எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

வேட்டைக்காரனும்
ஆடப்படுபவனுமாய்
உன் உண்டிவில்லில்....

பார்த்துப் பார்த்துப்
பெருமூச்சிலேயே தேய்ந்து
கொண்டிருக்கிறோம் நாம்....

சுயேட்சைஎண்ணங்கள் இருந்தாலும்
மத ஜாதிக் கோட்பாடுகளுக்குள்
சிக்கிச்சீரழிந்து....

முகப்பில் பூத்து
எட்டாத உயரத்தில் இருக்கும்
ஜாதிப்பூவைப்போல்.....

பறிக்கப்படாமல்
உன் வாசம் மட்டும்
எங்கெங்கும்....

ஈசலும் தும்பியும் போல்
குறுகியகாலம்தான்
நம் நேசமென்றாலும்....

நினைக்கும்போதெல்லாம்
உன் வாசம்
என் சுவாசத்தில்....

17 கருத்துகள்:

 1. ஆங்கில கலப்பே இல்லாமல் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

  வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்

  பதிலளிநீக்கு
 2. நேசத்தின் இழைகள்
  சரங்கொத்தியாய்
  இன்பமாய் வலித்து...

  விடுபடமுடியாமல்
  உன் அன்பெனும் ஆணிக்குள்
  அழுந்தி ரத்தச்சுகத்துடன்....////

  அருமை...

  பதிலளிநீக்கு
 3. அட ஆங்கிலம் கலக்காமல்...அருமையா இருக்கு...

  பதிலளிநீக்கு
 4. //நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
  எலுமிச்சை விளக்கிலும்
  கழிந்துகொண்டே இருக்கும்...

  உன் இளமை வீணாய்....
  நன்னீர் முகத்துவாரம்
  கடலுள் அழிவது போல்... .//சூப்பர் வரிகள்..

  எல்லோரும் சொல்கிறமாதிரி ஆங்கிலம் கலக்காமல் கவிதை அருமையா இருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமை தேனம்மை

  என்ன ஒரு நளினமான சிடுக்கற்ற வெளிப்பாடு

  மிக ரசித்த மொழி ஓட்டம்

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்காகவேணும் இறைவன் இன்னும் அதிகப் பூக்களை உருவாக்கட்டும் :)

  பதிலளிநீக்கு
 7. சூரியனைப்போல்
  தீராமல் எரிந்துகொண்டே
  உங்கள் கவிதைகளும்.உங்களோடு நாங்களும் சூரியக் கதிராய்.

  பதிலளிநீக்கு
 8. //கையூட்டுக்கு காக்கி

  கற்பழிக்க காவி

  கரை சுரண்ட கறைவேட்டி//

  அருமை இந்த வார்த்தைகள்

  நல்லா இருக்கு விஜய் மலட்டு மரபணு

  பதிலளிநீக்கு
 9. உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

  பதிலளிநீக்கு
 10. கை கொடுங்க புலவரே யார் அது உங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படுவது நிஜமாவே வெற்றி அடைஞ்சிட்டீங்க ...

  நன்றி உங்க பாராட்டுக்கு....

  பதிலளிநீக்கு
 11. நன்றி உங்க பாராட்டுக்கு
  மேனகாசத்யா

  பதிலளிநீக்கு
 12. //என்னடா ஒருத்தனை கொன்னா கொலை நூறு பேரக் கொன்னா யுத்தம் இதுக்கு தண்டனை அதுக்கு பதக்கம் என்று //

  நேசன் பியோதர் தஸ்தாவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து இருக்கிறீர்களா ?

  அதில் வரும் நாயகன் ரஸ்கோல் நிகோவின் தத்துவ விசாரம் போல் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்

  உங்க பாராட்டுக்கு நன்றி நேசன்

  பதிலளிநீக்கு
 13. திருநாவுக்கரசரைப் பற்றிய தகவல்கள் அருமை அப்துல்லா

  நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு

  பதிலளிநீக்கு
 14. நன்றி ஹேமா உங்க பாராட்டுக்கு

  உங்க பெர்லின் சுவர் மற்றும் கதவு யன்னல்கள் பற்றிய கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 15. அன்பின் தேனம்மை

  கவிதைகள் ஏதோ ரகசியமாய் சொல்ல நினப்பது என்ன ? படித்த கவிதைகள் அனைத்துமே சொல்லும் கருப்பொருள் யாது ? இன்னும் படிக்க வேண்டும்

  நல்வாழ்த்துகள் தேனம்மை

  பதிலளிநீக்கு
 16. நன்றி சீனா சார்

  வாங்க

  உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் தொடர்ந்த ஊகுவிப்புக்கும் நன்றி சார்

  பதிலளிநீக்கு
 17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...