எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2018

வேற்றுப் பொருள் வைப்பணி :-


வேற்றுப் பொருள் வைப்பணி :-

அணிக்கு நூற்பா :-

”முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்கு
பின்னொரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருளே “

அணி விளக்கம் :- ஒரு சிறப்புப் பொருளை வலியுறுத்தற் பொருட்டு ஒரு பொதுப்பொருளை ( உலகறிந்த பொருளை ) அதனோடு தொடர உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

எடுத்துக்காட்டு :-

”சலத்தாற் பொருட் செய்தே மார்த்தல் படுமட்
கலத்துணீர்ப் பெய்திரீ இயற்று “

விளக்கம் :- பிறர் வருந்த அவர் தம் பொருளைக் கவர்ந்து வாழ்வதானது, அதனால் ஏற்படும் மகிழ்ச்சி, இன்பம் ஆகியனவை, பசுமட் கலத்தினுள் ( சுடப் பெறாத மட்கலத்துள் ) வைக்கப்பட்ட நீர் விரைந்து அழிந்து படுவது போல அழியும்.

இங்கு பிறர் பொருளைக் கவரக் கூடாது. அவ்வாறு கவர்ந்தால் அதனால் பெற்ற மகிழ்ச்சியனைத்தும் குலைந்து போகும் என்பது சிறப்புப் பொருள். இதனை விளக்கப் ‘ பசுமட் கலத்து நீர் ‘ என்ற பொதுப்பொருளைக் கையாண்டிருப்பதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாம். நூற்பாவில் கூறப்பட்டதுபோல் சிறப்புப் பொருளை முன் கூறி அதனை வலியுறுத்த பின்னொரு பொருளை ( உலகறிந்திருக்கும் பொதுப்பொருளை ) ஏற்றி வைத்து உரைப்பதாம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...