எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 நவம்பர், 2018

சிந்தையைப் புதுப்பிக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.  பேச்சைப்போல எழுத்துக்களும்  கம்பீரமாய் இருப்பது சுசீலாம்மாவிடம் மட்டுமே.

மனச்சோர்வு அடையும் போதெல்லாம் இக்கடிதங்களைப் படித்துப் புத்துணர்வு கொள்வேன்.

பாடங்களில் அக்கறை கொள்ளச் சொல்லும் அன்பான அறிவுரை. அதற்கு உதாரணமாய் வனவாசம் கொள்வதை எடுத்தாண்டிருக்கும் அழகு. முத்திரையைப் பதிக்க வைக்கும் உத்வேகமான பேச்சு.



தன்னம்பிக்கைக் குறைபாட்டில் சவலைப் பிள்ளையாய் அல்லலுறும் நேரமெல்லாம் அருகிருந்து ஆறுதல் சொல்லும் கடிதம் இது.



சுய இரக்கம் சுசீலாம்மா வெறுத்த ஒன்று. எதையும் பாசிட்டிவாகப் பார்க்கச் சொல்வது அவர் பாணி.

நாளை சாகப் போவதற்காக இன்றே துக்கம் அனுஷ்டிக்கிற மனப் போக்கைச் சாடியிருப்பதும் என்னைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது. இன்றும் நான் ரொம்ப மாறிவிடவில்லை. :)


என் கவிதை நூல் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர். அதற்காகப் பல்லாண்டுகளுக்கு முன்பே ஆசி வழங்கியவர். புத்தகம் வந்தபோதும் முதன் முதலாக முன்னுரை வழங்கியவர் சுசீலாம்மாதான் :)

அந்த அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்.



கல்கியில் மாணவர் பக்கத்தில் முதல் கவிதை வந்தபோது அதற்கு வந்த வாசகர் கடிதங்களை ஆவலுடன் வாங்கி வாசித்து ஆசீர்வதித்தவர். முக்கியமான ரகசியம்  எங்களுக்காக அந்தக் கவிதைகளைக் கல்கிக்கு அனுப்பியவரே அவர்தான். அவர் இன்றி நாங்கள் இல்லை. இன்றைய நானும் இல்லை.  எங்கள் மேல் நம்பிக்கை வைத்து  இவ்வளவு தூரம் ( எங்களை இழுத்துக் :))  கொண்டு வந்ததில் உங்கள் பங்களிப்பளிப்புதான் எல்லாமே. சுருக்கமாக எல்லாப் புகழும் சுசீலாம்மாவுக்கே. :)   லவ் யூ சுசீம்மா.  

5 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சி! சுசிலாம்மாவைப் பற்றி நீங்கள் முன்பும் நிறைய குறிப்பிட்டதுண்டு இல்லையா...இப்படியான அன்பான ஆசிரியர்களின் ஆசீர்வாதங்கள் பொக்கிஷம்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  2. கடிதப் பறி மாற்றமெல்லாம் ஒரு காலத்தோடுபோய் விட்டதே

    பதிலளிநீக்கு
  3. அதுதான் சுசீலாம்மா. சந்தோஷமான மனுஷி.

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்ச்சியான தருணங்கள் நினைவிலே பொக்கிஷமாய்.

    பதிலளிநீக்கு
  5. ஆம் துளசி சகோ & கீத்ஸ். கருத்துக்கு நன்றி :)

    ஆம் பாலா சார்

    ஆம் அகிலா

    நன்றி முருகேஸ்வரி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...