எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஆகஸ்ட், 2022

ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு

 நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.


ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் இணைய வழியில் நிகழ்த்திய முனைவர் எம். ஏ. சுசீலாம்மா &முனைவர் ஜே. ஃபாத்திமாம்மா உருவாக்கிய அறக்கட்டளைக்காகச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்புக் கிட்டியதில் மனம் நெகிழ்ந்தேன்.


சான் ஜோஸ் அரங்கில் நிகழ்வு நடைபெற்றது. நான் கூகுள் மீட் வழியாகக் கலந்து கொண்டேன். மதியம் 2 - 4 நிகழ்ச்சி நடைபெற்றது.

இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெற்றது.

முனைவர் பா லயோலா ஜூலியட் மேரி என்னை அழகான அறிமுகப்படுத்தி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் லதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்து “ பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும் “ என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றினேன்.

முனைவர் பட்ட ஆய்வாளர் க. ஆதிலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. சுசீலாம்மா கலந்து கொண்டதோடு நிகழ்வின் முடிவில் பாராட்டி கைபேசியிலும் அழைத்துப் பாராட்டினார்கள்.

சுசீலாம்மா ஃபாத்திமாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்ட் நிகழ்வில் கிட்டத்தட்ட 220 மாணாக்கியர் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றியதில் பெரு மகிழ்வு.

நன்றி என்னை உரையாற்ற அழைத்த தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் லதா விஜய் அவர்களுக்கும் மற்றுமுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும், கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றுமுள்ள பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் பேரன்பும் பெரு நன்றியும். ஃபாத்திமா அன்னைக்கும் நன்றிகள்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...