரீடை..
********************
எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாய் மரம்...



தாய் மரம்..
********************
முலைகளும் யோனியும்
முளைத்த மரங்கள்
யோசித்ததே இல்லை
தாம் ஏன் சுமப்பதென..

திங்கள், 6 ஜூன், 2011

நிஜம்..

நிஜம்..
*************
பதின்மத்திலேயே
நின்றுவிட்டது என் வயது
அதன் பிறகு
நான் வளரவேயில்லை
வளர விரும்பவும் இல்லை

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்னும் இளமையாய்...

தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,

புதன், 30 டிசம்பர், 2009

சூரியன் மகள்

யார் விதைத்தும்
பயிராய் முளைத்து...
யார் உடைத்தும்
கனியாய்க்கனிந்து...
யார் தோண்டியும்
வெள்ளமாய்ப்பொங்கி...
யார் மரித்தும்
எனக்குள் ஏந்தி....

என்னைத்துண்டாக்கி
எல்லைக்கோடிட்டு...
தனக்குள்ளே சண்டையிட்டு...
என் மேலே ரத்தம் சிந்தி...
உன் குருக்ஷேத்ரம் தாங்காமல்
நான் பாலையாகவும்
பாளமாகவும் வெடித்து
நேசமுற்றி விளைந்தே
காயப்பட்டு...

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

திங்கள், 16 நவம்பர், 2009

கினியா பூ

வான் ஹ்யுஸைனின்
ஸூட்டணிந்த
வயலட் லேடி...

காப்பர்கலர் ஹேர்ஸ்ட்ரீக்கிங்கும்
ஏரோபிக்ஸும் யோகாவும் செய்யும்
மெல்லிய தேவதையே...

ப்ரூட் மீல்ஸும் சாலட்ஸும்
ஸாண்விச்சும் உண்டு உடம்பை
ஸ்லீக்காக வைத்திருக்கும்...

மேடம் டூஸாட்டின்
மெழுகுச் சிலையே.....
மிட்டலின் பெண்ணுருவே....
என் மேலதிகாரியே..

நிர்வகத்திறமையில் நீ
இந்திரா நூயிக்கும் மேலே...
உன் பிஏவாய் நான்
ஒவ்வொரு தருணத்திலும் வியந்து...

ஆட்சி மாறினாலும்
பங்குச்சந்தை சரிந்தாலும்
நெருக்கடிநிலையே பிரகடனம் ஆனாலும்
நெஞ்சுறுதியுடன் புன்னகைப்பாயே....

புதன், 4 நவம்பர், 2009

மயில் மாணிக்கம்

கண்கள் இரண்டும்
பளபள கன்னங்களும் இணைந்து
பட்டாம் பூச்சியானதொரு முகம்...

சிறகடிக்கும் தேன்சிட்டு
செம்பிள மேனி
செந்நிறத் தும்பி...

காமட்டின் வால் போல்
குழந்தைகள் அவள் பின்...
ராணித்தேனி....

ஓராவின் ஒளிப்பிழம்பு
வெள்ளிக் கிழங்கு
பாலிவினைல் வழுமை...

கண்கள் இரண்டும்
ஐஸ்க்ரீமில் விழுந்த
ரஸ்மலாய் போலும்
குலோப் ஜாமூன் போலும்...

பப்பேயில்
பார்வைகளின் சாணையில்
அவள் இன்னும் மெருகேறி...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...
Related Posts Plugin for WordPress, Blogger...