எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 நவம்பர், 2009

புங்கைப் பூ

அட்சரேகை தீர்க்கரேகை போல்
உன் முகத்தில்
வெட்க ரேகை... .

பேசாமடந்தையாய் நீ..
விக்கிரமாதித்தனாய் நான்..
திரைச்சீலைதான் பாக்கி ..

போர்ப்பகுதியில்
ராபர்ட் யங் பெல்டன் போல்
உன் கண்ணால் சுடப்படும்
அபாயத்தில் உன்னருகே...

நீ ஹெலனா எரிமலையா
கத்ரீனா புயலா ...
என்னை என்ன செய்யப்
போகிறாய் அன்பே...

செவ்வாய்ச் சாமி
கும்பிடும் நீ..
செவ்வாய்க்காரனான
என்னை ஒதுக்கி....

புங்கைப் பூவும்
புளிய இலையும்
கோலமாவும்
தேங்காய் நாரும்...

உன் கை பட்ட
கும்பத்தில் தீபமும்
கொழுக்கட்டையும்...

என்னை விட்டு
வேறான உன் உலகத்தில் நீ..
தள்ளாதே என்னை...
தாளமுடியவில்லை...

க்ரிக்கெட்டும் ரேஸர் பைக்கும்
ஐநாக்ஸும் உலகமென
இருந்தேன்...

உன் வீட்டைச்
சுற்றும் பறவையாக்கி
விட்டாயே ...

வசீகரமான
கண்கள் உனக்கு ..
பார்க்கப் போகிறாயா...

பட்டாம் பூச்சிகள்
வயிற்றுக்குள்
மோதித் துடித்து...

ரிபோஸோம்ஸூக்காக
ஒரு தமிழனுக்கு
நோபல்...

அத்தனை அதிசயங்களும்
அடங்கிய உன்னை
ஆராயும் எனக்கு...

கடைக்கண்ணைக்
காட்டி விடு..
நமக்கிடையேயான
மலையைக் கடுகாக்க ...

10 கருத்துகள்:

 1. //ரிபோஸோம்ஸூக்காக
  ஒரு தமிழனுக்கு
  நோபல்...//

  உங்கள் பூக்களுக்குள் இவனும் மலர்ந்துவிட்டான்.
  தேனு உங்களுக்கும் பூக்கள் தினமும் விருதுகள் தந்தபடியேதானே இருக்கின்றன்.

  பதிலளிநீக்கு
 2. //க்ரிக்கெட்டும் ரேஸர் பைக்கும்
  ஐநாக்ஸும் உலகமென
  இருந்தேன்...

  உன் வீட்டைச்
  சுற்றும் பறவையாகி
  விட்டாயே ...//

  அருமை...அழகான வரிகள்.......

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஹேமா உங்கள் தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும்

  வெங்கி என்ற வெங்கட்ராமன் சிதம்பரத்துக்காரர்

  அவர் ரிபோஸோம்ஸை ஆராய்ந்து நோபல் வாங்கி இருக்கிறார்

  அவருக்கு என் வலைத்தளத்து மூலம் ஒரு பாராட்டு இது

  பதிலளிநீக்கு
 4. நன்றி புலவரே

  உங்கள் வாழ்த்துக்கும் வரவிற்கும்

  பதிலளிநீக்கு
 5. //ரிபோஸோம்ஸூக்காக
  ஒரு தமிழனுக்கு
  நோபல்...//

  கலக்குரீங்க
  எங்க இருந்து எடுக்குரீங்க

  பதிலளிநீக்கு
 6. எங்கிருந்து பிடிக்கின்றீர்கள் இத்தனை பூக்களையும்,கவிதைகளையும் :)

  பதிலளிநீக்கு
 7. எப்போதும் போல் அழகு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. க.சீ. சிவகுமார் ரேஞ்சுக்கு எழுதுற ஆள் நீங்க நேசன்....

  நாங்களெல்லாம் நிஜமாவே சும்மா

  பதிலளிநீக்கு
 9. நன்றி அப்துல்லா உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும்

  பதிலளிநீக்கு
 10. நன்றி விஜய்

  உங்க தொடர்ந்த ஊக்குவிப்பும் ஒரு முக்கிய காரணம்

  நன்றி விஜய்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...