எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எம்.ஏ.சுசீலாம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.ஏ.சுசீலாம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஆகஸ்ட், 2022

ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு

 நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.


ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் இணைய வழியில் நிகழ்த்திய முனைவர் எம். ஏ. சுசீலாம்மா &முனைவர் ஜே. ஃபாத்திமாம்மா உருவாக்கிய அறக்கட்டளைக்காகச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்புக் கிட்டியதில் மனம் நெகிழ்ந்தேன்.

வெள்ளி, 1 ஜூலை, 2022

நிலவறைக் குறிப்புகள் – ஒரு பார்வை

நிலவறைக் குறிப்புகள் – ஒரு பார்வை


ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் ப்ரயத்தனம் செய்கிறார்கள். இயல் வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு பயணத்தைச் செய்து கொண்டே இருப்பார்கள் ஃபியோதரின் கதாபாத்திரங்கள்.

ஆழ்ந்த அறவழியில் தம் மனதை நேர்மையாகப் படைக்கும் பாத்திரங்கள் அவர்கள். தம் இழிமை, கயமை, எதையும் மறைப்பதில்லை. இக்கதையின் நாயகன் தன்னைப் பற்றியே தள்ளி நின்று ஆய்ந்து எழுதி உள்ளமை நம்மை நாமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கோருகிறது. சராசரிக்கும் மேலான சத்தியத்தின் பால் நம்பிக்கை உள்ள சமூகத்தின் மதிப்பீடுகளால் இடர்ப்பட்டு நொந்து போகும் அபூர்வமனிதனைக் கான்வாஸில் வரைந்தது போன்ற சித்திரங்களே இவரின் பாத்திரங்கள்.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

20 ஆம் நூற்றாண்டு சிறுகதை புதின ஆசிரியர்களில் எம் ஏ சுசீலாம்மா.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்புதின சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுசீலாம்மா பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை தமிழ் உயராய்வு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை அம்மா எழுதி இருக்கிறார்கள். அக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.

சனி, 17 நவம்பர், 2018

சிந்தையைப் புதுப்பிக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.  பேச்சைப்போல எழுத்துக்களும்  கம்பீரமாய் இருப்பது சுசீலாம்மாவிடம் மட்டுமே.

மனச்சோர்வு அடையும் போதெல்லாம் இக்கடிதங்களைப் படித்துப் புத்துணர்வு கொள்வேன்.

பாடங்களில் அக்கறை கொள்ளச் சொல்லும் அன்பான அறிவுரை. அதற்கு உதாரணமாய் வனவாசம் கொள்வதை எடுத்தாண்டிருக்கும் அழகு. முத்திரையைப் பதிக்க வைக்கும் உத்வேகமான பேச்சு.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

கம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில் சுசீலாம்மாவும் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களும்.

கம்பன் தொட்ட சிகரங்கள் என்ற தலைப்பில் மார்ச் 27 ஆம் தேதியன்று காரைக்குடிக் கம்பன் விழாவில் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்னை சுசீலாம்மா அவர்கள் உரையாற்றினார்கள். அது அன்றே விஜயா பதிப்பகத்தாரால் நூலாகவும் பதிப்பிக்கப்பட்டது. அதற்காகவும் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைத் தமிழில் கொணர்ந்ததற்காக ரஷ்யன் கல்சுரல் செண்டரில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டு விழாவுக்காகவும் அம்மாவுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் பணிவான வணக்கங்களையும் செலுத்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா என்னும் தேவதை.  
அத்துடன் தமிழக அரசால் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் தமிழ்ப்பணியும் போற்றுதலுக்குரியது. பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளும் எழுதிய இவர் சென்ற நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் என் படைப்புகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். நமது செட்டிநாடு இதழின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும். 

வியாழன், 25 ஜனவரி, 2018

சோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எவ்வளவு அழகான எழுத்தோ அவ்வளவு கம்பீரமான பேச்சும் மிடுக்கும் கொண்டவர் சுசீலாம்மா. என்றும் நாங்கள் மயங்கும் எங்கள் துருவ நட்சத்திரம். ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி அனுமானங்களுக்கு இலக்கியத்தாலேயே நுட்பமான பதிலடி கொடுத்திருக்கிறார். அது தினமணி.காமில் வெளியாகி உள்ளது.இலக்கியச் சுவை மாந்த விரும்புவோர் ஆண்டாளின் பாசுரங்களில் அமிழ விரும்புவோர் இந்த இணைப்பை பார்க்க.

 தீதும் நன்றும்.

என்றென்றும் அவர்களின் மகளாகப் பெருமையுறும் கணம் இந்தக் கடிதங்களையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.



திங்கள், 13 நவம்பர், 2017

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

நாங்கள் கல்லூரிப் பருவத்தில் கொண்டு வந்த கையெழுத்துப் பத்ரிக்கை புரவி  ( PEGASUS ).

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக் கடிதம்.

புரவிப் படைப்பாளிகட்கு,

புரவியின் பாய்ச்சலை ஒரே மூச்சில் ரசித்துவிட்டு, ரசனையின் சூடு ஆறுமுன் இதை எழுதுகிறேன்.

“சின்னஞ்சிறு கதைகள் பேசி” உழலும் மனித மந்தையரிடையே புரவிக் கூட்டம், அபூர்வமாய் மொட்டுவிட்டிருக்கும் ஒரு குறிஞ்சி மலர்க்கூட்டம் ! பேசிவிட்டுப் பிரியாமல் செயல் வடிவம் கொடுக்க முனைந்தமைக்கு முதற் பாராட்டுக்கள் !

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 15 ஜூன், 2016

ஒற்றை வரி விஷம்.

////ஒரு ஹீரோவும் ஐந்து ஸீரோக்களும் - இலக்கியப் பிலிம் காட்டல் //// - இதுதான் அது. என் முகநூல் நண்பர் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களின் ட்விட்டர் கருத்து.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - சுசீலாம்மாவின் புதுநூல் வெளியீடு.

அன்பு வாழ்த்துகள் அம்மா.

முகநூலில் சுசீல்லாம்மா தனது பக்கத்தில்  தனது புது நூல் வெளியீடு பற்றி எழுதி இருந்தார்கள். அவர்கள் வலைப்பக்கத்திலும் வெளியானதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

வியாழன், 25 டிசம்பர், 2014

கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின்  ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

சுசீலாம்மாவின் யாதுமாகி :-



சுசீலாம்மாவின் யாதுமாகி :-

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- இந்த விமர்சனம் நவம்பர் 21, 2014 திண்ணையில் வெளிவந்தது.


செவ்வாய், 14 ஜனவரி, 2014

அன்னப்பட்சியை நீவியபடி... எம். ஏ, சுசீலாம்மா..

இன்று எனது கவிதைத் தொகுப்பு  “அன்ன பட்சி ” சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகை பதிப்பகத்தில் அரங்கு எண் . 666., 667 இல் கிடைக்கும்.

அனைவருக்கும்
இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். !
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.!

கல்லூரியை விட்டு வந்து பல வருடங்களான பின்பு போன மாதம்தான் சுசீலாம்மாவை அவரது கோவை வீட்டில் சந்தித்தேன்.துருப்பிடித்துக் கிடந்த நான் தொடர்ந்து இயங்குவதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கியத் தோட்ட விருதும்,பாஷா பூஷண்  விருதும்,  ஜீ.யூ. போப் விருதும் கிடைத்திருக்கிறது.

எங்கள் அம்மா எஸ் ஆர் எம்  பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராய  (ஜீ. யூ. போப்) விருதுபெற்றமைக்காக  இந்த ஆசிரியர் தினத்தில்  வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன்.

வியாழன், 2 மே, 2013

சுசீலாம்மாவின் கடிதம்

சுசீலாம்மாவின் கடிதம்.

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது அருகி விட்டது. ஷார்ட் மெசேஜஸ்தான். குறுந்தகவல்கள். நீண்ட வாக்கியங்கள் பேசுவது கூடக் குறைந்து விட்டது. கம்யூனிகேஷனுக்குத் தேவையான வார்த்தைகள் மட்டுமே புழக்கத்தில் வந்துவிடும் என்று தோன்றுகிறது.

மொத்தமே 10 வார்த்தைகள்  போதும்.  ஆமாவா, மொக்கை, அவ்வ்வ்வ், கலக்கல் மாமு, வேணும், வேணாம், வரேன், வல்லை, பிடிக்குது . பிடிக்கலை.. இது மாதிரி மணிரத்னம் பட ஸ்டைல்ல பேச்சு குறைஞ்சுகிட்டே வருது எல்லார்கிட்டயும்.
Related Posts Plugin for WordPress, Blogger...