எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 நவம்பர், 2009

அனிச்ச மலர்

என் ஆன்மாவின் கர்ப்பமே ..
நான் சூலுறாத சொர்க்கமே.. .
என் இள உருவின் பேரழகே...
என் மகளே.. என் தாயே ..

மகரந்தச் சேர்க்கையின்
போதே அறிந்தேன் ..
நீ சூல்கொண்டதை
தேனே.. என் தெய்வமே..

உனக்குச் சோறூட்டிப்பசியாறி
நீ தூங்கி நான் விழித்து ..
திரிசங்கு சொர்க்கத்தில் நான்.. .

உனக்கு வரும் நோயெல்லாம்
பாபர் போல்
எனக்கு வேண்டி...

பென்டெனிலிருந்து பிஎஸ்பி வரை
உன்னோடு களித்திருந்து ...
விழிப்பும் கனவும் அற்ற பேருலகில்..

நீ பள்ளி செல்ல
நான் அழுத கதை
ஊரறியும்...

பைக் ரேஸராகவோ.,
காரம் சேம்பியனாகவோ.,
ஸ்குவாஷ் ப்ளேயராகவோ
வருவாயென நினைத்தேன் ..

உன் குரலெனும் குழலில்
கண்ணன் காலுறை கோமாதாவாய்
என்னைக் கட்டினாய்...

கட்டழகுப் பொக்கிஷமே...
கொலுசணிந்த சித்திரமே...
கனிந்து வந்த பால் மணமே...

ஊனோடும் உயிரோடும்
உருவான உயிரழகே ...
டால்பினைப் போல் ..

யாழும் குழலுமான
உன் பிஞ்சுக் குரலில்
மிழற்றினாயே ...

ஊடகங்கள் உன் குரலை
ஓங்கி ஒலிபரப்ப...
என் ஒவ்வொரு நரம்பிலும்
ஊடுருவிப் பெருமிதத்தில் ...

கடைசிச் சுற்றில்
தரவிரக்கமானபோது
என் நெஞ்சு வெடித்ததடி...

வெடித்த நிலம் போல்
நான் பிளக்க...
மேன்மகளே...

மேகத்து நீர்போல்
கலங்கும் கண்களுடன்
நீ புன்னகைத்தாய் ...

இன்னும் இருக்கு வாழ்க்கை...
சிகரம் எட்ட...
என்றாய் என் அற்புத அனிச்சமே...

உன்னைப் பெற்ற பொழுதிலும்
பெரிதும் உவந்தேன்
நான்......

17 கருத்துகள்:

 1. கவிதையில் கலக்குறீங்க,பாராட்ட வார்த்தையில்லை..

  பதிலளிநீக்கு
 2. நன்றி மேனகாசத்யா

  உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. கவிதை

  மிக பிடித்திருக்கிறது .தாய்மையின் உவகை தெறிக்கும் சொற்கள் . நீளம் தான்.....

  :)

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய பிறவா மகள் எழுதியபோது வடித்த கண்ணீர் இப்பொழுதும் வருகிறது

  சூலுறாத சொர்க்கம்

  எப்படிப்பட்ட வரிகள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. நன்றி பாலா கவிதைகள்

  உங்கள் யாழினி என் கண்ணில்
  ஒரு கணம் மின்னி இந்தக் கவிதையில்
  ஒரு உணர்வாய் வெளிப்பட்டு இருக்கிறாள்

  பதிலளிநீக்கு
 6. நன்றி விஜய்

  உங்கள் பிறவா மகள் படித்து நானும் அழுது இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. நன்றி புதுகைத் தென்றல் ..

  உங்க பேரன்ட்ஸ் க்ளப் 08 ஐ
  4.11.2009 விகடன் பாராட்டி இருக்காங்க...


  வாழ்த்துக்கள் உங்க மெம்பர்ஸ்க்கு...

  பதிலளிநீக்கு
 8. தேனு,அனிச்ச மலருக்குள் பொங்கும் தாயின் பாசம்.மொட்டவிழ்ந்த வாசம்.

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...