புதன், 18 நவம்பர், 2009

சரக்கொன்றைப்பூ

பார்வதி ஆயா வீட்டு முகப்பு
பாத்திர வாடகை நிலையமாய்
சரக்கொன்றை சாட்சி....

பிறந்து வளர்ந்து படித்து
உனைப் பார்க்கவென்றே
அபுதாபி வந்தது போல்...

அல் அய்னில் க்ரூஸரில்
அல் மராயின் லாபான் போல்
வெண்மஞ்சளில் வந்த
லெபனிய அழகே...

கிரிஸ்டல் பேலஸின்
ஷாண்டிலியர்கள் போல
ஜொலித்த கண்களுடன்...

துபாய் மாலின்
கேண்டிலைட்டின்
அல்ப்ரோஸாய்...

புர்ஜ் அல் அராபின்
கலங்கரை விளக்கமாய் நீ
இசை நீரூற்றாய் நான்...
உன்னை எட்ட...


தங்கச்சிலைப் பெண் கூட
உன்னைப் பார்த்துத்தான்
முத்தமிட்டுக்கொண்டே....

உனக்காகவே செயற்கை
அருவியில் மனிதர்கள்
தலைகீழாகப் பாயவும் தயாராய் ...

பூக்களின் புன்னகையை
மட்டுமே அறிந்த நான்
முதன் முதல் அறிந்தேன்
பூக்களும் புகைக்குமென...

பட்வைஸரா ஹெனின்கைனா
சாப்ஸூயியுடன் நீ பிடித்தது
மால்பரௌ ரெட்டா லைட்டா...

தயங்கி மயங்கி நின்றேன்
உன்னால் புகைக்கப்படும்
டேவிடாபாகவாவது ஆக மாட்டோமாவென...


பி.கு......
படித்து விட்டு கருத்து அல்லது
ஆங்கிலக் கலப்பு பிடிக்காவிட்டாலும்
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் ...
கருத்து சொல்லாம போயிடாதீங்க
வழக்கமா படிக்கிற மக்களே ......

26 கருத்துகள் :

Mrs.Menagasathia சொன்னது…

/உனக்காகவே செயற்கை
அருவியில் மனிதர்கள்
தலைகீழாகப் பாயவும் தயாராய்// நன்றாக இருக்கு இந்த வரிகள்..ரசித்தேன்..

வினோத்கெளதம் சொன்னது…

அது என்ன சரக்கொன்றைப்பூ
இப்ப தான் கேள்விப்படுறேன்..ஆமீரகத்தை வைத்தே அருமையான கவிதை அழகு..

balakavithaigal சொன்னது…

புகைக்கும் பூக்கள் அழகு
நிறைய சொற்கள் புரியவில்லை
துபாய் சவுதி பற்றிய (அ) உலக அறிவு அவசியம்
நன்றி
தொடரட்டும் கவிதைகள்

நேசமித்ரன் சொன்னது…

ஜரிகை அடைத்துக் கொண்டிருக்கும் பட்டுச் சேலையில் அணைக்கப் பெறும் மனைவி போல
இருக்கிறது இந்த கவிதை வாசிப்பது

ஆங்கில வார்த்தைகள் ஜரிகை
நூல்சேலை தாய்மை

நானும் பயன்படுத்துகிறவன்தான் ஆனால்
ஜரிகை கொலுசளவுதான்

:)

ஆனாலும் உஙகள் வாசிப்பும் அந்தக் கவிதை நவிலும் பெண்ணாகவே உஙகளை வரித்துக் கொண்டு எழுதுவதும் அற்புதம் !!!

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா உங்க விமர்சனத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா

:)

thenammailakshmanan சொன்னது…

நன்றி வினோத்

:0

இராகவன் நைஜிரியா சொன்னது…

// பட்வைஸரா ஹெனின்கைனா
சாப்ஸூயியுடன் நீ பிடித்தது
மால்பரௌ ரெட்டா லைட்டா... //

இல்லீங்க கார்ல்ஸ்பெர்க் & டன்ஹில் மட்டும்தாங்க

இராகவன் நைஜிரியா சொன்னது…

// தயங்கி மயங்கி நின்றேன்
உன்னால் புகைக்கப்படும்
டேவிடாபாகவாவது ஆக மாட்டோமாவென...//

அப்படி போரு அருவாள...

அல்லது அருந்தப் படும் ஜானி வாக்கராக ஆகமாட்டோமாவென...

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்

நேயவிருப்பம் அருமை

உங்களோடு என்னை ஒப்புமை கொள்ளவியலாது

நீங்கள் சூரியன்

நாங்கள் உங்களைப் போல மின்ன விரும்பும் நட்சத்திரங்கள்

இராகவன் நைஜிரியா சொன்னது…

// பி.கு......
படித்து விட்டு கருத்து அல்லது
ஆங்கிலக் கலப்பு பிடிக்காவிட்டாலும்
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் ...
கருத்து சொல்லாம போயிடாதீங்க
வழக்கமா படிக்கிற மக்களே ......//

சரிங்க அக்கா...

இராகவன் நைஜிரியா சொன்னது…

// thenammailakshmanan சொன்னது…
நன்றி நேசன்

நேயவிருப்பம் அருமை

உங்களோடு என்னை ஒப்புமை கொள்ளவியலாது

நீங்கள் சூரியன்

நாங்கள் உங்களைப் போல மின்ன விரும்பும் நட்சத்திரங்கள் //

இப்படி எல்லாரும் சொல்லிச் சொல்லித்தான், வர வர ரொம்ப கஷ்டமா எழுத ஆரம்பிச்சுட்டாரு.

எல்லோரும் ரொம்பத்தான் ஏத்திவிட்டு கிட்டு இருக்கீங்க.

thenammailakshmanan சொன்னது…

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// பட்வைஸரா ஹெனின்கைனா
சாப்ஸூயியுடன் நீ பிடித்தது
மால்பரௌ ரெட்டா லைட்டா... //

இல்லீங்க கார்ல்ஸ்பெர்க் & டன்ஹில் மட்டும்தாங்க//

இந்த விபரத்தை எல்லாம் தேடிச் சேர்த்து எழுதுறதுக்குள்ள நான் பட்ட பாடு....

நன்றி ராகவன்

தெரிஞ்சுருந்தா உங்களிடமே என் கேள்விகளைக் கேட்டு எழுதி இருப்பேன்

thenammailakshmanan சொன்னது…

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// தயங்கி மயங்கி நின்றேன்
உன்னால் புகைக்கப்படும்
டேவிடாபாகவாவது ஆக மாட்டோமாவென...//

அப்படி போரு அருவாள...

அல்லது அருந்தப் படும் ஜானி வாக்கராக ஆகமாட்டோமாவென...//

டிக்ஷனரி போடுற அளவுக்கு தெரிஞ்சு வைச்சு இருக்கீங்களே

thenammailakshmanan சொன்னது…

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// பி.கு......
படித்து விட்டு கருத்து அல்லது
ஆங்கிலக் கலப்பு பிடிக்காவிட்டாலும்
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் ...
கருத்து சொல்லாம போயிடாதீங்க
வழக்கமா படிக்கிற மக்களே ......//

சரிங்க அக்கா...//

நிஜமாவே சில கவிதைகளை நீங்க படிச்சீங்களா இலையான்னு எனக்குத்தெரியாம மண்டை காய்ஞ்சுகிட்டு இருந்தேன்

எனவே தான் பின் குறிப்பு போட்டேன் ராகவன்

thenammailakshmanan சொன்னது…

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// thenammailakshmanan சொன்னது…
நன்றி நேசன்

நேயவிருப்பம் அருமை

உங்களோடு என்னை ஒப்புமை கொள்ளவியலாது

நீங்கள் சூரியன்

நாங்கள் உங்களைப் போல மின்ன விரும்பும் நட்சத்திரங்கள் //

இப்படி எல்லாரும் சொல்லிச் சொல்லித்தான், வர வர ரொம்ப கஷ்டமா எழுத ஆரம்பிச்சுட்டாரு.

எல்லோரும் ரொம்பத்தான் ஏத்திவிட்டு கிட்டு இருக்கீங்க.//

இல்லீங்க ராகவன்

நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

"நேசன் த க்ரேட்"

கவிதை(கள்) சொன்னது…

உங்கள் கவிபடிமம் புதிய கட்டுமானங்களை கொண்டிருக்கிறது.

பல புதிய இடங்களை செய்திகளை அறிந்த கொள்ள முடிகிறது.

இருந்தாலும் ஆங்கில கலப்பை குறைத்தால் மிக அழகாக இருக்கும்

திரும்ப திரும்ப சொல்வதால் கோவிக்காதீர்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப அழகான உவமானங்கள் தேனு.அவசியமெனில் ஆங்கிலம் உபயோகம் செய்தே ஆகவேணும்.இடத்தின் பெயர்களை அப்படி அப்படியே தானே உச்சரிக்க இயலும்.

என் வியப்பெல்லாம் பூக்களை அப்படியே சம்பவம்/இடங்களுடன் பொருத்தும் அழகு.its a great talent u know!சரக்கொன்றை பூ
எங்கிருக்கு புர்ஜ் அல் அராப் எங்கிருக்கு?நெய்கிற மனசு....எங்கையோ இருக்கு.fantastic!

எனக்கு நீங்கள் வேறு கவிதைகளும் எழுதணும் என ஆசையாய் இருக்கு தேனு..எழுதுங்களேன் ப்ளீஸ்..நேயர் விருப்பமென எடுக்கலாம்,மக்கா.

// "நேசன் த க்ரேட்"//

யெஸ் தேனு...இவன் காலங்களில் நாமும் வாழ்ந்தோம் அதிலும் இவனுக்கு நண்பனாக வாழ்ந்தோம் என்பது பெருமையே!

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

உங்க பாராட்டுக்கு...

இந்த கவிதையில் தவிர்க்க முடியாமல் சில இடங்களைக் குறிப்பிட வேண்டி ஆங்கிலக் கலப்புடன் எழுத வேண்டியதாப்போச்சு ..

இனி அந்தத் தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்

உங்கள் ஆதரவுக்கு நன்றி

thenammailakshmanan சொன்னது…

//எனக்கு நீங்கள் வேறு கவிதைகளும் எழுதணும் என ஆசையாய் இருக்கு தேனு..எழுதுங்களேன் ப்ளீஸ்..நேயர் விருப்பமென எடுக்கலாம்,மக்கா.//

நன்றி ராஜாராம் உங்க பாராட்டுக்கு...

மற்றவையும் எழுத முயற்சிக்கிறேன்

thenammailakshmanan சொன்னது…

// "நேசன் த க்ரேட்"//

யெஸ் தேனு...இவன் காலங்களில் நாமும் வாழ்ந்தோம் அதிலும் இவனுக்கு நண்பனாக வாழ்ந்தோம் என்பது பெருமையே!//

yes i too feel proud of being in the era of NESAN

நேசமித்ரன் சொன்னது…

இந்த அன்புக்கு எல்லாம் என்ன செய்யப் போறேன் மக்கா

இந்த சல்லிபயல் மீதும் இவ்வளவு பிரியமா
வேறென்ன வேணும்

thenammailakshmanan சொன்னது…

உங்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் நேசன்

எனக்குத் தெரிந்து மிக அதிகமான படிமானங்களும் படிமங்களும் உள்ளது உங்கள் கவிதைகளில் தான்

எதையும் முதலில் அறிந்துகொள்வது தங்கள் எழுத்துக்கள் மூலம் தான்

ஹேமா சொன்னது…

பூப்பூவாய் பூக்கும் தோழியே.நீயே புன்னகைக்கும் பூத்தானே.எத்தனை பூக்கள் உன் வார்த்தைகளுக்காய் பூக்கப் போகின்றனவோ !

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா உங்க பாராட்டுக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...