திங்கள், 16 நவம்பர், 2009

கினியா பூ

வான் ஹ்யுஸைனின்
ஸூட்டணிந்த
வயலட் லேடி...

காப்பர்கலர் ஹேர்ஸ்ட்ரீக்கிங்கும்
ஏரோபிக்ஸும் யோகாவும் செய்யும்
மெல்லிய தேவதையே...

ப்ரூட் மீல்ஸும் சாலட்ஸும்
ஸாண்விச்சும் உண்டு உடம்பை
ஸ்லீக்காக வைத்திருக்கும்...

மேடம் டூஸாட்டின்
மெழுகுச் சிலையே.....
மிட்டலின் பெண்ணுருவே....
என் மேலதிகாரியே..

நிர்வகத்திறமையில் நீ
இந்திரா நூயிக்கும் மேலே...
உன் பிஏவாய் நான்
ஒவ்வொரு தருணத்திலும் வியந்து...

ஆட்சி மாறினாலும்
பங்குச்சந்தை சரிந்தாலும்
நெருக்கடிநிலையே பிரகடனம் ஆனாலும்
நெஞ்சுறுதியுடன் புன்னகைப்பாயே....

சைபர் க்ரைமில்
சைபர் கேஸான நிறுவனம் கூட வாங்கி
சைபர் ஸ்பேசில் உயரச்செய்வாயே...

சென்செக்ஸும் நிப்டியும்
உன் நிறுவனத்தின் கிராப்பை ஒட்டி...
பிறக்கும் போதே வணிக நாடி...
எல்லாவற்றிலும் இயக்குனர் நீ...

பெட்ரோல் முதல்
தொலைத் தொடர்புவரை
புதுமை முதன்மை
தைரியம் தனித்துவம்
உன் தாரக மந்திரம்...

ஜே டபிள்யூ மாரியட் லீ மெரிடியனில்
பிரதமர்களூடன் விவாதத்தில் நீ
பிஸினஸ் மாக்னெட்....

கேப்பிடல் மார்கெட்
சிஎன்பிசி யிலிருந்து
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வரை...

உலகமே உன் பின் சுற்றும்போது
உன் கண்ணசைவில் சுற்றும்
துணைக்கோளாய் நானும் ....

20 கருத்துகள் :

வினோத்கெளதம் சொன்னது…

சூப்பர் சூப்பர் சுப்பருங்கோ..

Mrs.Menagasathia சொன்னது…

//கேப்பிடல் மார்கெட்
சிஎன்பிசி யிலிருந்து
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வரை...

உலகமே உன் பின் சுற்றும்போது
உன் கண்ணசைவில் சுற்றும்
துணைக்கோளாய் நானும் .... //இயல்பா அழகா எழுதிருக்கிங்க.

ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப பொறாமையா இருக்கு அக்கா.எவ்வளவு வெரைட்டீஸ் பூக்கள் பத்தி அழகான எழுத்துநடையில் கவிதை எழுதறீங்க.

நீங்க தப்பா நினைக்கலன்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்....

நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவங்களா?

கவிதை(கள்) சொன்னது…

யாருங்க அந்த லேடி

நிஜமாவே பெரிய ஆள்தான்

வாழ்த்துக்கள்

விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி வினோத் கௌதம்

balakavithaigal சொன்னது…

உலகமே உன் பின் சுற்றும்போது
உன் கண்ணசைவில் சுற்றும்
துணைக்கோளாய் நானும்
-----ஆம் உம் கவிதை பின்னால் நானும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா

நான் வேதியல் படித்தவள்

தமிழில் ஆர்வம் அதிகம்

thenammailakshmanan சொன்னது…

அவள் ஒரு பிறவா மகள் விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா கவிதைகள்

நேசமித்ரன் சொன்னது…

அருமை அருமை அருமை

ஒரே ஒரு விண்ணப்பம் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் தமிழ்படுத்தி பார்க்கலாமே

:)

இராகவன் நைஜிரியா சொன்னது…

// நேசமித்ரன் சொன்னது…
அருமை அருமை அருமை

ஒரே ஒரு விண்ணப்பம் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் தமிழ்படுத்தி பார்க்கலாமே

:)//

ஏங்க ஒருத்தர் எங்கள மாதிரி இருப்பவர்களுக்காக கவிதை எழுதிகிட்டு இருக்காங்க.. அதையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே..

இராகவன் நைஜிரியா சொன்னது…

பூக்கள் பற்றிய இடுகைப் போடும் போது அந்த பூக்களின் படத்தையும் சேர்த்துப் போட்டால் இன்னும் அழகாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். இது என்னுடைய அபிப்ராயம் மட்டும்தாங்க.

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

இது போன்ற தளத்தை அடிப்படையாக வைத்து நான் சமீபத்தில் எதுவும் படிக்க வில்லை. வார்த்தைகள் வசம் என்றால் எல்லாமே வாசம் தான். சிறப்பு.

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்

தமிழில்தான் எழுத முயற்சிக்கிறேன்

ஆனால் எழுதும் வேகத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைப்பதில்லை

:-))

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராகவன் உங்க பாராட்டுக்கு

படம் அப்லோடு பண்ண இன்னும் என் பையன்கள் எனக்கு கற்றுத் தரவில்லை

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜோதிஜி உங்க வாழ்த்துக்கு

புலவன் புலிகேசி சொன்னது…

தோழியே இதைத்தான் எனது பதிவில் வந்து ஆங்கிலம் கலந்திருக்கிறேன் திட்டி விட்டு போங்கள் என்றீரா...இதையே தமிழில் முயற்சித்துப் பாருங்களேன். தமிழிலும் பெருமைக்குரியப் பெண்கள் அதிகமாகவே உள்ளனர்...

thenammailakshmanan சொன்னது…

//நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம்//

உண்மை புலிகேசி
நன்று சொன்னீர்கள்
முயற்சி செய்கிறேன்

ஹேமா சொன்னது…

ஐயோ தேனு,எப்பிடித்தான் ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் யாரையோ எதையோ திணிச்சு அழகாக்றீங்களோ !

thenammailakshmanan சொன்னது…

//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//

arumai HEMA


thanks for ur comments

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...