எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 மே, 2013

சுசீலாம்மாவின் கடிதம்

சுசீலாம்மாவின் கடிதம்.

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது அருகி விட்டது. ஷார்ட் மெசேஜஸ்தான். குறுந்தகவல்கள். நீண்ட வாக்கியங்கள் பேசுவது கூடக் குறைந்து விட்டது. கம்யூனிகேஷனுக்குத் தேவையான வார்த்தைகள் மட்டுமே புழக்கத்தில் வந்துவிடும் என்று தோன்றுகிறது.

மொத்தமே 10 வார்த்தைகள்  போதும்.  ஆமாவா, மொக்கை, அவ்வ்வ்வ், கலக்கல் மாமு, வேணும், வேணாம், வரேன், வல்லை, பிடிக்குது . பிடிக்கலை.. இது மாதிரி மணிரத்னம் பட ஸ்டைல்ல பேச்சு குறைஞ்சுகிட்டே வருது எல்லார்கிட்டயும்.


லைக், கமெண்ட்ஸ். இது மட்டுமேதான் மிச்சமாகும். கமெண்ட்ஸிலும் ஒரு புன்னகை ஸ்மைலி, அழுகை ஸ்மைலி, வருத்த ஸ்மைலி.. ஒரு வேளை எல்லாரும் எண்ணங்களாலேயே பேசிக்கிறாங்களோ என்னவோ..மைண்ட் வாய்ஸ்.. :)

ஆனா என் கல்லூரியில் என் ஆசிரியை என் டைரிகள் இரண்டைப் படித்துவிட்டு எழுதிய கடிதம் இது. எவ்வளவு அழகா, சரளமா, இன்பமா இருக்கு  என்னிக்குப் படிச்சாலும். அமிர்தம் என்பார்கள்.. இது தேனாமிர்தம்.. எனக்கு வழங்கப்பட்டதல்லவா.. அதனால்.. நன்றிம்மா..

மானுடத்தின் மேன்மைகள், உன்னதங்கள் இவற்றைப் படைக்கவேண்டும் என்ற உத்வேகம் எழுகிறதம்மா.. ம்ம் என் முடிவுக்குள் அதைச் செய்துவிடுவேன் என்று நினைக்கிறேனம்மா. :)

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...