எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 நவம்பர், 2009

டிசம்பர் பூ

நொடிக்கு நூறு முகம்
காட்டும் என் ஆசை
இந்திராணி....

கண்கள்வழி பிடிபட்டேனே
மத்திய சிறையா அது...
வெளியேறமுடியாமல்
ஆயுள் கைதியாய்....

மயங்கினாயா
மயங்குவதுபோல்
மயக்கினாயா....

நீ தட்டெழுத்தால் எனைத்தட்ட
நான் சுருக்கெழுத்துக் கூட
சுருக்காய் எழுதி...

உனைக் காணும்
ஒரு நொடி கூட
வீணாக்க விரும்பாமல்....

ஜிஆர் ஈ வகுப்புக்கும்
கணினி பயிற்சிக்கும்
சென்றுவரும் நாம்...

ஜெயித்துக்காட்டுவோம்
காதலோடு கல்வியும்
கூடுமென...

நீ ஊதா வயலட் பர்பிள்
மஞ்சள் நாமக் கோடு என
உடைக்கேற்ற டிசம்பர்பூ
சூடிவரும் மன்மதப்பூ....

புதிய பார்வைகள் கணையாழி
காலச்சுவடு உயிர்மைக்கு
நாம் பொருததைக்கண்டு...

குழம்பித் தவித்தன
வாசகசாலைச் சுவர்கள்
சண்டையா ஊடலாவென்று ..

.வெண்ணைத் தாழி மண்டபத்தில்
கிருஷ்ணனுக்கு இடுவதாய் நீ
என் மேல் வெண்ணை வீசி ...

சேரன் குளமும் திருப்பாற்கடலும்
கீழராஜவீதியும் பந்தலடியும்
உன் பின் நான் சுற்றி...

ஆடி பதினெட்டில் ஓலைத்தோடும்
கறுப்பு வளையலும் பூமாலையும்
சித்ரான்னமும் ...

பாமினிக்குப் பரிசாய் ...
என்னையும் மூழ்கடித்தாய்
மீளாக் காதலில்...

வாழ்வில் வருவாயோ
வழி வழியே போவாயோ
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
உன்னுடன் இந்த நிமிடம்...

17 கருத்துகள்:

 1. பூக்களை இணைக்கும் விதம் அழகு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 2. // வாழ்வில் வருவாயோ
  வழி வழியே போவாயோ
  வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
  உன்னுடன் இந்த நிமிடம்...//

  இது... முத்தாய்ப்பான வரிகள்.

  மனதால் உண்மையாக தன் துணையை காதலிப்பவர்களால் மட்டுமே சொல்ல முடிந்த வார்த்தைகள்..

  மிக மிக அருமை.

  இந்த கவிதையில் ஆங்கில கலப்பு இல்லை... வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் கவிதாயினி வாழ்க.

  www.neyaviruppam.blogspot.com - இங்கேயும் கொஞ்சம் போய் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 3. நல்லாயிருக்கு நல்லாயிருக்குனு சொல்லி கை வலிக்குது ..:)

  பதிலளிநீக்கு
 4. //இராகவன் நைஜிரியா சொன்னது… இந்த கவிதையில் ஆங்கில கலப்பு இல்லை... வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் கவிதாயினி வாழ்க.//

  நீ ஊதா வயலட் பர்பிள்
  மஞ்சள் நாமக் கோடு என
  உடைக்கேற்ற டிசம்பர்பூ
  சூடிவரும் மன்மதப்பூ....

  இந்த வரியில் உள்ளது.ஆனால் குறைந்திருக்கிறது..ஆனால் கவிதை அழகு தான்.....

  பதிலளிநீக்கு
 5. //பாமினிக்குப் பரிசாய் ...
  என்னையும் மூழ்கடித்தாய்
  மீளாக் காதலில்...

  வாழ்வில் வருவாயோ
  வழி வழியே போவாயோ
  வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
  உன்னுடன் இந்த நிமிடம்... //

  அருமையான வரிகள்..


  பூ ஒன்று
  பூ வைத்து பார்க்கின்றது
  மனதை பூவாக்கி..

  நவம்பரிலும் பூக்கிறது
  டிசம்பர் பூக்கள்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி விஜய்

  உங்களின் பிடித்த பத்து பிடிக்காத பத்தை விரைவில் எழுதி விடுவேன் என நினைக்கிறேன் விஜய்

  கால தாமதத்குக்கு மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 7. நன்றி ராகவன் உங்க பாராட்டுக்கு

  நேய விருப்பம் மிக அருமை

  அதன் முதல் கவிதை நேசனுடையது மிக அற்புதமான ஆரம்பம்

  பதிலளிநீக்கு
 8. நன்றி வினோத் உங்க பாராட்டுக்கு

  பதிலளிநீக்கு
 9. நன்றி புலவரே

  நீங்கள் சொல்வது போல் எழுத முயற்சிக்கிறேன்

  நக்கீரரை பார்த்தது போல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 10. //உலகை வெளிச்சமாக்கிய சூரியனால்
  உன்னை வெளிச்சமாக்க முடியாது
  உன்னில் நீ பிரகாசித்துவிட்டால்
  உன்னாலும் இவ்வுலகை
  பிரகாசிக்க வைக்க முடியும்.//

  அருமையான வரிகள் சந்தான சங்கர்


  நன்றி சந்தான சங்கர் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 11. ஆம்
  நானும் இந்த நிமிடம் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்
  அந்தக் காதலோடுதான்.
  புதியபார்வை காலச்சுவடு கணையாழி உயிர்மை அருமை

  பதிலளிநீக்கு
 12. நன்றி பாலா உங்கள் வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 13. நன்றி மேனகா உங்க விமர்சனத்துக்கு

  பதிலளிநீக்கு
 14. //பாமினிக்குப் பரிசாய் ...
  என்னையும் மூழ்கடித்தாய்
  மீளாக் காதலில்...//

  தேனு என்னையும் மூழ்கடித்தாய் டிசம்பர் பூக்களுக்குள்.

  பதிலளிநீக்கு
 15. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பது உண்மைதான் ஹேமா

  உங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...