எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2009

மரமல்லி

மூடி மூடித் தூறும்
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....

பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....

காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...

ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....

உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....

அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...

ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...

வாசமில்லாவிட்டாலும்
பாசமாய் விரித்துக்
கொண்டே இருக்கிறாய்
பூப்போன்ற உன் பார்வையை....

உன் கண் குடுவைக்குள்
அடர்த்தியான திரவமாய்
அயர்ந்தது மூளை....

சிலிக்கான் சில்லுகளில்
ஒவ்வொரு மெகாபைட்டிலும்
ஒவ்வொரு கிகாபைட்டிலும் நீ...

என் தவறையெல்லாம்
களைந்து எறியும்
நார்ட்டனும் சிமெண்டெக்கும் நீ...

கண்ணாடிக்குள் கண்ணும்
மீசைக்குள் உதடும் ஒளித்த
மேகத்துக்குள் நிலவா நீ....

மரத்துள் மலர்ந்த
மல்லியா நீ ...
என் மனத்து மல்லி ...

11 கருத்துகள்:

 1. சென்னையில் பலத்த மழை.. வலைப்பூவில் காதல் மழை..வாவ்.. அருமை..

  பதிலளிநீக்கு
 2. நன்றி சூர்யா உங்கள் பாராட்டுக்கு..

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நல்லா இருக்குங்க

  ஆனால் உங்களோட கவிதை போல இல்லை
  ஏனொ தெரியலை

  :)

  பதிலளிநீக்கு
 4. எளிமை + அழகு. நல்லா இருக்குங்க சோதரி
  அப்படியே உங்களை பின் தொடர்வதற்கு வழிவகை செய்யவும்

  பதிலளிநீக்கு
 5. நன்றி நேசன்

  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி எழுத முயற்சிக்கிறேன் நேசன்...

  க. சீ. சிவகுமாரிடம் பாராட்டுக் கடிதம் நீங்கள் பெற்றது எனக்குப் பேருவகை நேசன்...

  அவரின் பல படைப்புகளை குங்குமம் முதலான இதழ்களில் படித்து ரசித்து இருகிறேன் நேசன்...

  பதிலளிநீக்கு
 6. நன்றி பாலா ...

  உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும்

  சுருக்கமாகவும் "சுருக்" கென்றும் நல்லா எழுதுறீங்க பாலா...

  பதிலளிநீக்கு
 7. மீசைக்குள் உதடும் ஒளித்த
  மேகத்துக்குள் நிலவா நீ....

  நல்லா இருக்கு சகோதரி

  ஆண்டிவைரசும் கவிதைக்குள் புகுத்திவிட்டீர்களே

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. நன்றி விஜய்
  உங்கள் வாழ்த்துக்கு
  தொடர்ந்து ஊக்கமூட்டுவதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...