வியாழன், 26 நவம்பர், 2009

மலர்கள்

இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....

இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...

பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...

நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...

காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...

பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...

கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...

வெய்யிலின் தொடுதலில்
மரித்துப்போகும்
மின்மினிப் பூச்சிகள்...

செடியின் முகத்தில்
இறைவன் குத்திய
வர்ண மச்சங்கள்...

செடியைத் தினமும்
பருவம் வந்த பெண்ணாய்
நாணித் தலை குனிய வைக்கும்
வசந்த நிகழ்வுகள்...

மரங்கள் மனிதனைக்காண
ஆசைப்பட்டுத் தினமும்
திறக்கும் கண்கள்...

வயல்வெளி வரப்பின்
கால்வாய் நீரைத் தொட்டுப்
பார்க்கச் செடிகள் படைத்துக்
கொண்ட கரங்கள் ...

நீலப்பச்சையில்
பூத்து நின்ற
வெண்மேகங்கள்...

மரங்களின் செடிகளின்
நிழல்கள் நிதமும் அணியும்
பாத அணிகள்....

செடித்தாய் பத்திரமாய்ப் பாதுகாக்கும்
பருவம் வரக் காத்திருக்கும்
மொட்டுப்பெண்கள்....

விடிகாலைப் பனிவேளையில்
செடி கரம் நெறித்துச்சோம்பல் முறித்ததனால்
போதவிழும் மொட்டுக்கள்...

கவிஞர்களைப் பரவசப்படுத்தும்
செடிகள் எழுதிய
ஆச்சர்யக் கவிதைகள் ....

20 கருத்துகள் :

thenammailakshmanan சொன்னது…

25 வருடங்களுக்கு முன்பே மலர்களின் காதலியாய் இருந்து இருக்கிறேன் ...
அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு ...

மக்களே....

உங்களுக்கான பின்னூட்டத்தை அடுத்த வாரம் எழுதி விடுகிறேன்...

பயணத்தில் இருப்பதால் மன்னியுங்கள் ...
(சந்தான சங்கர், நேசன் , நவாஸுத்தீன் , மெய் ,மேனகா சத்யா, விஜய் கவிதைகள்)

நேசமித்ரன் சொன்னது…

:)
பயணம் சிறக்க வாழ்த்துகள் .அப்பவே இப்புடித்தானா ..

மிக்க மகிழ்ச்சி

புலவன் புலிகேசி சொன்னது…

//பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...//

நல்ல வரிகள்..பூக்களின் மீது 25 வருட ப்ரியம்...பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

பூக்கள் மீது உங்களுக்கு 25 வருட காதலா?.ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.

இனிய பயண வாழ்த்துக்கள்!!

balakavithaigal சொன்னது…

மலர்களின் ரசிகையே
மலர்களை நேசிக்காதவர்
வாழ்க்கையை வாழத்தெரியாதவர்
இயற்கையின் கொடையில்
ஈடு இணையற்ற பொக்கிஷம் மலர்கள்
உங்கள் பதிவு உள்ளத்தில் மகிழ்ச்சியை கரைத்தது.
நன்றி

கவிதை(கள்) சொன்னது…

கொன்னுட்டீங்க போங்க

எவ்வளவு வரிசையாக கோர்வையாக

நானெல்லாம் கவிதைன்னு எழுதிக்கிட்டு

வாழ்த்துக்கள்

விஜய்

தியாவின் பேனா சொன்னது…

பயணம் சிறக்க வாழ்த்துகள் .

தினேஷ் பாபு.ஜெ சொன்னது…

கவிஞர்களைப் பரவசப்படுத்தும்
செடிகள் எழுதிய
ஆச்சர்யக் கவிதைகள் ....


அருமை!!!

thenammailakshmanan சொன்னது…

வைன் திறப்பானின் சுருள் கரமும் மூளையின் நரம்பும் அருமை நேசன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவரே உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா
நீங்களும் எனக்கு அவார்டு குடுத்து அசத்திட்டீங்க
நல்ல மனம் வாழ்க

thenammailakshmanan சொன்னது…

தீவிரவாதமும் பேரூந்தும்


அருமை அருமை அருமை பாலா அசத்துறீங்க

thenammailakshmanan சொன்னது…

விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாமே அற்புதமாய் வருகிறது விஜய் உங்களுக்கு கை கொடுங்க

thenammailakshmanan சொன்னது…

மிகப்பெரும் பொக்கிஷம்போன்ற தமிழ் பற்றிய அறியாததும் அறியக் கிடைத்த படைப்பு தியா

வாழ்த்துக்கள்

நன்றி தியா

thenammailakshmanan சொன்னது…

உங்கள் நோக்கில் பார்க்கும்போது எனக்கும் எல்லாமே அழகாகத்தெரிகிறதே நண்பரே

கவிதை அழகு அதில் உள்ள பெண்ணும்

ஹேமா சொன்னது…

தேனு,என்றும் உங்கள் சந்தோஷம் இப்படியே இருக்க வாழ்த்துக்கள்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா

உங்களைக் காணவில்லையேன்னு நினைத்தேன் வந்துட்டீங்க

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை

84ல் எழுதிய கவிதைகள் மீள்பதிவா - பூக்களை ரசிக்கும் ரகசியம் என்ன ? கற்பனைக் குதிரை கொடி கட்டிப் பறக்கிறதே ! நல்ல சிந்தனை - இய்லபான சொற்கள் - எளிதான கவிதை

நல்வாழ்த்துகள் தேன்ம்மை

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீனா சார்

உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...