எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-


தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-

உலகம் புகழும் ( பார் அதி ) பாரதியை, பாரதத்தின் ‘பா’ ரதத்தை ஓட்டிச் சென்ற வழிகாட்டியை ( ‘பா’ ரதியை ) அவனின் தாசன் புகழ்கின்றான். தாசனுக்குள் இனிமைச் சரிவுகளாய்ப் புரண்ட தலைவனின் நினைவுகள் பிரவாகமாய் வருகின்றன.

அவன் தன் தலைவனைப்

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன் : அவன்
செந்தமிழ்த் தேனி : சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிக்குயில் : நாட்டினைப்
பகைக்கும் பகையைக் கவிழ்க்கும் பகைமுரசு :
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்கும் கற்பூரச் சொற்கோ “ எனப் புகழ்கின்றான்.

மேலும் “ அவன் கற்பனைகளின் புதையல் “ என்றும்,

”மறம் பாடவந்த மறவன்: புதிய
அறம் பாட வந்த அறிஞன் என்றும்

“அவன் நாட்டில் படரும் சாதி என்னும் படை நோய்க்கு மருந்து , மண்டுகின்ற மதங்கள் அண்ட முடியாத நெருப்பு . அவன் அண்டும் பகைக்கும் அணையா விளக்கு. “ என்றும் புகழ்கின்றான்.

இவ்வாறெல்லாம் புகழ்ந்தும் கூடத் தாசனுக்கு நிறைவில்லை மனதில். எனவே கூறினான் ஒரே வரியில்.

”இவன் தமிழால் தகுதிபெற்றதும்
தமிழ் இவனால் தகுபெற்றதும் “ என்றும்

தமிழே இவனால்தான் தகுதி பெற்றது எனக் கூறியதும்தான் நிறைவு பிறக்கின்றது தாசனுக்கு. தன் புகழஞ்சலியையும் ( போற்றுதலையும் ) அவன் அத்துடனே நிறுத்துகின்றான்.

4 கருத்துகள்:

 1. பாரதி போற்றுவோம்
  பாரதிதாசன் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது அதனால்தானே கனகசுப்புரத்தினம் பாரதி தாசன் ஆனான்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 3. அருமை சகோ பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி கில்லர்ஜி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...