எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 ஆகஸ்ட், 2022

ஆறுவது சினம் - ஒரு பக்கக் கதை

ஆறுவது சினம்

ஒரு காட்டுல இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஒன்றின் பெயர் சிங்கான். இன்னொன்றின் பெயர் ஷேர்கான். இரண்டுக்கும் நடுவில் எப்போதும் எல்லைத் தகராறு. இரண்டுமே தங்கள் தங்கள் பகுதிக்கு ராஜாவாக இருந்தன. ஆனால் ஒன்றின் எல்லையில் மற்றொன்று புகுந்து விலங்குகளை வேட்டையாடும். அதனால் இரண்டுக்கும் இடையில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுதான். 

“இனி என் பகுதிக்கு வந்தே நடக்குறதே வேற.” இதைக் கூறிய சிங்கான் தன் பக்கம் வெள்ளை நிறத்தில் எல்லைக்கோடு போட்டு வச்சுச்சு. ஷேர்கானும் தன் பகுதிக்குக் கறுப்பு நிறத்தில் எல்லைக்கோடு வரைஞ்சு வைச்சிச்சு.

ஒருமுறை சிங்கானின் பகுதியில் ஓடிய ஒரு கொழுத்த மானை ஷேர்கான் பார்த்துச்சு. அதன் நாவில் எச்சி ஊறியது.  உடனே எல்லைக்கோட்டைத் தாண்டி அந்த மானை வேட்டியாடித் தின்னுடுச்சு.

இதைப் பார்த்த சிங்கானுக்கு ஷேர்கானின் மேல படு கோபம் பிச்சிக்கிட்டு வந்திச்சி. ’தன் பக்கம் வந்ததுமில்லாம ஒரு கொழுத்த மானை வேற அடிச்சித் தின்னுடுச்சே.’ இரண்டும் காடே அதிர்றா மாதிரி கர்புர்ர்னு பயங்கரமாக உறுமிக்கிட்டே ஒண்ணுமேல ஒண்ணு பாய்ஞ்சு சண்டை போட்டுச்சுங்க.

ஒண்ணு உடம்புல இன்னொன்னு கீறி ரெண்டு சிங்கத்து மேலயும் இரத்தம் வடிஞ்சிச்சு. அதைப் பார்த்த இரண்டு பக்க மிருகங்களும் பயந்து ஓடுச்சுங்க. எல்லா விலங்கும் காட்டை விட்டு ஓடினதும் ரெண்டு சிங்கங்களுக்கும் உணவுக்குப் பஞ்சமாகிப் போச்சு.

காட்டையே சலிச்சு எடுத்தும் ஒரு சின்ன மிருகம் கூட இல்லை. ரெண்டும் ஓய்ஞ்சு போய் ஒரு மரத்தடியில பசியோட உக்காந்துச்சுங்க. அப்பவும் ”இந்தக் காட்டுக்கு நாந்தான் ராஜா, நாந்தான் ராஜா”ன்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்துச்சுங்க.

அப்ப மரத்து மேலேருந்து ஒரு பருந்து இந்த ரெண்டு சிங்கங்களையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிச்சு. “மிருகங்களே இல்லாத காட்டுக்கு ரெண்டு ராசாவா? மொதல்ல ஒங்க கோபத்தை அடக்குங்க. அப்பத்தான் எல்லா விலங்கும் காட்டுக்குள்ள வரும்” 

இதைக் கேட்டதும் ரெண்டு சிங்கத்துக்கும் வெக்கமாகிப் போச்சு. இரண்டும் இனிமே கோபப்படக்கூடாதுன்னு முடிவு பண்ணுச்சுங்க. அதுக்குப் பின்னாடி எல்லா விலங்கும் திரும்பக் காட்டுக்குக் குடி வந்தன. ரெண்டு சிங்கங்களும் சந்தோஷமா ஒத்துமையா இருந்தன.

எனவே ஆறுவது சினம். எந்த விஷயத்துக்கும் கோபம் கொள்ளுதல் கூடாது.

3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. கற்பனைக் கதை சிறுவர்களுக்கான அழகான கதை அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நன்றி கீத்ஸ்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...